கூடிய சீக்கிரத்தில் அது நடக்கும்..யார் வந்தாலும் நிலைமை இது தான்..ரட்சிதாவோடு பிரிவா?தினேஷ் விளக்கம்
சென்னை: நடிகை ரட்சிதாவை விவாகரத்து செய்யப் போகிறாரா என்ற வதந்திகளுக்கு அவருடைய கணவர் தினேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
கூடிய சீக்கிரத்தில் நிலைமை எல்லாம் சரியாக மாறிவிடும் என்று தினேஷ் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
ரட்சிதாவின் உண்மை கேரக்டர் பற்றி வெளியே தெரியாத பல தகவல்களை தினேஷ் கூறியிருக்கிறார்.

காதல் திருமணம்
சின்னத்திரை நடிகர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு ஆரம்பத்தில் வித்திட்டவர்களில் ஒருவர்தான் சின்னத்திரை நடிகை ஆன ரட்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் கார்த்திக். இவர்கள் இருவரும் முதல் சீரியலில் பழக்கமாகி அதே சீரியலில் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். ரட்சிதா மகாலட்சுமிக்கு திருமணத்திற்கு பிறகு அமோகமான சின்னத்திரையில் அதிர்ஷ்டம் அடித்துக் கொண்டிருந்தது. அவருடைய திறமைக்கு தகுந்த அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருந்தது.

பிரிந்த தம்பதி
தொடர்ந்து பல சீசன்களில் மீனாட்சியாக சரவணன் மீனாட்சி சீரியலில் ரட்சிதா மகாலட்சுமி கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய கணவரும் ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஏற்படப் போவதாக சில தகவல்களும் பரவி வருகிறது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தினேஷ் ஒரு பேட்டியில் பல தகவல்களை கூறி இருக்கிறார்.

காரணம் இதுதானா
அதில் ரட்சிதா வேலை விஷயத்தில் ரொம்பவும் கான்ஃபிடண்டாக இருப்பாங்க. வேலைன்னு வந்துட்டா ஓடிக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு நடுவுல எவன் வந்தாலும் செத்தான். ஒருவேளை என்னால அவங்களுக்கு ஈடு கொடுக்க முடியலன்னு நான் நினைக்கிறேன். அதனால கூட எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். குடும்ப பிரச்சினை எல்லாருடைய வீட்டிலும் நடப்பது தான் அதை மாற்றுவது காலமும் நேரமும் தான். அந்த டைம் ப்ராசஸ்ல தான் நாங்க இப்போ இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

திடீர் பிரச்சனைகள்
சின்ன பிரச்சனைகளையும் காலம் மாற்றி அமைக்கும் அதுபோல சீக்கிரத்தில் எல்லாம் மாறிவிடும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ரட்சிதாவை யாராலும் சாதாரணமாக எடை போட முடியாது. ஆரம்பத்தில் எங்களுடைய வாழ்க்கையிலும் அழகான அடுத்தடுத்து திருப்பங்கள் வந்து கொண்டே இருந்தது. அதற்குப் பிறகு எல்லோருடைய வாழ்க்கையிலும் வருவது போன்று சில பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது. அது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

எல்லாம் எங்களுக்கு தெரியும்
ரட்சிதாவிற்கு எல்லாமே தெரியும். எங்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனையை வெளியே பலரும் பலவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது எனக்கு காமெடியாக தான் இருக்கிறது. இன்னும் திருந்தலையாடா நீங்க என்று சொல்வது போன்றுதான் இருக்கிறது. உள்ளே இருக்கிற ரியாலிட்டி என்னன்னு எங்களுக்கு தெரியும். அங்க என்ன விஷயம் நடக்கிறது அவங்க யாரு நான் யாருன்னு எங்களுக்கு தெரியும். அதுபோல எங்க ஃபேமிலி எப்படி அவங்க பேமிலி எப்படின்னு சுற்றி இருக்கிறவங்களுக்கு தெரியும். எங்களுக்கு தெரியும் ஆனால் இந்த பிரச்சனை சிலருக்கு வெறும் வாயில் அவல் மெல்வது போன்று கிடைத்திருக்கிறது. அதை அவங்க எப்படி வேணாலும் பண்ணிட்டு போகட்டும் அதை நம்ம சொல்ல முடியாது என்று சிரித்தபடியே கூறுகிறார்.
-
சிறகடிக்க ஆசை: மீனாவை ஜெயிக்க சிந்தாமணி போட்ட பிளான்.. ஆப்பு வைக்கும் ஸ்ருதி! குடும்பமே மாறிட்டாங்க! சூப்பர் சீன் -
சீமானுடன் நடிக்கும் போது நடந்த சம்பவம்.. வெளிப்படையாக பேசிய நடிகை கிரித்தி ஷெட்டி! குவியும் கமெண்ட்ஸ் -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்! -
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications