ஸ்ருதி நாராயணன் படத்துக்கு தியேட்டரே கிடைக்கல! தப்பு செய்யாதவங்க யாரு? ஆதங்கப்பட்ட நடிகர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா கேரக்டரில் நடித்த பிரபலம் அடைந்த ஸ்ருதி நாராயணன் கதாநாயகியாக நடித்திருக்கும் "கட்ஸ்" திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்திருக்கும் ரங்கராஜன் ஸ்ருதி நாராயணன் குறித்து சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் நாராயணன் நடிக்கும் படத்திற்க்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றும் தப்பு செய்யாதவங்க இங்கே யாரு என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சின்னத்திரை ரசிகர்களை அதிகமாக கவர்ந்த சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ரோகிணி எப்போது விஜயா குடும்பத்திடம் மாட்டுவார் என்ற கேள்விதான் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் ரோகிணி குடும்பத்திடம் சிக்கும் நேரத்தில் இந்த சீரியல் பற்றிய இன்னொரு செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது இந்த சீரியலில் ரோகிணியின் பிரண்டாக வித்யா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கி இருந்தார். அந்த வீடியோவில் இருப்பது அந்த நடிகை தானா? இல்லையா? என்ற பெரிய குழப்பமும் எழுந்தது.

ஆபாச வீடியோ சர்ச்சை
ஸ்ருதி நாராயணன் ஆடை இல்லாமல் ஆபாசமாக இன்னொரு நபரிடம் பேசுவது போன்ற அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியானது பெரிய அளவில் பேசப்பட்டது. அதே நேரத்தில் ஸ்ருதி நாராயணன் அந்த வீடியோ பற்றி தெளிவான எந்த பதிலும் கொடுக்கவில்லை, போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது, ஆனால் சோசியல் மீடியாவில் தன்னை பற்றி வரும் நெகட்டிவ் கமாண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பகிர்ந்து கொண்டே இருந்தார்.
ஸ்ருதி நாராயணன் பற்றி இயக்குனர் பேட்டி
அதேபோல அவர் கதாநாயகியாக நடித்த "கட்ஸ்" என்ற திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளிலும் கலந்து கொண்டார். கட்ஸ் திரைப்படத்தை ரங்கராஜ் என்பவர் தான் இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார். கதை படி அந்த திரைப்படத்தில் அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டரில் ரங்கராஜ் நடித்திருக்கிறார். அதில் அப்பா கேரக்டருக்கு ஜோடியாக கிராமத்து பெண்ணாக ஸ்ருதி நாராயணன் நடித்திருக்கிறார்.
கட்ஸ் பட இயக்குனர் பேட்டி
இந்த நிலையில் இந்த படம் குறித்து ரங்கராஜ் சமீபத்தில் பேசும்போது, "நான் பல ஆண்டுகளாக போராடி தான் இந்த படத்தை எடுத்துள்ளேன். ஆனால் முதலில் சொன்ன தேதியில் இந்த படம் வெளியாகவில்லை. கமல்ஹாசனின் தக் லைஃப் படம் வெளிவந்ததால் எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. இப்போது இந்த வாரம் 77 தியேட்டர்களில் தான் ரிலீஸ் ஆகிறது. ஒரு படத்தை பார்க்காமலே குறைவான தியேட்டர் ஒதுக்குகிறார்கள். கட்ஸ் படத்தில் ஸ்ருதி நாராயணன் நல்ல நடிப்பை தந்து இருக்கிறார்.
நடிகர் கேள்வி
ஸ்ருதி நாராயணன் இப்போது சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் இந்த பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் ஒரு சிங்கிள் ஷாட்டில் பெர்பார்மன்ஸில் கலக்கி இருக்கிறார். இந்த படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். "இங்கே தவறு செய்யாத மனிதன் யாரும் கிடையாது. அவருக்கு ஒரு அவப்பெயர் வந்து இருக்கிறது, அவரை வாழ விடுங்க!" என்று ரங்கராஜன் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதுபோல ஸ்ருதி நாராயணன் சோசியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் படி போஸ்ட் போட்டு கொண்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications