Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திக் பற்றி பேசிய பேட்டி! பாரதி கண்ணன் வாழ்க்கையே மாறிப்போச்சு! இப்படி நடக்கும்னு நினைக்கலயாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் யாருக்கு எப்போது கதவு திறக்கும்னு சொல்லவே முடியாது! ஆனா, ஒரு பேட்டி கொடுத்து, தன் வாழ்க்கையே புரட்டி போட்ட ஒரு சம்பவம் இயக்குநர் பாரதி கண்ணன் வாழ்க்கையில நடந்திருக்கு! அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது, நடிகர் சித்ரா லக்ஷ்மணன் தான்!. இப்போ இணையத்தில் பயங்கரமா வைரலாகி இருக்குற அந்த பேட்டியோட எஃபெக்ட் என்ன, அதுக்குக் கிடைச்சப் பெரியப் பாராட்டு என்னன்னு பார்க்கலாம்!

Bharathi Kannan Chithra Lakshmanan Karthik

கார்த்திக்குடன் நடந்த ட்ராமா

நடிகர் சித்ரா லக்ஷ்மணன், தன்னோட youtube சேனல்ல பல சினிமாப் பிரபலங்களோட சினிமாப் பயணத்தையும், அவமானங்களையும் பேசிட்டு இருக்கார். அதுல, சமீபத்துல பாரதி கண்ணன் கொடுத்தப் பேட்டிதான் ட்ரெண்டாகிவிட்டது. அந்தப் பேட்டியில் பாரதி கண்ணன், தான் சினிமாவில் சந்திச்ச சாதனைகள், கஷ்டங்கள் எல்லாத்தையும் ரொம்ப வெளிப்படையா பேசியிருக்காரு.

கார்த்திக்குடன் முயற்சி

நடிகர் கார்த்திக்கை வைத்து படம் எடுக்க அவர் எடுத்த முயற்சி, அதுக்குப் பிறகு கார்த்திக் அட்வான்ஸ் வாங்கிட்டு, "பணத்தைத் திருப்பி கொடுக்க முடியாது"ன்னு சொன்ன ட்ராமா எல்லாத்தையும் காமெடியாக கதை மாதிரிச் சொல்லி இருக்காரு. அதுல முக்கியமா, கார்த்திக் பேசின டயலாக்களை, கார்த்திக் வாய்ஸ்லயே பாரதி கண்ணன் பேசி இருக்காரு! அது தான் இணையத்தில் பயங்கரமா வைரல் ஆகி, பலரையும் சிரிக்க வச்சது!

எச். வினோத் சொன்ன விஷயம்

இந்த பேட்டி இவ்வளவு வைரலாகும்னு சித்ரா லக்ஷ்மணன் கூட எதிர்பார்க்கலையாம்! ரசிகர்கள் மட்டுமல்லாம, சினிமாத் துறையில இருக்குறவங்களும் இந்தப் பேட்டியைப் பார்த்துப் பேசி இருக்காங்க. அதுல, இயக்குநர் H.வினோத் சொன்னதுதான் ரொம்பவே சுவாரஸ்யமானத் தகவல்! சித்ரா லக்ஷ்மணன்கிட்ட எச். வினோத் பேசும்போது, "பாரதி கண்ணன் சாரோடப் பேட்டியை நான் பார்த்தேன்! ஒரு காலத்துல நான் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர முயற்சி செய்தேன்"னுச் சொல்லி இருக்காரு!

பாரதி கண்ணன், 'வயசுப் பசங்க'னு படத்தை இயக்கி முடிச்சிருந்த நேரம் அது. வினோத் போய் அசிஸ்டன்ட் டைரக்டராச் சேரக் கேட்டதும், பாரதி கண்ணன், *"நான் அடுத்ததா ஒரு 'சிவன் படம்' பண்ணப் போறேன். அதுக்காகச் சிவனைப் பத்தினத் தகவல்களை எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வாங்கன்னுச் சொல்லி அனுப்பி இருக்கார். வினோத் ஒரு வாரமா சிவனைப் பத்தி எல்லாத் தகவலையும் எடுத்துட்டுப் போனப்போ... பாரதி கண்ணன் ஆபீசையே மூடிட்டுப் போயிட்டாராம்!

விதியின் விளையாட்டு

ஆனா, பல வருஷங்கள் கழிச்சு, வினோத் டைரக்ட் பண்ணின 'சதுரங்க வேட்டை' படத்துல, பாரதி கண்ணன் ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்காரு! இதான் வாழ்க்கை எப்படி மாறுதுன்னு வினோத் வியந்து பேசியிருக்காரு!. சித்ரா லக்ஷ்மணனுக்கு இந்தக் கதையே வியப்பை கொடுத்திருந்தாலும், இந்த பேட்டி மூலமாப் பாரதி கண்ணன் வாழ்க்கை முழுக்க மாறி இருக்குன்னு சொல்லலாம்!

பாராட்டுகள்

அந்தப் பேட்டியில் பாரதி கண்ணன் கதை சொன்ன விதம், காமெடி டைமிங் எல்லாம் இப்போ பலராலும் பாராட்டப்பட்டுட்டு இருக்கு! இதை நம்பி, அவருக்குப் பல சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருக்குதாம்! இப்போ அவர் சினிமாவுல மட்டுமில்லாம, சின்னத் திரையிலும் நடிக்க ஆரம்பிச்சு இருக்காரு!. அடேங்கப்பா ஒரு INTERVIEW கொடுத்தது, LIFEல இவ்வளவுப் பெரியத் திருப்புமுனையைக் கொடுக்கும்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! பாரதி கண்ணன் இந்த கிடைத்த வாய்ப்புகளை நல்லாப் பயன்படுத்திக்கிட்டு, பெரிய ஹிட் படம் கொடுக்கணும்னு பலருடைய கருத்தாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+