"கலாச்சார சீரழிவு! ஆபாச படங்களே மேல்!" பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்'டை சாடிய பேரரசு: குமுறும் சினிமா உலகம்
சென்னை: தமிழ் சினிமாவில் ஊர்ப் பெயர்களை மையப்படுத்தித் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பேரரசு, தற்போது புதிய தலைமுறைப் படங்கள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக, நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்து தீபாவளிக்கு வெளியான 'டியூட்' திரைப்படத்தின் பெயரைச் சொல்லாமல், அந்தப் படத்தின் சர்ச்சைக்குரியக் கதைக்களத்தை மேடையில் கடுமையாக விமர்சித்துள்ளார். 'டியூட்' படம் 100 கோடி வசூல் செய்திருந்தாலும், சினிமா கலைஞர்களின் மனக்குமுறலுக்கு ஆளாகியிருப்பது தற்போது சினிமா வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

டியூட் Vs சினிமா சமூகம்
புதுமுகம் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படம், 2k கிட்ஸ்கள் மத்தியில் ஒருவித கொண்டாட்டத்தைப் பெற்றிருந்தாலும், பலரும் இதன் கதைத் தேர்வை பங்கம் செய்து மீம்ஸ் போட்டு கலாய்க்கவும் செய்கிறார்கள்.
மீசை ராஜேந்திரனின் கருத்து
சமீபத்தில் நடைபெற்ற 'வள்ளுவன்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் மீசை ராஜேந்திரன், 'டியூட்' படத்தை நேரடியாக விமர்சித்து, அதில் "கலாச்சார சீரழிவு" அதிகமாக இருக்கிறது என்றும், அது நமது சினிமாவை பெருமளவில் பாதிக்கும் என்றும் கூறியிருந்தார்.
பேரரசுவின் குமுறல்
மீசை ராஜேந்திரனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசுவின் வார்த்தைகள், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் கவலையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. "எந்தக் கதையையும் படமாக எடுக்கலாம். காமெடி, காதல், ஆக்ஷன், த்ரில்லர், ஜாதி படங்கள் எடுக்கலாம். ஆனால், மக்களைச் சீரழிக்கும் வகையில் படம் எடுக்கக் கூடாது," என்றுப் பிரதீப் ரங்கநாதன் படத்தின் பெயரைச் சொல்லாமல் விளாசினார்.
அதிரடிப் பேச்சு
"கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் படங்களாக எடுக்காதீர்கள். அதற்குப் பதிலாக ஆபாசப் படமாக எடுத்துவிட்டுப் போய்விடலாம்! அப்படி படம் எடுக்கும்போது நம்மாளு 'ஏ' சான்றிதழ் கொடுப்பான். இளைஞர்கள் தடுக்கப்படுவார்கள். ஆபாசத்தை, காமத்தை விரும்புபவர்கள் போய் படத்தைப் பார்ப்பார்கள். அதனால் கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்தும் படங்களாக எடுக்காதீர்கள்."
கலைக்கு செய்யும் துரோகம்
தொடர்ந்து பேசிய பேரரசு, நல்ல படம் என்று சொல்லிவிட்டு, கலாச்சார சீரழிவைக் காட்டுவது கலையுலகிற்குச் செய்யும் துரோகம் என்று ஆவேசப்பட்டார். "நல்ல படம்னு சொல்லி உள்ளே வந்து உட்காரும் போது, அதில் கலாச்சாரச் சீரழிவைக் காட்டினால் அது நமது கலைக்கே நாம் செய்கிற துரோகம். அப்படி எடுத்துப் பிழைக்க வேண்டுமென்றால், அதுக்கு வேறத் தொழில் இருக்கிறது. ஒற்றுமையையும் கலாச்சாரத்தையும் வலியுறுத்தும் படங்களாக எடுங்கள். வன்முறையைத் தூண்டுவது, காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்துவது போன்று படம் எடுத்தால் அது கலை சேவை இல்லை; துரோகம் ஆகும்" என்றார்.
வசூல் மட்டுமே குறிக்கோளா
'டியூட்' படம் மோசமான விமர்சனங்களைச் சந்தித்தாலும் 100 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டிய பேரரசு, "பணம் சம்பாதிக்க இது போன்றப் படங்களை எடுக்க வேண்டாம். அதற்கு வேறு வழி இருக்கிறது" என்றுத் தெரிவித்தார். பேரரசுவின் இந்தக் குமுறல், பணம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், கலை சேவை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் படம் எடுக்க வேண்டும் என்ற கருத்தை வலுவாக வலியுறுத்துகிறது.
ஒருபக்கம், 'டியூட்' போன்ற சர்ச்சைக்குரிய படங்கள் திரையரங்குகளில் வெற்றிக் கொடி நாட்ட, மறுபக்கம் விஜய் ஆண்டனியின் 25வது படமான 'சக்தி திருமகன்' திரைப்படம், ஓடிடியில் வெளியாகி விமர்சகர்களாலும் (இயக்குநர் ஷங்கர் உட்பட) ரசிகர்களாலும் 'ரொம்ப நல்லா இருக்கே!' என்றுப் பாராட்டுகளை அள்ளி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications