திரிஷா ஜாதகத்தில் நான் கணித்த எல்லாமே நடந்து விட்டது.. அடுத்து இதுதான்! இயக்குனர் ஓபன்.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் 25 வருஷங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக தொடர்ந்து பயணித்து வரும் திரிஷா குறித்து இயக்குனர் பிரவீன் காந்தி பேசியிருக்கும் தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக திரிஷா ஒரு நாள் முதலமைச்சர் ஆவர் என்று சொல்லி இருப்பது ரசிகர்களிடம் பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

இயக்குனர் பிரவீன் காந்தி பேட்டி

சமீபத்தில் பிரவீன் காந்தி கொடுத்த பேட்டியில் திரிஷாவின் சினிமா அறிமுகம் முதல் தனது ஜோதிட கணிப்பு வரை பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில், 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தை தான் இயக்கிய போது நாயகியுடன் இருக்கும் காட்சிகளுக்கு அழகான மாணவிகள் வேண்டும் என்று பிரவீன் காந்தி எதிர்பார்த்து இருந்தாராம். அப்போது சர்ச் பார்க் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த திரிஷா கோடை விடுமுறையின் சூட்டிங் வந்தாராம்.

Trisha Praveen Gandhi vijay

திரிஷாவின் சினிமா அறிமுகம்

தாரா உமேஷ் என்பவர் மூலமாக திரிஷா அறிமுகமானாராம். அவரை பார்த்ததும் ஒரு பெரிய கதாபாத்திரமே கொடுக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் பெரிதாக இல்லை என்று அவர் கூறிவிட்டார். சினிமா நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ளத்தான் வந்தேன். என்றும் சொன்னார், அவருடைய அம்மாவுக்கும் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. சினிமாவில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு எக்ஸ்பீரியன்ஸ்காக பார்த்துவிட்டு போகலாம் என்று எண்ணத்தில் திரிஷா அப்போது வந்திருந்தார், ஆனால் அதுவே அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது என இயக்குனர் பிரவீன் காந்தி பழைய விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

ஜோடி படப்பிடிப்பு முடித்த பிறகு இயக்குனர் பிரியதர்ஷனிடம் திரிஷாவை பற்றி தான் சொன்னதாகவும் அதற்கு பிறகு லேசா லேசா படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் பிரவீன் காந்தி கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து திரிஷா மாடலிங் துறைக்கு போய்விட்டார். தொடர்ந்து மிஸ் சென்னை பட்டம் வென்றார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு அவர் சினிமாவில் டாப் இடத்திற்கு போய்விட்டார் என்று பிரவீன் காந்தி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.

Trisha Praveen Gandhi vijay

திரிஷா ஆரம்ப காலம்

அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் சொன்னார் அதாவது திரிஷா ஜோடி படத்திற்கு சூட்டிங் வந்தபோது அவருடைய ஜாதகத்தை பிரவீன் காந்தி பார்த்தாராம். அந்த சமயத்தில் பிரவீன் காந்திக்கு ஜாதகம் பார்க்கும் பழக்கம் இருந்ததால் திரிஷாவின் ஜாதகத்தை வாங்கி கணித்திருக்கிறார். பிறகு திரிஷாவின் அம்மாவிடம் இப்போதைக்கு உங்க பொண்ணு சினிமாவில் ஆர்வம் இல்லை என்று சொல்லுறாங்க, ஆனா சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார், நீண்ட காலம் முன்னணி நடிகையாக இருப்பார் என்று சொன்னேன் அது அப்படியே நடந்து விட்டது என பிரவீன் காந்தி கூறியிருக்கிறார்.

திரிஷாவின் ஜாதக அமைப்பு

அதேபோல இன்னொரு விஷயம இருந்தது, அதாவது இவர் ஒருநாள் முதலமைச்சர் ஆகும் அளவுக்கு யோகம் கொண்டவர் என்று அப்போதே நான் சொல்லி இருந்தேன். இப்போது நான் சொன்னபடி அவர் பல வருஷங்களாக முன்னணி நடிகையாகவே இருக்கிறார், அதேபோல முதலமைச்சர் ஆவாரா? என்பதை காலம்தான் சொல்ல வேண்டும் என்று சிரித்தப்படியே பிரவீன் காந்தி பேசியிருக்கிறார்.

முதல்வராகும் திரிஷா

கடந்த சில நாட்களாகவே திரிஷாவின் பெயர் அரசியல் விவாதத்தில் தொடர்ந்து இடம் பிடித்து வரும் நிலையில் இந்த பேட்டியும் கவனம் பெற்று இருக்கிறது. ஏற்கனவே மதுரையில் திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டினர். பிறகு அரசியல் மேடைகளிலும் அவருடைய பெயரை சுற்றிய சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திரிஷா முதலமைச்சர் ஆவார் என்று பிரவீன் காந்தி சொன்னதும் தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட்ஸ் கொடுப்பதை பார்க்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+