சின்னத்திரையில் அறிமுகமாகும் விஜயின் அப்பா எஸ். ஏ சந்திரசேகர்!? யாருடைய தயாரிப்பில் தெரியுமா?

இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகரன் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் எஸ். ஏ சந்திரசேகர் சின்னத்திரையில் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் சீரியலில் இயக்குனர் சந்திரசேகர் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் தற்போது பரவி வருகிறது.

அந்த புதிய சீரியலை நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பல திறமை கொண்ட இயக்குனர்

பல திறமை கொண்ட இயக்குனர்

திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கும் டைரக்டர் எஸ் ஏ சந்திரசேகர் பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது. ஏற்கனவே அவருக்கும் அவருடைய மகன் நடிகர் விஜய்க்கும் பிரச்சனை என்கிற பல தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், தற்போது அவர் சின்னத்திரை சீரியலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பல ஹிட் திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, கண்டனம் ,கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

நடிப்பும் இருக்கிறது

நடிப்பும் இருக்கிறது

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் வெற்றி,நான் சிகப்பு மனிதன் போன்ற பல ஹிட் திரைப்படங்கள் இவரை வேற லெவலில் ரசிகர்களின் மத்தியில் கொண்டு சேர்த்தது. இவர் இயக்கிய ஒரு சில திரைப்படங்களில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கவும் செய்கிறார். அது மட்டுமல்லாமல் கடைசியாக இவர் டிராபிக் ராமசாமி என்கிற திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக காட்டி இருக்கிறார். ஒரு இயக்குனருக்கு நடிக்கவும் தெரியும், தயாரிக்கவும் தெரியும் என்று பல்வேறு முகங்களை கொண்ட இவர் தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முக்கியமான கேரக்டர்

முக்கியமான கேரக்டர்

விஜய் டிவியில் விரைவில் வெளியாக இருக்கும் ஒரு சீரியலை நடிகை ராதிகா சரத்குமாரின் சொந்த நிறுவனமான ரேடன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அந்த சீரியலில் எஸ்.ஏ சந்திரசேகர் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த சீரியலில் சந்திரசேகர் தான் முக்கியமான கேரக்டராகவும் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து சின்னத்திரை ரசிகர்கள் இவரை வரவேற்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

ஏற்கனவே திரைப்படங்களில் நடித்து பல நடிகைகள் நடிகர்கள் அங்கே தங்களுக்கு வாய்ப்பு குறைந்த போது சின்னத்திரையை நோக்கி பயணிப்பது புதியது அல்ல. அது காலம் காலமாக நடந்து வருவது தான். ஆனால் பிரபல இயக்குனராகவும் நடிகர் விஜய்யின் அப்பாவாகவும் இருக்கும் எஸ் ஏ சந்திரசேகர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கிறார் என்பது பலருக்கும் நம்ப முடியாததாக இருக்கிறது. ஆனாலும் சின்னத்திரை சீரியல்களிலும் தங்களுடைய திறமையையும், கேரக்டரையும் ரசிகர்களின் மத்தியில் நேரடியாக கொண்டு சேர்க்க முடியும் என்பது பலர் புரிந்து கொண்ட நிலையில், தற்போது அதே வழியை எஸ்.ஏ சந்திரசேகரும் பயன்படுத்தி கொள்வாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரைக்கும் எஸ்.ஏ சந்திரசேகர் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் குறிப்பிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+