சமந்தாவின் தங்க நகையா அது? சோபிதா கழுத்தில் அச்சு அசல் அதே நெக்லஸ்? ஆஹா, இப்படியொன்னு கிளம்பிருச்சா?
சென்னை: நடிகை சோபிதா திருமணத்தில் அணிந்திருந்த நகை சமந்தாவினுடையதா? என்று ரசிகர்கள் திடீரென கேள்வி எழுப்பிவிட்டார்கள். இந்த கேள்வி இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றிருந்த நிலையில், அதற்கான விடை தற்போது வெளியாகியிருக்கிறது.
நாக சைதன்யா, சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், ஒருசில மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்றனர்.. இதற்கு பிறகு, நடிகை சோபிதாவுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்த நாக சைதன்யா, தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணம்: இந்த திருமணம் பிரமாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது.நேற்று முன்தினம் இரவு 8 மணி 13 நிமிடம் மணி அளவில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த திருமணம் நடைபெற்றது. இதில், இரு வீட்டினுடைய சொந்தங்களும் திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் சோபிதாவின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை கவர துவங்கிவிட்டன.. எனினும், நெட்டிசன்கள் சிலர், சோபிதாவின் நகைகளை பார்த்து ஒரு செகண்ட் ஆச்சரியப்பட்டு போனார்கள்.. "சோபிதா அணிந்திருக்கும் நகைகளும், திருமணத்தின்போது சமந்தா அணிந்திருந்த நகைகளும் ஒரே மாதிரி இருக்கிறதே" என்று சந்தேகம் கிளப்பினார்கள்.
நகைகள்: ஆனால், சந்தேகத்தை கிளப்பிய நெட்டிசன்களே இதற்கு பதிலையும் சொல்லியிருக்கிறார்கள்.. ''இரண்டு நகையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், டிசைன் வேற வேற மாதிரியாக இருக்கிறது" என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்..
அதேபோல, சோபிதாவின் கல்யாண புடவையும் நெட்டிசன்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.. சமந்தா தன்னுடைய திருமணத்தின்போது, வெள்ளை நிறம் கலந்த தங்கப்புடவையை அணிந்திருந்தார்... அதற்கு ஏற்றவாறு மாம்பழ டிசைன் நெக்லஸும் அணிந்திருந்தார். சோபிதாவும் தங்க கலர் கல்யாண புடவையும், அதற்கு மேட்சிங் ஆக சில நகைகளையும் அணிந்திருந்தது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதாக சொல்கிறார்கள்.
ஒரே ஒரு நகை: ஆகமொத்தம், சோபிதா அணிந்திருந்த நகைகளில் ஒரு நகை மட்டும் சமந்தா அணிந்திருந்த நகையை போன்று இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்திருந்த நிலையில், அது சமந்தாவின் நகை இல்லை என்று உறுதியாகிவிட்டது. ஆனால், அந்த ஒரே ஒரு தங்க நகை மட்டும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறதாம்.
நாக சைதன்யா - சோபிதா திருமணம் நடந்தபோது, சமந்தா - சைதன்யா இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட போட்டோவும் இணையத்தில் அதே நாளில் பரவ தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications