விஜய் பற்றி விஜய் சேதுபதி பேசினாரா? EVPக்கு வந்தால் என்ன ஆகும்? கொந்தளித்த கூல் சுரேஷ்! மடக்கிய ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசியதுதான் இப்போ பஞ்சாயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த இந்த சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் ஆன பிறகும் இது பற்றிய விவாதம் மட்டும் குறையவே இல்லை. விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் விஜய் பெயரை எந்த இடத்திலும் சொல்லவில்லை என்றாலும் கூல் சுரேஷ் இப்போ விஜய் ரசிகர்கள் இவிபி செட்டுக்கு வந்தால் என்ன ஆகும் தெரியுமா? என்று கொந்தளித்து பேசியது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

படம் ப்ரமோஷனுக்கு போனாலே கூல் சுரேஷ் நரம்புகள் புடைக்க கொந்தளித்து தான் பேசுவார். இப்போ அவருக்கு ஒரு கன்டென்ட் கிடைத்துவிட்டால் சும்மா விடுவாரா? பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்தேன்... அந்த நிகழ்ச்சி ஒரு எச்சை நிகழ்ச்சி.. அந்த நிகழ்ச்சிக்கு யாரும் போகக்கூடாது.. அந்த நிகழ்ச்சி தடை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் கூல் சுரேஷ் மீது இன்னும் விஜய் டிவி எந்த ஆக்சனும் எடுக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு கேள்வியாக தான் இருக்கிறது.

கூல் சுரேஷ் பேச்சு

இந்த பஞ்சாயத்து மட்டுமல்லாமல் இப்போதே புது பஞ்சாயத்திலும் கூல் சுரேஷ் சிக்கி இருக்கிறார். அதாவது கடந்த வார சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசினார். அந்த வார தலைவராக இருந்த ஷாதிகா திடீரென பதவியை விட்டு விலகியது குறித்து விமர்சனம் செய்திருந்தார். ஆனால் அவர் பேசியது விஜய்யை பற்றி தான் என்று சிலர் கிளப்பி விட உடனே விஜயின் ரசிகர்கள் அதைப் பிடித்து விஜய் சேதுபதியை அடிக்க தொடங்கி விட்டார்கள்.

Cool Suresh Vijay Sethupathi Vijay

விஜய் சேதுபதி மீது அட்டாக்

நான்கு நாட்களாக இந்த பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே நானும் கருத்து சொல்ல வரேன் என்று கூல் சுரேஷ் இப்போது வந்து விட்டார். வழக்கம் போல பிரமோஷனில் எப்படி பேசுவாரோ அதேபோலத்தான் இப்போதும் பேசி இருக்கிறார். விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் பற்றி பேசினாராமே... அவர் இப்ப முதல்வரை பற்றி பேசி இருக்கிறார், இனி பிரதமரை பற்றி பேசுவாரா? அதனாலதான் சொல்லுறேன் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். விஜய் பற்றி பேசியதற்கு விஜய் ரசிகர்கள் எல்லாம் நாளைக்கு ஈவிபி செட்டுக்கு வந்துட்டா என்ன பண்ணுவீங்க விஜய் சேதுபதி? என்று மிரட்டுற மாதிரியே கூல் சுரேஷ் கேட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் தடை செய்யணுமாம்

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நானும் சாப்பிட்டு இருக்கேன். அதனால சொல்லுறேன், அந்த எச்ச நிகழ்ச்சியில் என்ன நடக்கும்னு எனக்கு தெரியும். இந்த வார்த்தைகள் எல்லாம் விஜய் சேதுபதி பேசியிருக்க வாய்ப்பே இல்லை. அவர் காதில் ஓதிக்கிட்டு இருப்பாங்க. அதில் தான் சொல்லி இருக்காங்க. இதுதான் பேசுங்க, இதை இப்படி சொல்லுங்க என்று அவங்க என்ன சொல்லிக் கொடுத்தார்களோ அதை தானே விஜய் சேதுபதி பேசியிருப்பாரு. அப்படித்தான் இந்த கதை கூட வந்திருக்கோம்.

ரசிகர்கள் கேள்வி

அதனால இதற்கு சரியான ஆக்சன் எடுக்க வேண்டும் என்று அவர் கொந்தளித்து பேச, இதை வைத்தே பலர் அவரை கலாய்த்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் விஜய் பெயரை விஜய் சேதுபதி எந்த இடத்திலும் சொல்லவில்லை... அப்படி இருக்கும்போது நீங்கள் இவ்வளவு பதட்டமடைவதற்கு காரணம் எங்கள் விஜய் இப்படித்தான் என்று நீங்கள் சொல்லுறீங்களா? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இன்னும் ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன் என்று சொல்லுறீங்க அப்புறம் அந்த நிகழ்ச்சியை தடை பண்ணவேண்டும் என்று சொல்லுறீங்களே இது என்ன மாதிரியான மனநிலை என்று அவரிடமே பல கேள்வி எழுப்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+