சைந்தவியை “அந்த” படத்தில் ஹீரோயினியா கேட்டேன்.. ஆனால்! மறுத்த காரணம்.. வெங்கட் பிரபு உடைத்த ரகசியம்
சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு பாடகி சைந்தவியை தான் இயக்கிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கேட்டேன் ஆனால் அதற்கு அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். அதற்கு காரணம் இதுதான் என்று சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களும் நடித்து அசத்தி இருக்கிறார்கள். அதுபோல வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே இளைஞர்கள் கொண்டாடும் படமாக தான் இருக்கும்.

அதில் அதிகமாக காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்திருக்கும். வெங்கட் பிரபுவின் திரைப்படத்தில் நடிப்பதற்காக பல நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் பிரபல பாடகி சைந்தவியிடம் நடிக்க கேட்டேன் ஆனால் அவர் முடியாது என்று சொல்லி விட்டார் என்று சொன்ன காரணத்தை பற்றி ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
வெங்கட் பிரபு பிரபல இயக்குனர்களில் ஜாலியான இயக்குனர். எப்போதும் கூலாக இருக்கும் இவர் இயக்கிய சென்னை 600028 திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருமே பிரபலமடைந்திருந்தனர். அதனாலேயே இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் எடுத்து இருந்தார். ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக பாடகி சைந்தவியிடம் தான் வெங்கட் பிரபு பேசியிருந்தாராம்.

அது பற்றி அவர் பேசுகையில், எனக்கு சைந்தவியை சின்ன வயதிலிருந்தே தெரியும். அதனால் தான் நான் அவரிடம் நான் இயக்கப் போகும் சென்னை 600028 திரைப்படத்தில் நீ கதாநாயகியாக நடிக்கிறியா என்று கேட்டேன். அதற்கு சைந்தவி ஐயோ வேண்டாம் எனக்கு நடிக்கவெல்லாம் தெரியவே செய்யாது. அது வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அதற்குப் பிறகுதான் நான் வேறு நடிகையை வைத்து நடிக்க வைத்திருந்தேன்.
அந்த திரைப்படமும் வெற்றி பெற்றது. படம் வெளியான பிறகு கூட நீ இந்த படத்தில் நடிக்கவில்லை என்று ஃபீல் பண்ணுறியா என்று கேட்டேன். அதற்கு கண்டிப்பாக இல்லவே இல்லை எனக்கு நடிப்பு சுத்தமா வராது அதனால் நான் இதுக்கு ஃபீல் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை சரிகமப நிகழ்ச்சியில் நான் சிறப்பு விருந்தினராக வந்ததும் சொல்லி விடாதீர்கள் என்று என்னிடம் பேசினார்.

இது சொன்னால் கண்டன்ட் ஆகிவிடும் அதை சொல்லாதீங்க என்று சைந்தவி சொன்னார். ஆனால் நம்ம வந்ததுக்கு ஒரு கண்டன்ட் எல்லாருக்கும் கொடுத்துட்டு போக வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை சொல்லுகிறேன் என்று அவர் சொல்ல இது குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாடகி சைந்தவி பாடிய பல பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாக மாறிக்கொண்டிருக்கிறது.
இன்றைய தலைமுறைகள் விரும்பி கேட்கும் பாடல்களில் சைந்தவியின் பாடல்கள் கண்டிப்பாக இடம் பிடித்துக் கொண்டிருக்கும். அவருடைய எளிமையான மெல்லிய குரல் பாடலுக்கு அழகு சேர்க்கும் நிலையில் இவர் சென்னை 600028 திரைப்படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்திருப்பார்.

விஜயலட்சுமி இயக்குனர் அகத்தியனின் மகள் தான். விஜயலட்சுமிக்கு இந்த திரைப்படம் தான் பெயர் வாங்கி கொடுத்தது. ஆனால் இந்த திரைப்படத்தை சைந்தவி மிஸ் பண்ணியது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது இந்த திரைப்படத்தில் பாடகி சைந்தவி கதாநாயகியாக நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறீர்களா? உங்கள் கருத்தை தட்டி விடுங்க பார்ப்போம்.












Click it and Unblock the Notifications