Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சன் டிவி சீரியல்களில் நடக்கும் "சத்தமில்லாத புரட்சி!" கோவில் காட்சிகள் வரும்போது கவனித்து பாருங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல வருடங்களாக சின்ன திரையில் முன்னணியில் இருக்கும் சன் டிவியில் சீரியலில் நடக்கும் "மறைமுக புரட்சியை" யாரேனும் கவனித்து இருக்கிறீர்களா?

பொதுவாக சன் டிவியில் சீரியல் காட்சிகளில் அதிகமான ஜோதிடர் பரிகார காட்சிகளும், மந்திர தந்திர காட்சிகளும் இருப்பதாக ரசிகர்களின் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறது. திமுக குடும்பத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி குழுமம் இப்படி காட்டியிருக்க கூடாது என்ற குமுறல்களையும் திமுக ஆதரவாளர்கள் ஒரு காலத்தில் சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வந்தனர்.

ஆனால் அதே நேரத்தில் சத்தமே இல்லாமல் சன் டிவி இப்போது திராவிட புரட்சி செய்து வருகிறது.

Do you noticed sun tv serials showing Tamil Mantra instead of Sanskrit in Temple Pooja scenes

சன் டிவி: தொலைக்காட்சி பிரபலமாக தொடங்கிய காலகட்டத்தில் இருந்து சன் டிவி நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அதிகமான வரவேற்பை பெற்றுவிட்டது. ஆரம்ப காலகட்டத்தில் அரசு கேபிள் சேனல்கள் மட்டுமே டிவிகளில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் முதல் முறையாக சன் டிவி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கப்பட்டது.

திமுக குடும்பம்: இது திமுக குடும்பத்தை சார்ந்தது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். மறைந்த முதல்வர் கருணாநிதியின் சகோதரி மகன் முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் சன் டிவியை தொடங்கினார். சன் டிவி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் வெகு வேகமாக புகழடையத் தொடங்கியதற்கு அதில் ஒளிபரப்பாகும், சீரியல்கள், பட்டிமன்றங்கள், டான்ஸ் நிகழ்ச்சிகள் என பல காரணங்கள் உள்ளன. ஆரம்ப காலகட்டத்தில் ராஜ் டிவி, தூர்தர்ஷன் போன்றவைதான் இந்த சேனலுக்கு போட்டி. அதை ஊதித் தள்ளிவிட்டது சன் டிவி. தற்போது சன் டிவிக்கு பல போட்டியாளர்கள் உள்ளனர்.

தனி ரசிகர் கூட்டம்: கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சன் டிவியில் மட்டுமே சீரியல் பார்க்கும் ரசிகர்கள் இப்போதும் அதிகமாக இருக்கிறார்கள். புதிது புதிதாக எத்தனையோ சேனல்கள் பல சீரியல்களை அறிமுகப்படுத்தினாலும் சன் டிவி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.ஆனாலும் சன் டிவி சீரியல்களில் அதிகமான மூட நம்பிக்கைகளை உருவாக்கும் விதமான கதை இருப்பதாகவே பல நேரங்களில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

மூட நம்பிக்கைகள்: சன் டிவி திராவிட கொள்கைகளை பின்பற்றும் குடும்பத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும் சில சீரியல்களில் அபத்தமான காட்சிகள் இடம் பெறுகிறது என்பது பலருடைய கருத்து. அதற்கு உதாரணமாக நந்தினி, நாகினி சீரியல்களை கூறலாம். இந்த காலகட்டத்திலும் பாம்பு, பேய் போன்றவற்றை வைத்தே ஒரு கதையை உருவாக்கி அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த விதம்தான் வேடிக்கையாக இருந்தது.அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் பல சீரியல்களில் சின்ன பிரச்சனை என்றால் கூட ஹாஸ்பிடலுக்கு செல்வது கிடையாது. உடனே கோவிலுக்கு சென்று அங்கு அங்கபிரதட்சணம், மண் சோறு சாப்பிடுவது போன்ற பல வேண்டுதல்களை போட்டு குணமாகி விடுகிறார்கள். இது குறித்தும் அவ்வப்போது சர்ச்சைகள் எழும்பி கொண்டிருக்கிறது.

தமிழ்: ஆனால் எத்தனையோ சர்ச்சைகள் வந்து கொண்டிருந்தாலும் டிஆர்பி அளவில் சன் டிவி சீரியல்கள் தான் டாப் 5 இடங்களை பிடித்து விடுகிறது. இந்த நிலையில் சன் டிவி சீரியல்களில் கோவில் காட்சிகளில் "தமிழில்" மந்திரம் சொல்லப்படுகிறது. இதை பலரும் கவனித்திருக்க மாட்டீர்கள். குறிப்பாக அம்மன் கோயில் என்றால் அங்கே பூஜை நடக்கும்போது அர்ச்சகர்களால் அபிராமி அந்தாதி பாடப்படுகிறது. விநாயகர், முருகன் கோவில்கள் என்றால், சாமி பெயரை சொல்லி, போற்றி போற்றி என்று அர்ச்சகர் மந்திரம் சொல்கிறார்.

சமஸ்கிருதம்: சென்னை போன்ற பெரு நகரங்களில் கோவில்கள் பலவற்றில், அர்ச்சனை சமஸ்கிருதத்தில் செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது திமுக கட்சியின் கொள்கையாகவும், திராவிடர் இயக்கத்தினர் கோரிக்கையாகவும் உள்ளது. சன் டிவி சேனலில் தமிழ் அர்ச்சனை காட்சி முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் சன் டிவி சீரியல்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வதை பார்க்க முடியும். ஆனால் சமீப காலமாக சத்தமின்றி தமிழ் அர்ச்சனை என்பது முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் அறிவுறுத்தலில் இது நடக்கிறதா, அல்லது இயக்குநர்களே சன் டிவி என்பதால் அவ்வாறு காட்சியமைக்கிறார்களா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+