விஜய்யால் சிலர் இறந்தே போயிட்டாங்க! அரசியலுக்கு போக பிளான் இதுதானா? இயக்குனர் பவித்ரன் பேட்டி
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் அவருடைய சினிமா வாழ்க்கை குறித்தும் இயக்குனர் பவித்ரன் ஃபிலிமிபீட் தமிழுக்கு பிரத்தியோகமாக பேட்டி அளித்திருக்கிறார். அதில் விஜய்யால் பல ப்ரொடியூசர்கள் பாதிக்கப்பட்டதாக பவித்ரன் கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் முன்னணி நடிகராக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கோடிகளில் கிடைக்கும் சம்பளத்தை விட்டு அரசியல் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் கட்சி தொடங்கிய போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். தன்னுடைய சொந்த பணத்தால் விஜய் பல மாணவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அது குறித்தும் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

சமீபத்தில் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகு அந்த கொடி குறித்து பலர் பிரச்சனை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் பவித்ரன் விஜய் குறித்து ஃபிலிமிபீட் தமிழில் பேசி இருக்கிறார். அதே நேரத்தில் பவித்ரன் பல திரைப்படங்களை இயக்கி, தயாரித்து, எழுத்தாளராக இருந்திருக்கிறார். அதிலும் வசந்தகால பறவை, சூரியன், ஐ லவ் இந்தியா, கல்லூரி வாசல், திரு மூர்த்தி, மாட்டுத்தாவணி போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
இந்த நிலையில் பவித்ரன் விஜய் குறித்து இப்போது பேசியது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அதில் பவித்ரன் பேசுகையில் நான் விஜய்யை குழந்தையாக இருக்கும்போதே பார்த்து இருக்கிறேன். நான் இயக்குனராக வருவதற்கு முன்பு இயக்குனர் எஸ்.கே சந்திரசேகரனுடன் பணியாற்றி இருக்கிறேன். அப்போ விஜய் ஏழாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நடிகை ராதிகாவிற்கு தம்பியாக "இது எங்கள் நீதி" படத்தில் விஜய் நடித்திருந்தார்.
அவரை கூப்பிடறதுக்காக நாங்க ஸ்கூலுக்கு போவோம். சூட்டிங் வரமாட்டேன் என்று ரொம்ப அடம்பிடிப்பாரு. காரணம் அவங்க அப்பா சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விஜய் ஏதாவது தப்பு செய்துவிட்டால் உடனே அடித்து விடுவார். எல்லோர் முன்பும் திட்டுவார். இது விஜய்க்கு பிடிக்காது அதனாலயே நான் நடிக்க வரவில்லை என்று சொல்வர் பிறகு எப்படியோ அந்த படத்தை நடித்து முடித்துவிட்டார். நான் அப்போது இருந்தே விஜயை பார்த்திருக்கிறேன்.
விஜய் எந்த முடிவு எடுத்தாலும் நன்றாக யோசித்து எடுப்பார். அதே நேரத்தில் எஸ் ஏ சந்திரசேகரின் ஒழுக்கமான வளர்ப்பு விஜய்க்கு பெரிய ஒரு பலம். ஆனாலும் இப்போ அவர் சினிமாவில் இனி நடிக்கவில்லை அரசியலுக்கு போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது எதற்காக என்று எனக்கு தெரியவில்லை. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று போயிருக்கிறாரா?
அல்லது இப்போ முன்னணி நடிகராக கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தாலும் அரசியலில் ஜெயித்து வந்துவிட்டால் ஆயிரம், இரண்டாயிரம் கோடிக்கு மேலே வருமானம் வரும் என்று அவர் யோசிக்கிறாரா? என்று தெரியவில்லை. விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அவரை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ப்ரொடியூசர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்.
விஜய் உடைய கால்ஷீட்டுக்காக பலர் காத்திருந்தே இறந்து போய் விட்டார்கள். ஒரு சில ப்ரொடியூசர்கள் விஜய்யால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த மாதிரி பாதிக்கப்பட்ட ப்ரொடியூசர்களை கூப்பிட்டு அவர்களுக்கு ஒரு நான்கு படம் நடித்துக் கொடுக்கலாம். அப்போ விஜய் உடைய மார்க்கெட் இன்னும் பிரபலமடையும். ஆனால் அதை விட்டுட்டு யாரோ ஒருவர் குடித்து ஹாஸ்பிடலில் கிடக்கிறார் என்று என்று அவரைப் போய் பார்த்தால் அது சரியா வருமா?
விஜய் அரசியலுக்கு எதற்காக போகிறேன் என்று முடிவெடுத்திருக்கிறார் என்று இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது. மக்கள் சேவையை விட கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்பதற்காக கூட அவர் அரசியல் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கலாம். ஆனாலும் அவர் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் அவரால் பாதிக்கப்பட்ட ஒரு நான்கு ப்ரொடியூசர் களுக்கு அவர் படம் பண்ணி கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று அந்த பேட்டியில் பவித்ரன் பேசியிருக்கிறார். பவித்ரன் விஜய் பற்றி பேசியது சரிதானா? அல்லது அவருடைய தனிப்பட்ட கருத்து தவறு என்று நீங்க நினைக்கிறீங்களா? உங்க கருத்தை சொல்லுங்க பாஸ்.












Click it and Unblock the Notifications