Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க சொல்றீங்க... வெண்ணிலா விரதம் இருந்தப்போ அஞ்சு தலை பாம்பு வந்துச்சா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் அஞ்சு தலை பாம்பு வந்துச்சுன்னு குழந்தைங்க ஆசையா பார்க்கறாங்க. பாம்பு கதைன்னா பெரியவங்களுக்கே புடிக்கும். குழந்தைங்க பத்தி சொல்லனுமா?

சீரியலின் பேரு யாரடி நீ மோகினி. அதுக்கு தகுந்த மாதிரி ருத்ரா குழந்தையோட அம்மா செத்து நல்ல பேயா வராங்க. அவங்க தங்கச்சிதான் வெண்ணிலா. இவங்கதான் அக்கா குழந்தையை தாயா இருந்து பார்த்துக்கறாங்க.

இதே போல மாமாவுக்கும், அவங்க குடும்பத்துக்கும் பணிவிடை செய்துகிட்டு இருக்காங்க. ஒரு மலைக்கு மலை வாழ் மக்கள் திருவிழாவுக்கு போயிட்டு வருகையில் ருத்ராவை பாம்பு கடிச்சுருது.

ருத்ரா

ருத்ரா

ஆத்தா பாதத்தில் குழந்தை ருத்ராவை கடத்தி, தாயே காப்பாத்துன்னு கதறி அழறா வெண்ணிலா. நல்ல பேயா வரும் ருத்ராவின் அம்மா செய்வதறியாது இருக்கேன்...என் குழந்தையை காப்பாத்திரு தாயின்னு கதறி அழறா.வெண்ணிலாவும் என் குழந்தையை காப்பாத்துன்னு கதறி அழுகிறாள்.

செய்வதறியாது

செய்வதறியாது

ருத்ராவின் தந்தை என்ன செய்யறதுன்னு தெரியாம நிக்க, ஒரு சாமியார் வந்து கடுமையான விரதம் இருந்து நான் சொல்றதை செய்தா குழந்தையை கடிச்ச பாம்பு திரும்ப வந்து விஷத்தை எடுத்துரும். ஆனா, உன்னால முடியாதும்மான்னு சொல்றார்.

சொல்லுங்க

சொல்லுங்க

என்னால எவ்ளோ கடுமையான விரதம்னாலும் முடியும் தயவு செய்து என்ன செய்யணும்னு சொல்லுங்க சாமி. எனக்கு என் குழந்தை பிழைக்கணும்னு கதறி அழறா வெண்ணிலா. திரும்பவும் மலை ஏறி போயி, அங்க வசிக்கும் மக்கள் கிட்ட பால் வாங்கி அண்டாவுல தலையில சுமந்துக்கிட்டு செருப்பில்லாம நடந்து வரணும்.

தீச்சட்டி

தீச்சட்டி

தலையில் கொண்டு வந்த பாலை இறக்கி வச்சுசிட்டு, ரெண்டு கையிலயும் தீச்சட்டி ஏந்தி, முட்டி போட்டு கோயிலை சுத்தி வரணும்.பாம்பு தானா வந்து விஷத்தை எடுத்துரும்னு சொல்றார்.

பால் அண்டா சுமந்து

பால் அண்டா சுமந்து

சாமியார் சொன்னது போல அண்டாவில் பாலை சுமந்து மலையில் இருந்து இறங்கி வருகையில், காலில் முள் குத்தி, வெண்ணிலா கஷ்டப்படறா. இது மூட நம்பிக்கை, ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போன ருத்ரா பொழைச்சுக்குவான்னு அக்கா புருஷனிடம் ஒரு பெண் சொல்கிறாள். எனக்கு நம்பிக்கை இருக்கு, என் குழந்தை பொழைச்சுக்கும்னு என அவனும் சொல்றான்.

அஞ்சு தலை பாம்பு

அஞ்சு தலை பாம்பு

விரதம் முடிக்கையில் அஞ்சு தலை பாம்பு வருது. தானே ருத்ராவின் காலில் கடித்த விஷத்தை எடுக்குது. அனைவரும் சிலிர்த்து நிற்க பாம்பு சென்றுவிடுகிறது. குழந்தை பிழைத்துக்கொள்ள பெண்கள் குலவை சத்தம் போடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+