ஸ்ரீராமருக்கு இவ்ளோ கோபம் வருமா?
சென்னை: சன் டிவியின் ஜெய் அனுமான் சீரியலில் சீதையை ராவணன் லங்கைக்கு கடத்தி சென்று விடுகிறான்.
எந்த வழியாக சீதையை ராவணன் கடத்தி சென்றான் என்று ஆராய்ந்ததில் சீதையின் நகைகள் சிந்திய இடங்கள் காடு மேடு என்று தேடி அலைந்ததில் தனது புஷ்பக விமானத்தில் கடல் தாண்டி உள்ள லங்கைக்குத்தான் கடத்தி சென்றுள்ளான் என்பது உறுதியாகிறது.
அன்னை சீதா தேவியை காண லங்கைக்கு சென்று திரும்பி வந்த அனுமனும் ,சீதையை ராவணன் சிறைப்பிடித்து அசோகவனத்தில் வைத்துள்ளதை கண்டறிந்து வந்து சொல்கிறான்.

இனி அடுத்தது
இனி அடுத்தது என்ன என்று ஸ்ரீராமனும் லட்சுமணனும் யோசிக்கையில் ராவணனுடன் லங்கை சென்று யுத்தம் செய்தாவது சீதையை மீட்டு வர முடிவு செய்கிறார்கள், சுக்ரீவன்,நளன், வானரப் படைகள் என்று ராமருக்கு உதவி செய்ய படையாகத் தயாராகின்றனர்.

வானரன் அனுமன்
அனுமன் வானரன் என்பதால் இந்த சமுத்திரத்தை கடந்து சென்றுலங்கையை அடைவது என்பது சாத்தியமாயிற்று.நாம் வெறும் மனிதப் பிறவிகள்தானே லட்சுமணா.... நம்மால் சமுத்திரத்தை எப்படி கடக்க இயலும் எனும்போது, அனுமன் தங்களின் நாமத்தை சொல்லியே பல இன்னல்களை நான் கடந்தேன்..தங்களின் திருநாம சக்தி தாங்கள் அறியாதது அல்லவே பிரபு என்று கூறுகிறான்.

சரி சமுத்திர ராஜனை
சரி சமுத்திர ராஜனை அழைத்து, நாம் அனைவரும் படையாக லங்கைக்கு செல்ல வழிவிட கேட்போம் என்று ராமர் சமுத்திர ராஜனை அழைக்க பூஜை செய்கிறார். நாழிகைகள் கடந்தும் சமுத்திர ராஜன் வரவில்லை. .

பூஜையில் திருப்தியில்லையா
நான் செய்த பூஜையில் ஏதும் தவறு நிகழ்ந்துவிட்டதா... எனது பூஜையில் திருப்தி இல்லையா என்று கோபமுற்ற ஸ்ரீராமர், அதே கோப முகத்துடன் இனி பொறுப்பதற்கில்லை.. .நானும் என் வில்வித்தையை சமுத்திர ராஜனிடம் காமிக்கிறேன் என்று வில்லை ஏந்துகிறார்.

பிரபு வேணாம்
வேண்டாம் பிரபு...தங்களுக்கு இந்த கோபம் . ஆகாது..நான் அழைத்த போதே சமுத்திர ராஜன் நேரில் வந்து எனக்கு அருள் பாலித்தார். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பிரபு என்று அனுமன் ராமன் முன் மண்டியிட்டு கேட்க....

தரிசனம் தருகிறார்
சமுத்திர ராஜன் தரிசனம் தருகிறார். தாமதத்துக்கு மன்னிக்கவும் பிரபு ஸ்ரீராமரே...உங்களின் கோரிக்கை பற்றி யோசித்துக் கொண்டு இருந்ததின் விளைவே இந்த தாமதம். நீங்கள் உங்கள் படைகள் செல்ல சமுத்திரத்தை பிரித்து வழிவிட வேண்டும் என்று கேட்டீர்கள்.

இது அனைத்து
ஆனால், இது அனைத்து கிரகங்களின் நிலை மாற்றத்துக்கும் காரணமாகி விடும்.எனவே அதைப்பற்றி யோசித்தால்தான் இந்த தாமதம் பிரபு. இது சாத்தியமில்லை என்பதால் வேறு வழி குறித்து யோசிக்க வேண்டும் .அதோடு சமுத்திரத்தை கடப்பது என்பது உங்கள் இருவருக்கு மட்டும்தான் கஷ்டமாக இருக்கும்.உங்களுடன் இருக்கும் வானர படைகளுக்கு கஷ்டம் இருக்காது பிரபு என்றும் சமுத்திர ராஜன் கூறுகிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications