Ace Movie: விஜய் சேதுபதி- யோகி பாபு காமெடி ட்ராக்.. கவுண்டமணி- செந்தில் காம்போ ஸ்டைல்.. ரகசியத்தை உடைத்த இயக்குனர்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க அவருடன் யோகி பாபுவும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படமான ஏஸ்( Ace) திரைப்படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இந்த திரைப்படம் உருவான விதம் குறித்தும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபுவின் கேரக்டர் குறித்தும் ஃபிலிமிபீட் தமிழுக்கு பிரத்தியேகமாக பேசியிருக்கிறார்.
சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வரும் விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அடுத்து அவர் நான் அதிகமான திரைப்படங்களில் நடிக்க மாட்டேன், கதை முக்கியத்துவம் உள்ள ஒரு சில திரைப்படங்களில் தான் நான் என் நடிப்பேன் என்று கூறி இருந்தார்.

ஏஸ் (Ace) திரைப்படம்
இந்த நிலையில் கடந்த வாரம் விஜய் சேதுபதியின் நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்" பட இயக்குனர் ஆறுமுகக்குமார் இயக்கியுள்ளார். அதுபோல கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி- யோகி பாபு கூட்டணி
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இயக்குனரான ஆறுமுகக் குமார் ஃபிலிமிபீட் தமிழுக்கு ஏஸ் திரைப்படம் உருவான விதம் குறித்து பேசி இருக்கிறார். அதில், "இவருடைய முதல் படமான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மகேந்திரன் இவரை கூப்பிட்டு பாராட்டி பேசி இருக்கிறார். மகேந்திரன் எந்த திரைப்படம் ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்று பார்த்து பேசமாட்டார். அவருக்கு ஒரு படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டும்தான் அவர் அதை பாராட்டுவார். அதனால் அவர் என்னை கூப்பிட்டு பாராட்டியது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று ஆறுமுககுமார் கூறியிருக்கிறார்.

கதாநாயகி
அதோடு இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு காம்போ நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் காம்போ எப்படி இருக்குமோ அதே ஸ்டைலில் தான் உருவாக்கப்பட்டது என்று அறிமுக குமார் கூறியிருக்கிறார். அதுபோல இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ருக்மணி ஏற்கனவே சைடு ஏ சைடு பி (side a and side b )என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்தான். ஆனால் எந்த பிரபல இந்த படத்திற்காக நான் அவரே நேரடியாக பார்த்து செலக்ட் செய்யவில்லை ஆடிஷன் வைத்து தான் செலக்ட் செய்தேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ஆறுமுக குமார் இந்த படத்தை பற்றி பல விஷயங்களை சுவாரசியமாக பகிர்ந்து இருக்கிறார். அதை வீடியோவாக இங்கே பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications