விஜய் சேதுபதி பேச்சுக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த வித்தியாசமான விளக்கம்.. பிக் பாஸ் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி விஜய் சேதுபதி பேசியது இன்னும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வேலூரில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட விஜர்சன ஊர்வலத்தில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ஜி விஜய் சேதுபதி பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஏற்கனவே விஜய் சேதுபதி பேசியதற்கு தவெக கட்சியினர் மட்டுமல்லாமல் நடிகை அம்பிகா உட்பட ஒரு சில நடிகர்களும், நடிகைகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி விஜய் சேதுபதி பேசியது தற்போதைய அரசியல் சூழ்நிலையை விமர்சிப்பது போல இருக்கிறது என்பதுதான் அனைவருடைய வாதமாக இருக்கிறது. விஜய் சேதுபதி அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் என்றால் பொறுப்பு கேள்விகள் வரும்போது பழியை தூக்கி எதிர்க்கட்சி மீது போட்டுவிட்டு தெரிக்க ஓட கூடாது என்று சொல்லி இருந்தார்.

Director Mohan G

இயக்குனர் மோகன் ஜி பேட்டி

உடனே விஜய்யை தான் அவர் மறைமுகமாக பேசிவிட்டார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜய் சேதுபதியிடம் கருத்து இருந்தால் அதை நேரடியாக முதல்வரை பார்த்து சொல்ல வேண்டும். நாங்களும் கருத்து சொல்கிறோம் எங்களுடைய கருத்துக்களை தைரியமாக நேரடியாக சொல்கிறோம். அதை விட்டுவிட்டு தனியார் நிகழ்ச்சியை வைரலாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதல்வரை பயன்படுத்தக்கூடாது. அது மிகப்பெரிய தப்பு.

விஜய் சேதுபதி பற்றிய விமர்சனம்

இதற்கு முன்பு நடந்த ஆட்சியில் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசும்போது அரசை வெகுவாக பாராட்டினார். அதற்கு முன்பு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆட்சியை விமர்சித்து இருந்தார். இன்று விஜய் ஆட்சியில் இருக்கிறார் அவரை மிகவும் கீழே இறக்கி ட்ரோல் செய்து இருக்கிறார் விஜய் சேதுபதி. இதிலிருந்து அவர் திமுககாரர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. விஜய் சேதுபதி திமுகவில் சேர்ந்தவர் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது. நான் மக்களில் ஒருவராக தான் பேசுகிறேன் என்று கூறினார்.

பிறகு லண்டனில் நடிகர் அஜித்குமார் தமிழக முதல்வர் விஜய் சந்தித்தது குறித்த கேள்விக்கும் பதில் கொடுத்திருந்தார். அவங்க ரெண்டு பேரும் சந்தித்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான். அஜித் ரசிகர்கள் அத்தனை பேரும் பக்குவப்பட்டவர்கள். குடும்பம், வேலை என தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அஜித் விஜய் சந்திப்பு

அஜித் சார் படம் வரப்ப மட்டும்தான் அஜித ரசிகர்கள் எல்லாம் வெளியே வருவார்களே தவிர மத்த நேரங்களில் அவங்கவங்க குடும்பத்தை பார்த்துட்டு இருக்காங்க. இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு புகைப்படம் கொடுத்தது மகிழ்ச்சி தான். அவரை விமர்சிக்கிறவங்க எல்லாம் அவரோட உண்மையா ரசிகரா இருக்க முடியாது. அஜித்தை விமர்சிப்பவர்கள் ஏதாவது ஒரு கட்சியின் போர்வையில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் அதை அப்படித்தான் பார்க்கிறேன் என்று கூறினார்.

ஆன்மீக படம்

கடைசியாக ஆன்மீகம் சார்ந்த வெப் சீரிஸ் தமிழில் வெளியாக வாய்ப்புள்ளதா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டிருந்தனர். அப்போது கடவுள் சார்ந்து ஒரு படம் எடுத்தாலே எவ்வளவு எதிர்ப்பு உள்ளது. இந்த ஆட்சியில் என்ன பண்ண போறாங்கன்னு இனிமேதான் தெரியும். கடந்த ஆண்டு நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். ஒரே ஒரு சாமி பாட்டு வச்சதுக்கு திரௌபதி 2 படத்துக்கு அவ்வளவு நெருக்கடி. அந்த படத்துக்கு எதிராக பேசி நான் படமே பண்ண கூடாது என்ற அளவுக்கு ஆக்கிவிட்டனர் என்று கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+