Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 வாரத்திற்கு முன்பு தானே பாரதிராஜா மகள் அப்படி சொன்னாங்க! மனோஜ் மறைவு குறித்து நெப்போலியன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இந்த இறப்பு செய்தி கேட்டு தமிழ் சினிமாதுறையினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரதிராஜாவின் மகள் வீட்டிற்கு போகும்போது அவர் சொன்ன விஷயங்கள் குறித்து உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.

நேற்று இரவு நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா 48 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இது சினிமா வட்டத்தில் ரசிகர்களையும் பிரபலங்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. ஒரே மகனான மனோஜ் தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தில் பின்னணி பாடலும் பாடி இருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

Manoj Bharathiraja


மனோஜ் பாரதிராஜா நடித்த படங்கள்

அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதில் சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், மாநாடு, விருமன் போன்ற படங்கள் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. ஆனாலும் தன்னுடைய அப்பாவை போல இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு அதற்காக முயற்சி எடுத்த மனோஜ் பாரதிராஜா தன்னுடைய நீண்ட நாள் தோழியான நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மனோஜின் எதிர்பாராத இறப்பு

இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் இவர் பழைய நிலைக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்லோரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டு அவருடைய உயிர் நேற்று இரவு பிரிந்து விட்டது. மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இசைஞானி இளையராஜா, டி. ராஜேந்திரன், சரத்குமார், குஷ்பூ போன்ற பலரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகர்கள் நேரில் அஞ்சலி

அதுபோல நடிகர் சூர்யா, பிரபு, விஜய் போன்றோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகரும், அரசியல் பிரமுகருமான நெப்போலியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டிருக்கிறார். நெப்போலியனை தமிழ் சினிமாவில் முதல் முதலில் அறிமுகப்படுத்தியது பாரதிராஜா தான். புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாக பாரதிராஜா தான் நெப்போலியனை வில்லனாக அறிமுகம் செய்திருந்தார்.

நடிகர்களின் குருநாதர்

நெப்போலியனுக்கு மட்டுமல்ல பாரதிராஜா பல நடிகர்களுக்கு குருநாதராக இருக்கிறார். இந்த நிலையில் நெப்போலியன் வெளியிட்ட பதிவில், மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எங்கள் குருநாதர் இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்களின் அன்பு மகன் மனோஜ் மறைவு செய்தி கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியுற்றோம். மிகவும் வேதனையாக இருக்கிறது.

நெப்போலியன் பகிர்ந்த செய்தி

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் மலேசியாவில் வசிக்கும் எங்கள் குருநாதரின் மகள் ஜனனி வீட்டிற்கு சென்று இருந்தாம். அப்போது வீட்டில் உள்ள அனைவரையும் பற்றியும் விசாரித்தோம். அப்போது ஜனனியிடம் அவரது அண்ணன் மனோஜ் உடல்நிலை பற்றி விசாரித்தோம். அதற்கு ஜனனி அவரது அண்ணன் உடல் நிலை பற்றி விவரித்தார். இப்போது நன்றாக இருக்கிறார் என்று சொன்னார். அதற்குள் இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மனோஜ்க்கு இரங்கல் செய்தி

அவர்கள் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. எங்கள் குருவிற்கு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திரு பாரதிராஜா அவர்களின் கோடான கோடி ரசிகர்களுக்கும் அன்பு தம்பி மனோஜியின் ரசிகர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

நடிகர் சூரி வருத்த செய்தி

அதுபோல விருமன் திரைப்படத்தில் மனோஜ் பாரதிராஜா உடன் இணைந்து நடித்த நடிகர் சூரி தன்னுடைய இரங்கல் செய்தியை வெளியிட்டு இருக்கிறார். அதில் எந்த ஒரு அப்பாவிற்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது. அப்பா இருக்கும் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? இறப்பதற்கான வயதா இது? வாழ வேண்டிய வயது இப்படி எல்லாம் நடக்குமா? என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வருத்தம்

அவருடைய தாஜ்மஹால் படத்தில் நான் கலை வடிவமைப்பில் பணியாற்றி இருக்கிறேன். அவருடன் விருமன் படத்தில் நடித்திருக்கிறேன். எளிமையான மனிதர் எப்போதும் அமைதியாக இருப்பார் என்று கூறி இருக்கிறார். சூரியை போலவே சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பழனி, தன்னுடைய இரங்களில் மனோஜ் பணக்கார வீட்டு பையன் என்ற நினைப்புடன் நம்முடன் பழகவே மாட்டார். நான் அவருடைய வீட்டிற்கு போனபோது அவருடைய வீட்டில் ஒவ்வொரு அறையையும் எனக்கு அவ்வளவு சந்தோஷமாக சுற்றி காண்பித்தார். அவருடைய மனது யாருக்கும் வராது. என்னுடைய நண்பன் என்று உருக்கமாக பகிர்ந்து இருந்தார். இப்படியாக பல பிரபலங்களும் மனோஜ் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+