“விஜய் இப்படி செய்வார்னு எதிர்பார்க்கல!” மக்களும் இதை சொல்றாங்க.. தாடி பாலாஜி வீடியோ
சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நடிகர் விஜய் தொடர்ந்து அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான தாடி பாலாஜி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
விஜய்யின் தீவிர ரசிகராக நீண்ட காலமாக இருந்து வந்த தாடி பாலாஜி, விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர். அதுமட்டுமல்லாமல், தனது நெஞ்சில் விஜய்யின் உருவத்தை பச்சைக் குத்திக்கொண்டு, அவர் தொடங்கிய கட்சியில் இணைந்ததும் பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர் சில மனக்கசப்புகள் காரணமாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும், "என்னுடைய ஆதரவு எப்போதும் விஜய்க்கு இருக்கும்" என்று பலமுறை கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் முதலமைச்சர் விஜய்யை வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார்.

தாடி பாலாஜி வீடியோ
அந்த வீடியோவில் தாடி பாலாஜி பேசும்போது, "விஜய் சார் இப்படி செய்வார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. நான் மட்டும் இல்லை, மக்களும் இதை எதிர்பார்க்கலை. அவர் பதவியேற்ற முதல் நாளிலிருந்து தொடர்ந்து அதிரடியான விஷயங்களை செய்து கொண்டே இருக்கிறார். பெரியவர்கள் மட்டும் இல்ல, குழந்தைகளுக்கும் ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
விஜய் செய்த சாதனை
முன்பெல்லாம் செய்திகளை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மட்டும்தான் பார்ப்பார்கள். ஆனால் இப்போ நிலைமை அப்படி இல்ல குழந்தைகள் கூட செய்தி பார்க்க தொடங்கி விட்டார்கள் அதிலும் குழந்தைகளும் அரசியல் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் இது பெரிய விஷயம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர், "சில விஷயங்களை நம்மால செய்ய முடியுமா என்று பலர் நினைப்பார்கள். ஆனால் யாராலும் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விஜய் கொடுத்திருக்கிறார்" என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக அமைச்சரவை அமைப்பில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பதை தாடி பாலாஜி பெரிய சாதனையாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பதவி
"எம்எல்ஏ பதவி கொடுப்பது ஒரு விஷயம். ஆனால் அமைச்சர் பதவி கொடுப்பது பெரிய விஷயம். இதுவரைக்கும் இப்படியொரு முடிவு நடந்திருக்கிறதா? எல்லா சமூகத்தினராலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதை விஜய் நிரூபித்திருக்கிறார். அதனால்தான் மக்கள் இவரை தேர்ந்தெடுத்தது தவறில்லை என்று சொல்றாங்க" என்று தெரிவித்துள்ளார். அதோடு, "நான் எப்போதும் சொல்வது போல உங்களுக்கு என்னுடைய முழு ஆதரவு எப்போதும் இருக்கும் சார்" என்றும் தாடி பாலாஜி கூறியுள்ளார்.
ரசிகர்கள் கருத்து
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. "கட்சியிலிருந்து விலகிய பிறகும் விஜய்க்கு இப்படி ஆதரவு கொடுக்கிறாரே" என்று சிலர் பாராட்ட, "மீண்டும் இணைவதற்கான சிக்னலா?" என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் சூழலில், தாடி பாலாஜியின் இந்த ஆதரவு வீடியோ அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன?












Click it and Unblock the Notifications