"சபேஷின் கடைசி ஆசை நிறைவேறவில்லை!" – கண்ணீருடன் உடைந்துபேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்!
சென்னை: தமிழ் திரையுலகின் மறக்க முடியாத இசைக் கலைஞர்களில் ஒருவரான இசையமைப்பாளர் சபேஷ், உடல்நலக் குறைவால் காலமான துயரம், திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சபேஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், சபேஷ் பற்றிய பல உணர்வுப்பூர்வமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, அவரது நிறைவேறாத கடைசி ஆசையையும் கூறி கண்கலங்கினார்.

கே.எஸ். ரவிக்குமாரின் உருக்கமான நினைவுகள்
கே.எஸ். ரவிக்குமார், தேவா குடும்பத்துடன் தனக்கு இருந்த நீண்ட நாள் உறவைப் பற்றிப் பேசினார். "சபேஷ் நான் படித்த ஸ்கூலில் தான் படித்தார். தேவeவும் அவருடைய தம்பிகள் எல்லோருமே நான் படித்த ஸ்கூலில் தான் படித்தார்கள்." "தேவா தான் அவருடைய குடும்பத்தை இந்த அளவிற்கு உயர்த்தி கொண்டு வந்தார். அவர் ஆரம்பத்தில் அதிகமாக கஷ்டப்பட்டார். பிறகு அவர் நல்ல நிலைமைக்கு வரும்போது, தன்னுடைய தம்பிகளையும் ஒரு உயரத்தில் வைத்துப் பார்த்துவிட்டார். அவர் இந்த அளவிற்குப் புகழில் இருக்கிறார் என்றால், அதற்கு அவருடைய தம்பிகள் உழைப்பும் உண்டு, அது எனக்குத் தெரியும்."
கூட்டு பணி
"நான் எடுத்த 17க்கும் மேற்பட்ட படங்களில் தேவா பணியாற்றி இருக்கிறார். பல படங்கள் நாங்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறோம். அதனால் எனக்கு அவரைப் பற்றியும், அவருடைய குடும்பத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும்." சபேஷ் மீது ரவிக்குமாருக்கு இருந்த நன்மதிப்பின் காரணமாகத்தான், சபேஷ் - முரளியின் தனிப்பட்ட இசைப் பயணமும் தொடங்கியது.
சபேஷ்-முரளியின் அறிமுகம்
"தேவாவிடம் அனுமதி வாங்கிவிட்டுத் தான் அவருடைய தம்பி சபேஷ் - முரளியை என்னுடைய 'சமுத்திரம்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தேன். அப்போ கூட அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டார். 'நீங்க தாராளமா என்னுடைய தம்பிகளைத் தனி இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தலாம், அவங்க நல்ல நிலைமைக்கு வரணும்' என்று பெருமையாகச் சொல்லிட்டு இருந்தாரு."
சமுத்திரம் படத்திற்காக என்னுடைய ஆபீஸில் வைத்து தான் சபேஷ் டியூன் போட்டுக்கிட்டு இருந்தாரு. அதில் அழகான சின்ன தேவதை பாடல் டியூனுக்கு "தேவாவின் அன்பு தம்பிகள்" என்று எடுத்து பாட்டு பாடி கொண்டு இருந்தேன் அதை எல்லாம் மறக்க முடியாது.
சங்கத் தலைவர்
சபேஷ் சமீபத்தில் இசையமைப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். "அவருடைய ஒரே ஆசை இசையமைப்பாளர் சங்கக் கட்டடத்தை பெரிதாகக் கட்ட வேண்டும் என்பதுதான். இப்ப இருக்கிற சங்கக் கட்டடங்கள் எல்லாவற்றிலும் பெரிய கட்டிடம் இசையமைப்பாளர் சங்கக் கட்டிடம் தான்." "அந்தக் கட்டடத்தில் வைத்துத் தான் எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். ஆனால் இப்போது அந்த கட்டிடம் பழையது ஆகிவிட்டது அதனால் கங்கை அமரன் சார், இளையராஜா சார், ஏ.ஆர். ரஹ்மான் போன்றோரைப் பேசி ஒரு நிகழ்ச்சி நடத்தி, அதன் மூலமாகச் சங்கக் கட்டடத்தை பெருசாகக் கட்டணும்னு ஆசைப்பட்டார். அதுதான் அவருடைய கடைசி ஆசையாய் இருந்தது. ஆனா, அந்தக் கடைசி ஆசை நிறைவேறாமலே போய்விட்டது தான் வருத்தமாய் இருக்கு" என்று கண்கலங்கப் பேசியிருந்தார்.
அதுபோல சபேஷ் கூட இருக்கிறவங்க எல்லாரையும் நல்லா பார்த்துக் கொள்ளணும் என்று நினைப்பார். எல்லாரும் நல்ல நிலைமைக்கு வரணும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்" என்றும் ரவிக்குமார் நெகிழ்ந்துள்ளார்.
கானா சபேஷ் பயோகிராபி
இசையமைப்பாளர் தேவாவின் இரட்டைச் சகோதரர்களான சபேஷ் - முரளியில் ஒருவர் தான் சபேஷ். சபேஷ் பாடிய 'உதயம் தியேட்டருல', 'கந்தன் இருக்குமிடம் கந்தகோட்டம்', 'கொத்தால்சாவடி லேடி', 'அண்ணாநகரு ஆண்டாளு', 'குன்றத்துல கோயிலு கட்டி' போன்ற பல கானா பாடல்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலம்.
சபேஷ் இசையமைத்த படங்கள்
சபேஷ் - முரளி இருவரும் இணைந்து 'சமுத்திரம்' ,சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து', வடிவேலுவின் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி', 'பொக்கிஷம்' உள்ளிட்டப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாமலை', 'பாட்ஷா', 'அருணாச்சலம்' ஆகிய படங்களுக்குப் பின்னணி இசை அமைத்தது மட்டுமின்றி, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான 'ஜோடி' படத்திற்கும் பின்னணி இசை அமைத்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இசையுலகிற்கு பங்களித்து வந்த சபேஷின் மறைவு, திரைப் பிரபலங்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications