Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘நான் உண்ணும் சினிமா சோற்றில்’ மதயானை பட இயக்குனர் விக்ரம் சுகுகுமார் மறைவு பற்றி நடிகர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் விக்ரம் சுகுமார் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விக்ரம் சுகுமார் மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருந்தார். அதுபோல பொல்லாதவன் கொடி வீரன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். ஆனால் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டபோது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். விக்ரம் சுகுமாரன் பற்றி நடிகர் வேலராமமூர்த்தி தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் உருக்கமான பதிவு வெளியிட்டிருக்கிறார்.

சமீப காலமாகவே திரைத்துறையில் பலர் திடீர் மரணங்களை சந்தித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் உடைய மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு நெஞ்சு வலியில் உயிர் பிரிந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று இயக்குனர் சுகுமார் மாரடைப்பு காரணமாக காலமாகி இருக்கிறார்.

Vikram Sugumaran Vela ramamoorthy

விக்ரம் சுகுமாரன் மறைவு

மதுரையில் நேற்று ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு இரவு பஸ் ஏறிய பிறகு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. இயக்குனர் விக்ரம் சுகுமார் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


விக்ரம் சுகுமாரன் இயக்கிய படங்கள்

பல ஹிட்டு திரைப்படங்களை கொடுத்தவரின் திடீர் மரணம் தான் காலையில் இருந்து சோசியல் மீடியா பக்கங்களில் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு கதிர் நடிப்பில் வெளியான "மதயானை கூட்டம்" திரைப்படத்தின் மூலமாக விக்ரம் சுகுமாரன் இயக்குனராக அறிமுகமானார். ஆரம்பத்தில் பாலு மகேந்திராவிடம் தான் விக்ரம் சுகுமாரன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பிறகு நடிகர் தனுஷ் உடன் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார்.

இராவண கூட்டம் பட இயக்குனர்

அதிலும் பொல்லாதவன், கொடிவீரன் படத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். மதயானை கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சாந்தனுவை வைத்து "இராவண கூட்டம்" என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியானது. அதை தொடர்ந்து சூரியை வைத்து ஒரு படம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

வேலராமமூர்த்தி இரங்கல் பதிவு

இந்த நிலையில்தான் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீரென காலமாகி இருக்கிறார். விக்ரம் சுகுமாரன் மறைவை ஒட்டி திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மதயானை கூட்டம் திரைப்படத்தில் நடித்த எழுத்தாளர் "வேலராமமூர்த்தி" தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில், "என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தவர். நான் உண்ணும் சினிமா சோற்றில் ஒவ்வொரு பருக்கையிலும் அவன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. தாங்க முடியாத துயரமாக இருக்கிறது" என்று வேலராமமூர்த்தி குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+