பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள் சொல்லி வெங்கட் பிரபு போட்ட போஸ்ட்.. மனைவி இந்து கொடுத்த கமெண்ட்
சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய தம்பியான பிரேம்ஜிக்கு வாழ்த்து சொல்லி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதற்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
இயக்குனர் வெங்கட் பிரபு பல திரைப்படங்களை இயக்கிய இருந்தாலும் அதில் அதிகமான காமெடி காட்சிகள் நிறைந்திருக்கும், இளைஞர்களை கவரும் வகையில் கலகலப்பான காட்சிகள் நிறைந்ததாக இருக்கும். அதனாலயே வெங்கட் பிரபு படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

அதுபோல வெங்கட் பிரபு படம் என்றால் அதில் பிரேம்ஜி கண்டிப்பாக இடம் பிடித்திருப்பார். எப்படியாவது அதில் பிரேம்ஜியும் அவருடைய நண்பர்களும் தலையைக் காட்டி விடுவார்கள். ஒரு சில திரைப்படங்களை தன்னுடைய தம்பி பிரேம்ஜிக்காகவே வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.
சென்னை 600028 திரைப்படத்தில் தொடங்கி கடந்த ஆண்டு வெளியான கோட் திரைப்படம் வரைக்கும் பல திரைப்படங்களில் பிரேம்ஜி வந்திருக்கிறார். அதுபோல திரைப்படத்தில் பிரேம்ஜி காட்சிகள் உள்ளே வரவில்லை என்றாலும் கடைசியில் முடிவில் வணக்கமாவது சொல்லிவிடுவார். அதுபோல வெங்கட் பிரபுவின் சில திரைப்படங்களில் பிரேம்ஜி சொந்த குரலில் பாடவும் வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டுதான் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது. 45 வருடங்களாக சிங்கிளாக வலம் வந்து பிரேம்ஜிக்கு எளிமையாக தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபு தலைமையில் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. பிரேம்ஜி இந்து என்பவரை காதலித்து வந்தார். அதுவும் இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறியிருக்கிறது.
இருவருக்கும் அதிக வயது வித்தியாசம் என்பதால் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது ஆனாலும் பிரேம்ஜி திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது பலருடைய வாழ்த்தாகவும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பிரேம்ஜியும் அவருடைய மனைவியும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்திகளும் பரவி வந்தது.

ஆனாலும் இதையெல்லாம் பிரேம்ஜியும் அவருடைய மனைவியும் கண்டு கொள்வது கிடையாது. அதுபோல சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜியின் மனைவி இந்து பிரேம்ஜி செய்யும் சமையல் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். எப்படி இருந்த மனுஷன் இப்போ இப்படி மாறிவிட்டாரே என்று சிலர் சிலாகித்தாலும் சிலர் கல்யாணம் முடிந்து விட்டால் இப்படித்தான் பொறுப்பு வந்துவிட வேண்டும் என்று பாராட்டியும் வருகிறார்கள்.
இந்த நிலையில் இத்தனை வருடங்களாக சிங்கிளாக இருந்த பிரேம்ஜி திருமண வாழ்க்கையில் இணைந்த பிறகு முதல் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். தன்னுடைய கணவரின் பிறந்த நாளுக்காக இந்து விதவிதமாக பல கேக் வைத்து பிரேம்ஜிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதே போல பிரேம்ஜிக்கு வாழ்த்து சொல்லி அவருடைய அண்ணன் வெங்கட் பிரபு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிர்ந்து இருக்கிறார். அதில் பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு இருவரும் குழந்தையாக இருக்கும்போது உள்ள புகைப்படமும் இப்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு பிரேம்ஜியின் மனைவி இந்து ஹார்டின் பறப்பது போன்ற கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications