Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனுஷுடன் கூட்டணி! அதுவும் இதுதான் ஆசை! லப்பர் பந்து கொண்டாட்ட நாளில் இயக்குனர் தமிழரசன் உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி, கடந்த ஆண்டு வெற்றிப் படங்களின் வரிசையில் இடம்பிடித்த 'லப்பர் பந்து' திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு, படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, தனது அடுத்த படத்தைப் பற்றிய மாஸ் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். அது வேறு யாருமல்ல, நடிப்பில் அசுரன் தனுஷ் தான்.

Tamilarasan Pachamuthu Dhanush

தமிழரசன் பச்சமுத்து

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, தனது முதல் படத்திலேயே வெற்றியை ருசித்துள்ளார். 'லப்பர் பந்து' படத்தின் மூலம், காதல், நகைச்சுவை, மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளை இணைத்து ஒரு புதுமையான கதைக்களத்தை உருவாக்கியிருந்தார். படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில், அவர் வெளியிட்ட ஒரு உருக்கமான பதிவு, அவரது பயணத்தின் போராட்டங்களையும், வெற்றியின் மகிமையையும் வெளிப்படுத்தியது.

"சினிமாவுக்குப் போக முடியுமா, உதவியாளராக முடியுமா, கதை சொல்ல முடியுமா, நடிகர்கள் ஓகே பண்ணுவார்களா?" எனத் தான் சந்தித்த அனைத்துத் தயக்கங்களையும் தனது எக்ஸ் பதிவில் அவர் வெளிப்படுத்தியிருந்தார். 'லப்பர் பந்து' படம் வெளியாகி, முதல் ஷோ முடிந்ததும் ரசிகர்கள் அளித்த வரவேற்பு, அவரது அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதிலைக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல, எல்லாமே எல்லோராலையும் முடியும்" என்று ரசிகர்கள் தனக்குக் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷ் - தமிழரசன் கூட்டணி

நடிகர் தனுஷ், இயக்குனரின் இந்த வெற்றியைப் பார்த்து வியந்து, தனது அடுத்தப் படத்திற்கான வாய்ப்பை தமிழரசனுக்கு வழங்கியுள்ளார். 'டான் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தை தயாரித்த அதே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிறது.

தனுஷ் கூட்டணி

நடிகர் தனுஷ், அசுரன், வாத்தி போன்ற படங்களில் சமூகப் பிரச்சனைகளையும், மாரி போன்ற படங்களில் அதிரடி ஆக்ஷனையும், 3, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் காதல் உணர்வுகளையும் வெளிப்படுத்தியவர். ஒரு சிறந்த நடிகராக, எந்தக் கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர். அதட்டலான கதாநாயகனாக இல்லாமல் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் தனுஷ் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை காட்டி வருகிறார்.

இயக்குனர் தமிழரசன்

லப்பர் பந்து படத்தில் நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என அனைத்தையும் சம விகிதத்தில் கையாண்ட தமிழரசன், தனுஷின் மாஸ் பிம்பத்திற்கு ஏற்ற ஒரு கதையை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடிப்பில் ஒரு ஆக்ஷன், காதல், அல்லது குடும்பப் படம் என எந்த வகையாக இருந்தாலும், அது ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு இளைஞனின் தயக்கத்தைப் போக்கி, அவருக்கு வாய்ப்பளித்த நடிகர் தனுஷின் செயல், அவரது மனிதநேயத்தைப் பறைசாற்றுகிறது. தமிழரசனின் பதிவில், "நடிப்பு அசுரனுக்கு ஆக்‌ஷன், கட் சொல்ல காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தது, இந்த கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+