நெஞ்சை பிடித்த மனோஜ்? ஆடிப்போன அல்லிநகரம்.. என் மீது பாசம் காட்டி.. நண்டை டேபிளில் உடைத்து: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பெரிய டைரக்டரின் மகனாக பிறந்தது மைனஸா இருக்கு.. யார்கிட்டயும் என்னால வாய்ப்பு கேட்க முடியல. அப்படியே கேட்டாலும் உங்க அப்பாவே பெரிய டைரக்டர்தானே? ன்னு சொல்றாங்க" என்று என்னிடமே பலமுறை சொன்னவர்.. இப்படி பல பிரச்சனைகளை சந்தித்தவர். திறமையை தாண்டி, உழைப்பை தாண்டி, அதிர்ஷ்டமும் இங்கு முக்கியமான விஷயம்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

Cheyaaru Balu சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "களிமண்ணைகூட நடிக்க வைத்துவிடுவார் பாரதிராஜா.. அங்கிருந்து வந்த வாரிசு.. 48 வயதுதான் ஆகிறது.. தான் ஒரு பெரிய டைரக்டரின் மகன், செல்வாக்காக வளர்ந்த மகன், அப்படியான குணமே மனோஜிடம் துளியும் இருக்காது.

Television manoj bharathiraja manoj

மனோஜுக்கு கடந்த சில நாட்களாகவே இதய அறுவை சிகிச்சை செய்து, வீட்டிலிருந்ததாக தகவல்.. திடீரென உயிர் பிரிந்துவிட்டது. பாரதிராஜா ஏற்கனவே தளர்ந்து காணப்படுகிறார்.. இப்போது 80 வயதுடைய தந்தையின் மனநிலைமை எப்படியிருக்கும்? திருமாணிக்கம் படத்தில் அவரை பார்க்கும்போது, தளர்ந்துபோய் கொழகொழன்னு காணப்பட்டார்..

பசி வறுமையே தெரியாத பையன் மனோஜ்.. சின்ன திமிர்கூட அவரிடம் இருந்ததில்லை.. எனக்கு திருமணம் நடப்பதற்கு முன்பு, அழைத்து, சாப்பிட வைத்தவர்.. ஒரு டேபிளில் பெரிய நண்டு, அதை உடைக்க ஒரு சுத்தியலை வைத்து, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று எனக்கு சொல்லி தந்தார்.. அந்த அளவுக்கு இறங்கி வந்து அனைவரிடமும் பழகக்கூடியவர்..

மகனை சேர்த்து கொள்ளாத அப்பா

ஆனாலும், சினிமா என்றால் மனோஜூக்கு தீராத ஆசை.. தன்னுடைய அப்பாவிடமே சென்று, அசிஸ்டென்ட்டாக சேர்ந்து கொள்கிறேன் என்றார்.. அதற்கு பாரதிராஜா, "அப்பா மகன் என்றால் சினிமாவில் சரிவராது.. உனக்கு நான் சலுகை தருவதாக சொல்வார்கள்.. என்னால் உன்னை திட்டவும் முடியாது. நான் திட்டினாலும் உனக்கும் அவமானமாகிவிடும். அதனால், நீயே யாரிடமாவது சென்று அசிஸ்டெண்ட்டாக சேர்ந்து கொள்" என்றார்

அதற்கு பாரதிராஜா, யாரிடம் சேரட்டும், அந்த பெயரை நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு பாரதிராஜா, எனக்கு பிடிச்ச டைரக்டர் மணிரத்னம், என்று சொல்லவும், அவரிடமே அசிஸ்டெண்ட்டாக, பம்பாய் படத்தில் சேர்ந்து கொண்டார் மனோஜ்.

தாஜ்மஹால் உருவான விதம்

பிறகு சில காலம் கழித்து, மணிரத்னம் பாரதிராஜாவுக்கு போன் செய்து, எத்தனையோ பேரை அறிமுகப்படுத்தி இருக்கீங்க, உங்க மகனையும் அறிமுகப்படுத்துங்கள்" என்று சொல்லியிருக்கிறார். அப்படி உருவான படம்தான் தாஜ்மஹால்.

அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு.. ரஹ்மான் அதில் இறங்கி அடித்தார்.. தன் நண்பர் இளையராஜாவை விட்டு, தன்னை நம்பி வந்ததால், பாடல்களில் கலக்கினார் ரஹ்மான். ஈச்சி எலுமிச்சி பாட்டை மனோஜ் பாடியிருந்தார். பல்லவன் பட ஷூட்டிங்கில் இந்த பாட்டை சத்தமாக பாடிக் கொண்டேடியிருப்பார் மனோஜ்.

"பெரிய டைரக்டரின் மகனாக பிறந்தது மைனஸா இருக்கு.. யார்கிட்டயும் என்னால வாய்ப்பு கேட்க முடியல. அப்படியே கேட்டாலும் உங்க அப்பாவே பெரிய டைரக்டர்தானே? ன்னு சொல்றாங்க" என்று என்னிடமே பலமுறை சொன்னவர்.. இப்படி பல பிரச்சனைகளை சந்தித்தவர். திறமையை தாண்டி, உழைப்பை தாண்டி, அதிர்ஷ்டமும் இங்கு முக்கியமான விஷயம்.

தமிழ், கேரளா மொழிகள்

நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. பாரதிராஜா அடிக்கடி சொல்வார், "நாமதான் தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். என் வீட்டுக்கு வந்திருப்பது மலையாள பெண்தான்.. மலையாளமும், தமிழும் வேற வேற இல்லையே.. தேனிக்கு பக்கத்துலதான கேரளா" என்று இயல்பாக கேஷூவலாக சொன்னார்.

இன்று மகனை இழந்து பாரதிராஜா எப்படித்தான் இதை தாங்கி கொள்ள போறாரோ? அல்லி நகரமே அரண்டு போயிருக்கு" என்றெல்லாம் உருக்கமாக பேசியிருக்கிறார்.

நெஞ்சுவலியா? கடைசி தருணம்

இதேபோல, Aramnaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "மனோஜூக்கு இருதய பிரச்சனை தவிர வேறு என்ன உடம்பில் தொந்தரவு இருந்தது என்று தெரியவில்லை. ஒரு மாதமாக சிகிச்சை முடிந்து ஓய்வில்தான் இருந்து வந்துள்ளார்.. ஒரு தயாரிப்பாளர் தான் கேள்விப்பட்ட செய்தியை என்னிடம் சொல்லும்போது, "நெஞ்சுவலி என்று மனோஜ் சொன்னதாகவும், உடனே என்னாச்சு? என்று பதறும்போதே, ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாகவும் கூறினார்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+