குஷ்பூவை காதலிக்க வைப்பதற்காக நடிகர் பாண்டியராஜன் லாஜிக்காக செய்த செயல்..ஹிட் அடித்த காரணம் இதுதானா?
சென்னை: நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் பாண்டியராஜன் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
காமெடி நடிகராக இருக்கும் பாண்டியராஜ் தன்னை குஷ்பூ காதலிப்பது போன்ற காட்சியில் எப்படி நடிக்க வைத்தேன் என்று மனம் விட்டு பேசி இருக்கிறார்.
கோபாலா கோபாலா திரைப்படத்தில் தன்னுடைய காதல் ட்ரக் எப்படி வேலை செய்தது என்பது பற்றி அவர் விளக்கி இருக்கிறார்.

நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பிறகு கன்னி ராசி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்தான் பாண்டியராஜன். ஆனால் இப்ப வரைக்கும் இவர் ஒரு இயக்குனர் என்பதை விடவும் நகைச்சுவை நடிகராக தான் பலருக்கும் பரிட்சயம்.
இவருடைய இரண்டாவது திரைப்படமான ஆண்பாவம் திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் அவரது உடல் பாவனைகள் நகைச்சுவைக்கு ஏற்ப இருப்பதாலும் அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடிக்காமல் தொடர்ந்து நகைச்சுவை கதாநாயகன் ஆகவே நடித்து வந்தார். படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்தாலும் கூட அதுவும் நகைச்சுவையாக பார்ப்பவர்களை கவர்ந்து வந்தது.

இந்த நிலையில் தான் கோபாலா கோபாலா என்கிற படத்தில் அவருக்கு ஜோடி ஆக குஷ்பூ நடித்திருந்தார். அப்போது குஷ்பூ மிகப் பிரபலமான நடிகையாக இருந்தார். குஷ்பு பாண்டியராஜை காதலிப்பது போன்ற காட்சி வைக்க வேண்டும் என்றும் ஆனால் அது மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் அப்போது ரொம்பவே யோசித்து இருக்கிறார். அடியாட்களை அடித்து அல்லது அழகால் அவர் குஷ்புவை இம்ப்ரஸ் செய்வது போன்று காட்சி வைக்க முடியாது என்று நினைத்திருக்கிறார்கள்.
அப்போது ரொம்பவே யோசித்த பாண்டியராஜன் குஷ்பு உடன் லிப்டில் மாட்டிக்கொள்வது போன்ற ஒரு காட்சியை வைத்து அதில் லிப்டிலேயே சமைத்து குஷ்புவிற்கு கொடுத்து அவரை ஈர்த்துவிடுவார். கோபாலா கோபாலா படத்தில் அது மிகவும் பிரபலமான காட்சியாகவும் அமைந்திருக்கிறது. அந்த காட்சியால் மக்களும் குஷ்பு பாண்டியராஜனை காதலிப்பதை ஏற்றுக் கொண்டனர் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பாண்டியராஜ் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications