நயன்தாராவின் குறி ரெஜினா? சூப்பர் ஸ்டார் பட்டத்தை விசிறி எறிந்தாரே.. காரணமே விடாமுயற்சி போல: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மூக்குத்தி அம்மன் 2 படத்தை பற்றியே பல்வேறு வதந்திகள் சுற்றி வருகிறது. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நல்லபடியாக நடந்துக் கொண்டிருக்கிறது. சுந்தர்.சி, நான்சென்ஸான நபர் கிடையாது என அனைவருக்கும் தெரியும். நயன்தாரா தேர்ந்த நடிகர். அவர் அனைத்திற்கும் தகுதியானவர் என் நிரூபித்திருக்கிறார். அவர் முன்பு நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. இந்த வதந்திகளெல்லாம் திருஷ்டி எடுத்தது மாதிரிதான்" என்று குஷ்பு பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "மூக்குத்தி அம்மன் 2 பட விவகாரம் இன்னும் ஓயவில்லை.. முதல் நாள் ஷூட்டிங்கில், உதவி இயக்குனரை நயன்தாரா திட்டியதாகவும், இதைக் கேள்விப்பட்ட சுந்தர் சி, என்னுடைய உதவியாளரை எப்படி திட்டலாம் என்று கேட்டு கோபித்து கொண்டதாகவும், இதனால் ஷூட்டிங் ஆரம்பித்ததுமே நின்றுவிட்டதாகவும் செய்திகள் பரபரபத்தன.

Television Regina Cassandra Nayanthara

குஷ்புவின் கண்திருஷ்டி

உடனே குஷ்பு, அப்படியெல்லாம் எதுவுமில்லை, பூஜையிலிருந்து இப்போதுவரை, வெளியாகும் வதந்திகளுக்கு காரணம் "கண் திருஷ்டிதான்" என்று கூறியிருக்கிறார். அப்படி கண் திருஷ்டி பட்டிருந்தால், உலகத்திலுள்ள கண் திருஷ்டிகள் எல்லாம் ராஜமௌலி படங்கள் மீதுதான் விழணும். கண் திருஷ்டி என்று குஷ்பு சொல்லியிருப்பது, இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.

அன்றைய காலத்தில், அம்மன் படங்களில் நடிக்கும் கேஆர் விஜயா உள்ளிட்ட நடிகைகைள், 3 வேளை விரதம் இருக்கிறார்கள், மண் சோறு சாப்பிடுகிறார்கள், தரையில் பாய் போட்டு படுக்கிறார்கள், அசைவ உணவு தவிர்க்கிறார்கள்" என்றெல்லாம் அன்று சினிமா பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகும். இன்னும் சொல்லப்போனால், அம்மன் வேடத்தில் நடிப்பவர்கள் மாதவிலக்கு சமயத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் செய்திகள் வெளியாகும். இதெல்லாம் உண்மையாகவும் இருக்கலாம்.

ஆட்டுமூளைக்காரர்கள்

ஆனால், மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு கண் திருஷ்டியோ, சாமி குத்தமோ எதுவுமே கிடையாது.. நீ பெரியவளா? நான் பெரியவளா? என்று ஆரம்பித்து ஈகோ என்ற விஷயம்தான் இன்றுவரை வெடித்து வளர்ந்து வந்துள்ளது..

அந்த பூஜை விழாவில் மீனாவை நயன்தாரா அவாய்ட் செய்ததாக சொன்னார்கள். உடனே "ஆட்டுமூளைக்காரர்கள்" என்ற ரீதியில் மீனாவும் ஒரு பதிவு போட்டிருந்தார். ஒரு ஆடு எந்த பக்கம் போகுதோ, அதே பக்கம்தான் மற்ற ஆடுகளும் போகும்.. நுனிப்புல்லை மேயும். இதைதான் ஆட்டுமூளைக்காரர்கள் என்பார்கள்.. ஆனால், மீனா யாரை சிங்கம் என்கிறார்? யாரை ஆடு என்கிறார் தெரியவில்லை.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

எனினும் மீனா மீது நயன்தாரா காட்டிய கோபம் இல்லை, இது ரெஜினா மீது நயன்தாரா காட்டிய கோபம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. இதற்கு காரணம் சமீபத்தில் வெளியாகியிருந்த விடாமுயற்சி படம்..

அந்த படத்தில் அஜித்துக்கு இணையாக, திரிஷாவைவிட அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருந்ததை ஒட்டுமொத்த பேரும் பாராட்டினார்கள். இந்த விமர்சனம்தான் நயன்தாராவால் தாங்கி கொள்ள முடியவில்லை . அதனால்தான், எப்படி என்னை செல்ஃபி எடுக்கலாம்? என்னதான் லேடி சூப்பர் பட்டம் தனக்கு வேண்டாம என்று நயன்தாரா அறிவித்தாலும், லேடி சூப்பர் ஸ்டார் என்ற குணம் நயன்தாராவிடம் உள்ளது, அந்த குணத்தின் வெளிப்பாடுதான் இப்படி விஸ்வரூபமெடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+