Kpy பாலாவுக்கு கொலை மிரட்டலா? உதவுவதற்கு பணம் இப்படித்தான் வருகிறது! அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: கேபிஒய் பாலா பலருக்கும் தொடர்ச்சியாக உதவிகளை செய்து வரும் நிலையில் அவருக்கு அரசியல் பிரபலங்கள் யாராவது கொலை மிரட்டல் விடுத்தார்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதறி போன பாலா அது குறித்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் ஒரு சிலர் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பலருக்கும் கொடுத்து அவர்கள் சந்தோஷப்படுவதை பார்த்து சந்தோஷப்படுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் என்னதான் உதவிகள் செய்தாலும் அது குறித்த விமர்சனங்களும் உதவுபவர்கள் மீது வருவது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது தான். அந்த வரிசையில் இப்போது கேபிஒய் பாலாவும் இடம் பிடித்திருக்கிறார்.

கேபிஒய் பாலா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களுக்கு என்டர்டைன்மெண்ட் கொடுத்த பாலாவிற்கு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையிலும் அடியெடுத்து வைத்து இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு பல திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா, இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கிவரும் பாலா தனக்கு கிடைக்கும் வருமானத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு எளியோருக்கு உதவி செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் சின்ன சின்னதாக செய்து வந்த பாலாவின் உதவி இப்போது பெரிய அளவில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. பாலா எவ்வளவு உதவி செய்து கொண்டிருக்கிறாரோ அதற்கு ஒரு பக்கம் பாராட்டுகளும் ஒரு பக்கம் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் அவர் கண்டு கொள்வதே கிடையாது.
இப்போது பாலா செய்யும் உதவியை பார்த்து லாரன்ஸ் நானும் உனக்கு உதவி செய்கிறேன். நீ சம்பாதிக்கிற பணம் முழுவதும் உதவி செஞ்சிட்டா உனக்குன்னு பாத்துக்க எதுவும் இல்லாமல் போய்விடும். அதனால் நானும் உனக்கு உதவியா வருகிறேன். நான் ஆரம்பத்தில் உதவி செய்யும் போது எனக்கு யாருமே துணைக்கு வரல. இப்போ பாலாவுக்கு நான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதுபோல லாரன்ஸ் தொடங்கிய மாற்றம் என்று சேவையிலும் பாலா இணைந்து இருக்கிறார். இப்படியான நிலையில் பாலா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது நீங்கள் தொடர்ச்சியாக உதவி செய்து கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு அரசியல் பிரபலங்கள் யாராவது கொலை மிரட்டல் விடுத்தார்களா? என்று கேட்க, அதற்கு பதறி போன பாலா, அய்யய்யோ நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் கிடையாது.
எனக்கு அப்படி எந்த மிரட்டல்களும் இதுவரைக்கும் வந்தது கிடையாது என்று கூறியிருக்கிறார். அதுபோல நீங்கள் ஆரம்பத்தில் செய்ததை விடவும் இப்போது அதிகமாக உதவி செய்கிறீர்களே இதுக்கு உங்களுக்கு யாராவது ஹெல்ப் பண்றாங்களா? என்று கேட்க அதற்கு பாலா, ஆரம்பத்தில் நான் சம்பாதிப்பதில் உதவி செய்தேன். இப்போது உதவி செய்வதற்காக அதிகமாக ஓடி ஓடி சம்பாதிக்கிறேன் அவ்வளவுதான்... என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இதற்கு அதிகமானோர் பாலாவை பாராட்டி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications