மிஷ்கினுக்கு வாய்ப்பு நான்தான் கொடுத்தேன்.. ஆனால் என் படத்தைப் பார்த்து அப்படி சொல்லிட்டாரு! சேரன் உருக்கம்
சென்னை: இயக்குனராகவும் நடிகராகவும் பிரபலமடைந்த சேரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அப்போது இயக்குனர் மிஷ்கின் குறித்து சேரன் வெளிப்படையாக பேசி இருந்தார். தான் மிஸ்கின்க்கு வாய்ப்பு கொடுத்தேன் ஆனால் அவர் என்னுடைய படங்களை பார்த்தால் தூங்கி விடுவேன் என்று சொல்லி இருக்கிறார், அதற்கு காரணம் இதுதான் என்று அந்த பேட்டியில் சேரன் விளக்கம் கொடுத்திருக்கிறார். சேரனின் வெளிப்படையான பேச்சை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களின் படங்கள் வாழ்வியலோடு ஒன்றி போய் இருக்கும். அதில் ஒருவர்தான் இயக்குனர் சேரன். இயக்குனர் சேரனின் படங்கள் எல்லாமே தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். குடும்பத்திற்குள் நடக்கும் சோகம், துக்கம், காதல் என எல்லா உணர்வுகளையும் அவருடைய படங்கள் வெளிப்படுத்தும்.

சேரன் இயக்கிய படங்கள்
அதிலும் அவர் இயக்கிய வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப் படங்கள் எல்லாம் பலருடைய ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. இயக்குனராகவும் நடிகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றிய சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்திருந்தார். இப்போது அவர் அதிகமான திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படங்களை இயக்கிய நடித்துக் கொண்டிருக்கிறார்.
கருத்து வேறுபாடு
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் மிஸ்கினுடன் ஏற்பட்ட சில மறக்க முடியாத நினைவுகள் குறித்து பகிர்ந்து இருந்தார். அதில் சேரனிடம் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சேரன் ஏஜிஎஸ் இல் டைரக்டராக ஒரு படம் பண்றதுக்கு நான் அக்ரிமெண்ட் போட்டு இருந்தேன். அந்த நேரத்தில் தான் அந்த தயாரிப்பாளர் மிஸ்கின் சார் சொன்ன ஒரு கதையை சொன்னாரு.
மிஷ்கின் பேச்சு
அது கூட உங்களுக்கு பிரமாதமாக பொருந்தும் நீங்க நடிக்கிறீங்களா? என்று அவர் கேட்டார். அப்போ நாம நடிக்கலாம் என்று நானே தான் மிஸ்கினை கூப்பிட்டு சம்பளத்தை கூட குறைச்சி கேட்டு அவருடைய டைரக்ஷனில் நடிக்கணும் என்று அந்த படத்தில் நடித்தேன் என்று சேரன் பேசியிருந்தார். அப்போது அவரிடம் மிஸ்கின் எல்லா இடங்களிலும் பேசும்போது உங்களுடைய படங்கள் குறித்து பேசி வருகிறாரே என்று கேட்கப்பட்டது.
சேரன் பேட்டி
அதற்கு சேரன் "மிஷ்கின் சார் எங்கேயாவது பேசும்போது நான் சேரன் சார் படத்தை பார்த்தா தூங்கிடுவேன் என்று பேசுவாரு. அதை கேட்கும் போது எனக்கு சிரிப்பா தான் இருக்கும். ஆனால் அவருக்கு என் படம் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை ஆனால் எனக்கு அவரோட படங்களை ரொம்ப பிடிக்கும்" என்று அந்த பேட்டியில் சிரித்தபடியே சேரன் பேசியிருந்தார். இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் சேரனுக்கும் மிஸ்கின்னுக்கும் என்ன பிரச்சனை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
குறை எதுவும் இல்லை
ஆனால் மிஸ்கின் எந்த இடத்திலும் சேரனை குறைத்து பேசவில்லை. அவருடைய படங்கள் தான் தனக்கு தூக்கம் வரும் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல சேரனும் மிஸ்கினை குறித்து தவறாக பேசாமல் அவர் படங்களை பற்றி பெருந்தன்மையாக பேசியதை பலரும் பாராட்டி வருகிறார்கள். சினிமா துறையில் ஒரு சிலர் மட்டும் மனதில் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாக பேசி விடுவார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் மிஸ்கின். அடிக்கடி அவர் நிகழ்ச்சிகளில் பேசும் வார்த்தைகள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. ஆனாலும் அதையெல்லாம் மிஸ்கின் கண்டு கொள்வது கிடையாது.
சினிமாவை விட்டு விலகல்
சில மாதங்களுக்கும் முன்பு சோஷியல் மீடியாவில் வீடியோ போட்டு பிரபலமாகும் சிலர் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் ஆதரவு தெரிவித்தனர் ஆனாலும் தனக்கு எதிர்ப்பை அவர் கண்டு கொள்ளாமல் அடுத்த
பங்க்ஷனிலும் அதேபோன்று பேசி இருக்கிறார். கடைசியாக அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூட எனக்கு சினிமாவில் இருப்பது வர மன அழுத்தமாக இருக்கிறது அதனால் நான் சினிமா துறையை விட்டு சீக்கிரமாக விலகி விடுவேன் என்றும் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications