நானும் லிவிங்ஸ்டனும் பிரிய காரணமே அந்த பொண்ணுங்க தான்! வெளிப்படையாக பேசிய ஜி.எம் குமார்
சென்னை: நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் ஜி.எம் குமார் பேட்டி ஒன்றில் தன்னோடு அறுவடை நாள் படத்தில் வேலை பார்த்த லிவிங்ஸ்டன் எதனால் தன்னை விட்டு பிரிந்தார் என்பது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் ஜி.எம் குமார் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக நடிகராக மாரி இப்போது பல திரைப்படங்களில் முன்னணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் இயக்குனராக இருக்கும்போது தன்னோடு உதவி இயக்குனராக பணி செய்த லிவிங்ஸ்டன் எதற்காக தன்னை விட்டு விலகிப் போனார் என்பது பற்றி பேசி இருக்கிறார்.

அதில் ஜி.எம் குமார் பேசுகையில் நானும் லிவிங்ஸ்டனும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் ஓட தான் முதலில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு லிவிங்ஸ்டனுக்கு ஒரு லவ் ஸ்டோரி ஸ்டார்ட் ஆகிவிட்டது. நானும் அந்த நேரத்தில் லவ் பண்ணிட்டு இருந்தேன். எங்களுடைய வாழ்க்கையில் பொண்ணுங்க வந்த பிறகுதான் பிரிவு ஏற்பட்டது.
அதற்குப் பிறகு லிவிங்ஸ்டன் என்னிடமிருந்து விலகி போன பிறகு பூந்தோட்ட காவல்காரன் படத்தில் நடித்தான். நானும் அவனும் அறுவடை நாள் படத்தை இயக்கும்போது இளையராஜா ஒரு வார்த்தை சொன்னார் .அதாவது நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிடாதிங்க. என்ன மாதிரி சிச்சுவேஷன் வந்தாலும் நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிடாதீங்க உங்களோட காம்பினேஷனில் இன்னும் நல்ல நல்ல படங்கள் வரவேண்டும் என்று சொன்னார்.
ஆனால் அது நடக்காமல் போயிடுச்சு. எங்கள் இருவருடைய வாழ்க்கையிலும் காதல், பெண்கள் என்று வந்த பிறகு வாழ்க்கை வேறு மாதிரி மாறிடுச்சு. ஆனால் அதை இப்போ நினைச்சா நாம இப்படி பண்ணி இருக்க கூடாது என்று தோன்றுகிறது. அந்த வயசு அப்படி முட்டாள்தனமா முடிவெடுத்துட்டோம். அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய அறுவடை நாள் படம் பெருசாக பேசப்பட்டதும் எங்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பெரிசா யோசிக்க தோணாமல் போய்விட்டது என்று அந்த பேட்டியில் ஜி.எம் குமார் பேசியிருக்கிறார்.
அதே நேரத்தில் திறமைக்கு எப்போதுமே வயது தடையில்லை என்பதை நிரூபித்து கொண்டிருப்பவர்களில் ஒருவராக ஜி.எம் குமார் இருந்துவருகிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பு பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு தனது தனித்துவமான நடிப்பை உலகிற்கே வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்.
இவருடைய திறமைகள் பலருக்கும் தெரியாத வகையில்தான் இருந்துவருகிறது. திரைப்படங்களில் இவருக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்தது அவன் இவன் திரைப்படம் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. ஆரம்ப கட்டத்தில் முதல் முறையாக ஜி.எம் குமார் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
ஜி.எம் குமாருக்கு எப்போதுமே இளையராஜா மீது தனி மரியாதை இருந்துள்ளது. அதனால்தான் இவர் முதல் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளில் இளையராஜாவின் இசை அமைப்புகளை நிராகரிக்க விரும்பாத தயாரிப்பாளர்களின் படங்கள் பலவற்றை நிராகரித்துள்ளார்.
அதனாலே இவருடைய மார்க்கெட் சரியத் தொடங்கி இருக்கிறது. முதல் வெற்றிக்கு பிறகு மூன்று திரைப்படங்களை மட்டுமே இவர் இயக்கியிருக்கிறார். ஜி.எம் குமார் இயக்கி தயாரித்த உருவம் திரைப்படம் இவரை திவால் நிலைக்கு தள்ளியுள்ளது. பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சந்திக்கும் பிரச்சனைகளை இவரும் இந்த உருவம் திரைப்படத்தின் மூலமாக சந்தித்து விரக்தி அடைந்து உள்ளார்.
இனி தமக்கு தயாரிப்பு வேண்டாமென்று நடிப்பில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் குறும்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறார்.
இதனால் 2000களில் மீண்டும் பண நெருக்கடியில் இவர் சிக்கித் தவித்து இருக்கிறார். அந்த நேரத்தில் அவன் இவன் திரைப்படத்தில் ஹைனஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பாலா இவரை தொடர்பு கொண்டிருக்கிறார். யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய நடிப்பை இந்த கேரக்டரில் வெளிக்காட்டி சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதுக்காக பரிந்துரை பெற்றிருக்கிறது .
ஜி.எம் குமார் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சின்னத்திரைகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டிருக்கிறது. அதுபோல ஜிஎம் குமார் அவருடைய முதல் திரைப்படத்தில் நடித்த நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications