சிம்பு என்கிட்ட அப்போ சொன்ன விஷயம்.. இப்போ புரியுது.. ரொம்பவே மாறிட்டேன்! விக்னேஷ் சிவன் உருக்கம்
சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் டிராகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, தன்னுடைய முதல் திரைப்படத்தை தான் இயக்கும் போது சிம்பு சொன்ன வார்த்தை எனக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது, அவர் சொன்ன வார்த்தையை நான் இப்போதும் பின்பற்றுகிறேன் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை நடிகை நயன்தாராவின் கணவராக பலருக்கும் தெரிந்திருக்கும். 2கே கிட்ஸ்களுக்கு அவர் நயன்தாராவின் கணவராக தெரிந்திருந்தாலும் அவருடைய போடா போடி திரைப்படம், நானும் ரவுடிதான் திரைப்படம் பலருடைய பாராட்டையும் பெற்றது. அதிலும் தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் எழுதி பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.

ஆனால் இந்த பாடல்கள் விக்னேஷ் சிவன் எழுதியது என்பது பலருக்கும் தெரியாது. சில வருடங்களாகவே விக்னேஷ் சிவன் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. பிரதீப் ரங்கநாதனை வைத்து “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கும் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் டிராகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விக்னேஷ் சிவன் தன்னுடைய சினிமா அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டார். அதில் இந்த விழாவில் என்னுடைய நண்பர்கள் தான் இருக்கிறார்கள். பிரதீப் கூட நானும் ஒரு படம் பண்ணி இருக்கிறோம். அவரை நான் ஷார்ட் பிலிமில் இருந்து பார்த்துட்டு இருக்கிறேன்.
என் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலையில் இருக்கும் போது தான் பிரதீப்புக்கு போன் பண்ணி வேலை பார்க்கலாமா? என்று கேட்டேன். அந்த சமயத்தில் நான் மீட் பண்ணி கதை சொல்லி உருவான படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம்.
பொதுவாக நடிகர்களோட நடிப்பை வைத்து நம்ம அவங்களை கொண்டாடுவோம். அவங்க எப்படி படம் பண்றாங்கன்னு அவங்களை நம்ம ரசிப்போம். ஆனால் மற்றொரு பக்கம் அவங்க எப்படியான கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்கன்னு பாக்காமலேயே அவங்களை பின் தொடர்வோம். சிலரை பிடித்து விட்டால் தொடர்ந்து அவங்களுடைய நடிப்பு, மேனரிசம் பார்த்து அவங்களுக்கு ரசிகராகவும் மாறி இருப்போம்.
அப்படி நிறைய ரசிகர்கள் சேரும்போதுதான் அந்த நடிகர் ஸ்டாராக உருவெடுப்பாங்க. அந்த வகையில் பிரதீப் ஒரு ஸ்டார் மெட்டீரியல் என்று ஃபீல் பண்றேன். அவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருப்பாங்க. பொதுவா நான் பாடல் வரிகள் எழுதும்போது என்னுடைய மனசிலிருந்து எழுதுவேன். அப்படி சில பாடல்களை மனசுக்கு ரொம்ப உணர்வாக இருக்கும்.
போடா போடி படத்துக்கு “ஐயோ மாட்டிக்கிட்டேன்” ஒரு பாடல் எழுதி இருந்தேன். அந்த பாடலை எழுதி முடித்து ஒரு வருடத்துக்கு அந்த பாடலை சூட் பண்ணவே இல்ல? அப்போ சிம்பு சார் என்கிட்ட “டேய் விக்கி வரிகளை பார்த்து எழுதுன்னு” கிண்டலா சொன்னாரு. அதற்குப் பிறகு “எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்னு” ஒரு பாடல் எழுதினேன்.
அந்த பாடலுக்குப் பிறகு எனக்கு படங்கள் அதிகமாக கிடைத்தது. என்னை தொடர்ந்து லிரிக்ஸ் எழுத வைக்கும் இயக்குனர்களுக்கு நன்றி. முதல் படத்தில் என்னுடைய பாடல் நல்லா இருக்கு டா உன்னால பாடல் எழுத முடியும்னு எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது சிம்பு சார்தான். அவர் சொன்ன வார்த்தை என்னை வெகுவாக மாற்றியது. இப்ப வரைக்கும் நான் அதை பாலோ பண்ணிக் கொண்டு இருக்கிறேன்.
முதல் படத்தில் அய்யோ மாட்டிக்கிச்சு என்று பாட்டு எழுதியதாலே அந்த பாடல் மாட்டிக்கிச்சு அதற்குப் பிறகு சிம்பு சார் சொன்னது போல நானும் என்னுடைய பாடல்களில் வரிகளை மாற்ற தொடங்கியதும் எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. சில வருடங்கள் கேப் ஆகி விட்டது. இப்போ மீண்டும் எனக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது என்று அந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications