நட்புக்காக என்ன வேணாலும் செய்வாரு! எமோஷனலாக குஷ்பூ சொன்ன வார்த்தை! நடுங்கிப் போன விஷால்!
சென்னை: இயக்குனர் சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா திரைப்படம் பல வருடங்களுக்குப் பிறகு வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இந்த திரைப்படத்திற்கான பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விஷால் குறித்து நடிகை குஷ்பு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் நேற்றிலிருந்து நடிகர் விஷால் உடைய வீடியோ தான் வைரலாகி கொண்டிருக்கிறது. நேற்று நடந்த மதகஜராஜா திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கை நடுக்கத்துடன் விஷால் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய உடல் நலத்திற்கு என்ன ஆச்சு என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் விஷால் குறித்து சில ட்ரோல்களும் வலம் வருகிறது. இந்த நிலையில் விஷால் குறித்து நடிகை குஷ்பு அந்த நிகழ்ச்சியில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

காமெடி, சென்டிமென்ட் மற்றும் புதுமையான படங்கள் எடுத்து குவிக்கும் சுந்தர் சி இயக்கத்தில் மதகஜராஜா திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த திரைப்படம் தற்போது வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதற்கு முன்னோட்டமாக ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, சுந்தர் சி, குஷ்பூ போன்ற பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய விஷால் கை நடுக்கத்துடன் பேசி இருந்தார். விஜய் ஆண்டனி உட்பட சிலர் கை தாங்கலாக பிடித்து அமர வைத்தனர்.
அப்போது விஷாலுக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் அதனால் அவர்களுக்கு குளிர் அதிகமாக இருந்ததால் அப்படி நடுக்கமாக இருந்தார் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் இந்த திரைப்படத்தில் தான் பாடிய பாடல் எப்படி உருவானது என்று விஷால் கலகலப்பாக பேசியிருந்தார்.
அதாவது அந்த திரைப்படத்திற்கு பாடல் உருவாக்கும் போது விஜய் ஆண்டனியும் சுந்தர் சி யும் பேசிக் கொண்டிருந்தார்களாம். இந்த படத்தில் பாடல் பாடும் பாடகர் இதற்கு முன்பு எந்த பாடலும் பாடி இருக்கக் கூடாது. அதுபோல இந்த படத்திற்கு பிறகு அவருடைய வாழ்க்கையில் அவர் பாடலே பாடவும் கூடாது, அப்படிப்பட்ட ஒரு பாடகர் தான் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களாம்.
அந்த நேரத்தில் விஷால் கதவை திறந்ததும் இவர்தான் இந்த படத்தில் பாடப் போறார் என்று சொல்லிவிட்டார்கள். இந்த படத்தில் அந்த பாடல் கடைசியாக வரப்போகிறது. அது என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கல. இந்த பாடல் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகும் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் இணையத்தில் வைரலானது எனக்கு பெரிய அதிசயமாக இருந்தது.

அது இப்போது மீண்டும் வைரலாக தொடங்கி இருக்கிறது என்று விஷால் பேசி இருந்தார். அதைத்தொடர்ந்து விஷாலுக்கு மேடையில் குஷ்பூ இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். விஷால் அங்கிருந்தவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது பின்பக்கமாக வந்து விஷாலின் கண்களை மூடினார்.
அப்போது விஷால் குஷ்புவை பார்த்ததும் சந்தோஷத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டார். அதற்கு பிறகு விஷால் பற்றி குஷ்பூ பேசுகையில் விஷால் நண்பன் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறவரு. நாளைக்கு ஒரு பிரிண்ட் வந்து மலையில் இருந்து குதிங்க விஷால் என்று சொன்னால் குதிச்சிடுவார். கேட்டா அவன் குதிக்க சொன்னான்னு சொல்லுவாரு.
திருப்பி ஏன்னு கூட கேட்க மாட்டாரு. அந்த மாதிரியான ஒரு ஆள் தான் விஷால். இந்த படத்திற்கு பிறகு நிறைய படம் பண்ணாங்க. ஆரம்பத்தில் நாங்க மூணு பேரா இருந்தோம். இடையில் என்னை காணும்.. இப்போ அது ரெண்டு பேர் பிரண்ட்ஷிப்பா மாறிடுச்சு என்று பேசி இருக்கிறார்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications