இயக்குனர் ஹரி மகன் இயக்கிய ஷார்ட் பிலிம்.. முக்கிய கேரக்டரில் ஸ்ரீதேவி.. வித்தியாசமான யோசனை!
சென்னை: இயக்குனர் ஹரியின் மகன் ஸ்ரீராம் ஹரி தற்போது ஷார்ட் பிலிம் ஒன்றை எடுத்து யூடியூபில் வெளியிட்டு இருக்கிறார். அந்த ஷார்ட் பிலிம் இணையத்தில் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது. அந்த ஷார்ட் பிலிமில் நடிகை ஸ்ரீதேவி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் ஸ்ரீ ராம் ஹரியின் சித்தி தான் ஸ்ரீதேவி என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
இயக்குனர் ஹரி பல ஆக்சன் படங்களை இயக்கியிருந்தாலும் அவருடைய மகன் இயக்கி, நடித்த முதல் ஷார்ட் பிலிம் எதார்த்தத்தை பிரதிபலித்து இருக்கிறது. அதோடு பைலட் படத்தை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்.

இயக்குனர் ஹரிக்கு பெரிய அளவில் அறிமுகமே தேவை இல்லை. அவர் இயக்கிய திரைப்படங்களே அவருக்கு அறிமுகத்தை கொடுத்து விடும். எந்த திரைப்படம் குடும்ப பாங்காகவும் அதோடு ஆக்சன் கலந்தும் இருக்கிறதோ அது ஹரியின் திரைப்படம் தான் என்று எளிதாக ரசிகர்களால் அடையாளம் காண முடியும். அதிலும் ஹரி திரைப்படத்தில் கேமராவின் ஆங்கிள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விடும்.
தெருவில் வருவது போன்று இருக்கும் காட்சிகள் டக்கென்று பூஜை அறை வரைக்குமோ அல்லது கிச்சன் வரைக்குமோ அழகாக நகர்ந்து வரும் அதனாலேயே ஹரியிம் படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல இயக்குனர் ஹரி ஆரம்பத்திலிருந்து இப்ப வரைக்கும் அதிகமாக ஆக்சன் இருக்கும் படங்களை இயக்கி வருகிறார். அதுவே அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகவும் அமைந்துவிடுகிறது.

2002 ஆம் ஆண்டு வெளியான தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரி முதல் படத்திலேயே தன்னுடைய அறிமுகத்தை நச்சென்று பதித்திருந்தார். அதற்கு பிறகு சாமி, அருள், கோவில், ஆறு, யானை என்று பல கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். அதுபோல ஹரியின் இயக்கத்திலேயே மிகவும் முக்கியமான படமாக அமைந்தது "சாமி" படம் தான். இந்த படம் தான் விக்ரமுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதுபோல சிங்கம் படமும் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியைப் பெற்றிருந்தது. அந்த வெற்றியின் காரணமாக தான் 2,3 என்று அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி கொண்டு இருந்தது. இப்படியாக அதிரடி காட்டிக் கொண்டிருக்கும் ஹரி நடிகர் விஜயகுமாரின் மகளான பிரீத்தாவை தான் திருமணம் செய்து இருக்கிறார். அதுபோல ஹரிக்கு ஸ்ரீராம் ஹரி என்ற ஒரு மகன் இருக்கிறார். அவர் தற்போது ஷார்ட் பிலிம் எடுத்து தன்னுடைய யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த ஷார்ட் பிலிம் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிறது. அந்த திரைப்படத்திற்கு "ஹம்" என்று பெயர் வைத்திருக்கிறார். "பைலட் ஃபிலிம்" மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்தில் நடிகையும் ஸ்ரீராம் ஹரியின் சித்தியுமான நடிகை "ஸ்ரீதேவி விஜயகுமார்" முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் பாதி நேரம் ஸ்ரீராம் ஹரி தன்னுடைய பிரச்சனைகள் பற்றி ஸ்ரீதேவியிடம் பேசிக் கொண்டிருப்பது போன்று தான் இருக்கிறது.
பிறகு ஸ்ரீதேவி கொடுத்த மோட்டிவேஷனால் தன்னுடைய பிரச்சனைகளை ஸ்ரீ ராம் ஹரி சரி செய்தாரா? இல்லையா? என்பது தான் திரைப்படத்தின் கதை. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிறது. அதே நேரத்தில் இது இப்ப வரைக்கும் 38k வியூஸ் தாண்டி போயிருக்கிறது. அதிகமான லைக்குகள் குவிந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications