தளபதி விஜய்யையும் விட்டுவைக்காத... அஸ்வின் கோபியா... மீம்ஸ்களில் மாட்டிய புது நபர்
சென்னை: ஒரு பெர்மனன்ட் மீம்ஸ் கண்டன்ட் ஆகவே மாறிப்போன அஸ்வினின் பேச்சுகள் தற்பொழுது தளபதி விஜயின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் பேட்டியுடன் சம்பந்தப்படுத்தி மீம்ஸாக சமூக வலைதளங்களில் வைரலாய் பரவி வருகிறது.
என்ன சொல்ல போகிறாய் படம் வெளிவந்து பல்வேறு விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தாலும், அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அதன் ஹீரோ அஸ்வின் பேசிய பேச்சை இன்னும் நெட்டிசன்கள் விடுவதாக இல்லை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி க்ரஷ்
உலக சினிமாவிலேயே தன்னுடைய முதல் படம் வருவதற்கு முன்பே "ஸ்லீப்பிங் ஸ்டார்""என்று அடைமொழியோடு அழைக்கப்பட்ட ஹீரோ கண்டிப்பாக அஸ்வின் ஆக மட்டும் தான் இருக்க முடியும்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் திடீர் க்ரஷ்ஷாக மாறிப்போன அஸ்வின், சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல்.. தன் பட பாடல் வெளியீட்டு விழாவில் எக்குத்தப்பாக பேசி தன் இமேஜை பெரிதளவு டேமேஜ் செய்து கொண்டார்.

நெட்டிசன்கள் விடுவதாக இல்லை
அந்த சம்பவத்தோடு இணையவாசிகளின் வலையில் விழுந்த அஸ்வினை அவர்கள் இன்னும் விடுவதாக இல்லை. தினம் தோறும் வரும் செய்திகளில் ஏதாவது ஒரு செய்திக்கு அஸ்வினை பயன்படுத்தி மீம்ஸ் போடுவதை நெட்டிசன்கள் தொடர்ந்து வருகின்றனர்.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் அவர்கள் அடுத்த படமாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் வெளிவர இருக்கிறது.அதை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

டில் ராஜுவின் பேட்டி
மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இத்திரைப்படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து விஜய் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது.அப்படித்தான் புதிய படத்தின் தயாரிப்பாளர் டில் ராஜுவின் சமீபத்திய படம் பற்றிய பேட்டி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் நம்ம நெட்டிசன்கள் அதை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஏக்கத்தோடு பார்க்கும் மீம்ஸ்
புதிய படத்தின் கதையை கேட்ட விஜய் தான் இருபது வருடங்களில் இதைப் போன்று கதையை கேட்டதில்லை என்றும், தற்போது தான் ஒரு நல்ல கதையை கேட்டு இருப்பதாகவும் ஆச்சரியமாக கூறியதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியதை கண்டன்டாக எடுத்துக்கொண்ட நம்ம நெட்டிசன்கள், வெறும் நாலு மாசம் 40 கதைக்கு தூங்குன நமக்கே இந்த நிலைமைனா..!!??? இருபது வருஷம் நல்ல கதைக்கு வெயிட் பண்ண தளபதி விஜய்க்கு என்ன நிலைமையோ..!!?? என்று ஏக்கத்தோடு பார்க்கும் படி ஒரு மீம்ஸ் உருவாக்கி வைரல் ஆகி விட்டனர். வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ரசிகர் சண்டை போடுபவர்கள் தளபதி விஜயின் இந்த மீம்ஸை வைரலாக்கி வருகின்றனர்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications