VetriMaran: மனுஷி, பேட் கேர்ளால் பட்டது போதும்! தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிய வெற்றிமாறன்!
சென்னை: கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார். இயக்குநராக இருப்பது சுதந்திரம் என்றும் தயாரிப்பாளராக இருப்பது சிரமம் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெற்றி மாறன் கூறியிருப்பதாவது: என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு படத் தயாரிப்பு என்பது மிகவும் சேலஞ்சான ஒரு விஷயம். பல நேரம் கடன் வாங்கித்தான் படம் எடுக்கிறோம். இதற்கு முன் தயாரித்த மனுஷி படம் கோர்ட்டுக்கு போனது. பேட் கேர்ள் படத்திற்கும் நிறைய சவால்கள் இருந்தன. எனவே இந்த படத்துடன் தயாரிப்பு நிறுவனத்தை மூடுகிறோம். இனி கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து படங்கள் வெளிவராது என தெரிவித்துள்ளார்.

கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை வெற்றி மாறன் நடத்தி வந்தார். "உதயம் என்.எச்.5", "பொறியாளர்", "கொடி", "லென்ஸ்", "அண்ணனுக்கு ஜே" உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக ஆன்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான "அனல் மேலே பனித்துளி" என்ற படத்தை தயாரித்துள்ளார். அண்மையில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ட்ரியாவை வைத்து "மனுஷி" என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்திருந்தது.
மோசமான விமர்சனம்
இந்த படம் மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும் கம்யூனிச கொள்கையை குழப்பம் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்குத் தொடர்ந்தார். அப்போது அந்த வழக்கு விசாரணையின் போது ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் தணிக்கை சான்றிதழ் வழங்க தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் பதில் அளித்தது.
மீண்டும் தணிக்கை
படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி வெற்றி மாறன் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் சென்சார் போர்டு, "மனுஷி" படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் தணிக்கை சான்றிதழ் என பதில் அளித்தது.
மனுஷி படத்தில் காட்சிகள் நீக்க உத்தரவு
கடந்த 29 ஆம் தேதி விசாரணையில் "மனுஷி" படத்தில் சில காட்சிகளை நீக்கி 2 வாரத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கிய கதாபாத்திரம்
அது போல் இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் "பேட் கேர்ள்". இந்த படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பேட் கேர்ள்
"பேட் கேர்ள்" படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இந்த படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. படத்தின் டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும் இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டீசர் நீக்கம்
எனவே இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி, தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
செப்டம்பர் 5 இல் ரிலீஸ்
படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இந்த படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பேட் கேர்ள் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வெற்றி மாறன் இனி தனது பட தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளார்.
மூடுவது ஏன்
அவர் கூறுகையில், "ஒரு இயக்குநராகப் படம் செய்வது எளிது. ஆனால் ஒரு தயாரிப்பாளராக இருப்பது மிகவும் கடினம் என கூறிய அவர் தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications