“ஜக்குபாய்" படம் தோல்விக்கு காரணமே சரத்குமாரோடு இருந்த “அந்த" பிரபலம் தான்! கேஎஸ் ரவிக்குமார் ஓப்பன்
சென்னை: இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தான் இயக்கிய "ஜக்குபாய்" திரைப்படம் எதனால் தோல்வி அடைந்தது என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியின் போது நடிகர் சரத்குமார் பக்கத்தில் இருக்கும் போதே, சரத்குமார் உடன் இருந்த ஒரு நபர்தான் ஜக்குபாய் திரைப்படம் தோல்வியடைய காரணமாக இருந்தது என்று கே.எஸ் ரவிக்குமார் பேசியது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் நடிகர் சரத்குமார் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதிலும் இவர்கள் இருவருடைய கூட்டணியில் வெளியான சேரன் பாண்டியன், நட்புக்காக, பாட்டாளி, ஊர் மரியாதை, புரியாத புதிர் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அந்த வரிசையில் ஜக்குபாய் திரைப்படமும் இணைந்திருக்க வேண்டியது. ஆனால் ஒரு சிலரால்தான் இந்த திரைப்படம் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கே.எஸ் ரவிக்குமார் பேசி இருக்கிறார். அதில் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில் திரைப்படங்களை பொருத்தவரையில் நாம் நினைப்பதை அவ்வளவு சீக்கிரமாக கதையாக கொண்டு வந்து விட முடியாது.
உள்ளே ஏகப்பட்ட பிரச்சனைகள் நடைபெறும். அதையெல்லாம் தாண்டி ஒரு படம் வெற்றி அடைவது என்பது பெரிய கஷ்டம் தான். வெளியே ஒரு படமாக ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் அதற்குள் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும். அந்த மாதிரி தான் நான் இயக்கி நடித்த பல திரைப்படங்களில் பல பிரச்சனைகளை நான் அனுபவித்து இருக்கிறேன். அதில் ஜக்குபாய் திரைப்படத்தில் நடந்ததை மறக்க முடியாது.
அந்த திரைப்படத்திற்கு வழக்கமாக நான் உருவாக்குவது போன்று தான் கதை, பாடல், கிளைமேக்ஸ் என எல்லாவற்றையும் உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் கதை வெளியாவதற்கு இரண்டு நாளுக்கு முன்பு சரத்குமார் அணியில் இருந்த ஒரு நபர் அந்தப் படத்தை இணையத்தில் அப்லோடு செய்து விட்டார். அதை பலரும் பார்த்து விட்டார்கள்.
பிறகு அந்த நேரத்தில் கலைஞர் ஆட்சி என்பதால் கலைஞருக்கும் சரத்குமாருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததால் அவரிடம் சொல்லி படத்தை வெளியிட்டவரை கைது செய்து விட்டோம். ஆனால் அந்த நபரை பற்றி நான் இப்போது சொல்ல விரும்பவில்லை.. ஆனாலும் அந்த நபர் செய்த செயலால் தான் இந்த படம் தோல்வியில் முடிந்தது என்று சொல்லலாம்.
காரணம் நான் ஒரு கதை யோசித்து அதன்படி மொத்த படத்தையும் எடிட் செய்து கொடுத்திருந்தேன். ஆனால் அது இணையத்தில் வெளியாகி விட்டதால் அப்படியே வெளியிட முடியாது என்று அதில் சில விஷயங்களை கட் பண்ணி சேர்த்து மாற்றி பார்த்திருந்தார்கள். அதனால் அந்த படத்தின் கதையே மாறிவிட்டது. என்னுடைய கதைப்படி கதாநாயகன் ஒரு இடத்திற்கு போகிறார். அங்கு ஒரு பெண்ணை பார்க்கிறார்.
அந்த பெண்ணின் பிரச்சனையில் அவருக்கு உதவி செய்கிறார். பிறகு காதல் என்ற மாதிரி கதை இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக எடிட் செய்து மாற்றியதில் ஆரம்பத்திலேயே அந்த பெண்ணோடு டூயட் பாடுவது போன்று காட்சி மாறிவிட்டது. இதனால் கதையிலேயே சில குழப்பம் வந்துவிட்டது என்று கே.எஸ் ரவிக்குமார் பேசி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications