Abishan Jeevith: பள்ளி தோழியை இன்று திருமணம் செய்யும் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவித்! குவியும் வாழ்த்து
சென்னை: தமிழ் திரையுலகில், தனது முதல் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே, காதலியின் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர், 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவித். பட விழா மேடையில் அவர் தனது நெடுநாள் காதலிக்குத் திருமணம் செய்து கொள்ளப் புரபோஸ் செய்த வீடியோ வைரலான நிலையில், தற்போதுத் தன் காதலியை இன்று திருமணம் செய்து கொள்கிறார்.

இயக்குநர் அபிஷன் ஜீவித் காதல் கதை
அபிஷன் ஜீவித், தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் இளம் திறமைகளில் ஒருவர். நகைச்சுவை-நாடகத் திரைப்படமான 'டூரிஸ்ட் ஃபேமிலி' மூலம் இவர் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விழாவில், யாரும் எதிர்பாராத வகையில், அபிஷன் ஜீவித் தனது நெடுநாள் நண்பரும், காதலியுமான அகிலா இளங்கோவனை மேடையில் திருமணம் செய்து கொள்ளப் புரபோஸ் செய்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
காதலிக்கு மரியாதை
அகிலாவை அறிமுகப்படுத்தியபோது, "இந்தப் பயணத்தில் எனக்கு ஒரு தூணாக இருந்தவள் இவள் தான். நான் எப்போதெல்லாம் பலவீனமாக உணர்ந்தேனோ அப்போதெல்லாம் அவள் என்னுடன் இருந்தாள்" என்று கூறி, அகிலாவின் காதலைப் பெருமையுடன் வெளிப்படுத்தினார். இவர்களின் திருமணம் இன்று இரண்டு குடும்பத்தின் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
வெற்றியில் பங்கு!
மேடையில் தன் காதலை உலகிற்கு உரக்கச் சொன்ன அபிஷன் ஜீவித், சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய காதலி அகிலா இளங்கோவனின் தனிப்பட்ட வெற்றியைப் பெருமையுடன் கொண்டாடியிருப்பது, பலரின் பாராட்டையும் பெற்று இருந்தது.
அபிஷன் ஜீவித்தின் காதலி அகிலா இளங்கோவன், தனதுப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து, பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளார். அகிலா பட்டமளிப்பு உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அபிஷன் ஜீவித் அவருக்கு நெகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு, அவரது ரசிகர்களிடமும் நண்பர்கள் மத்தியிலும் பலரது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் குவித்தது.
உண்மையான ஆதரவு "என்னுடைய காதலி ஜெயிச்சாங்க" என்று அவர் நெகிழ்ச்சியுடன் வெளியிட்டிருக்கும் பதிவு, தன் காதலியின் தனிப்பட்ட வெற்றியிலும் தான் காட்டும் அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கப்பிள் கோல்ஸ்
திரைப்பட விழா மேடையில் தனது அன்பை உலகிற்கு உரக்கச் சொன்ன அபிஷன் ஜீவித், தன் காதலியின் கல்வி வெற்றியைக் கொண்டாடியதன் மூலம், உண்மையான 'கப்பிள் கோல்ஸ்' என்பதை ரசிகர்களுக்கு மீண்டும் நிரூபித்துள்ளார்.
தன்னுடையப் பயணத்தின் வெற்றிக்கும், தற்போது காதலியின் வெற்றிக்கும் அவர் கொடுக்கும் மரியாதை, இந்த இளம் இயக்குநருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்லப் பெயரைக் கொடுத்துள்ளது. இவரது இந்தப் பெருந்தன்மைக்கும், காதலிக்கு அவர் கொடுத்திருக்கும் மரியாதைக்கும் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications