சிவாஜியோடு அந்த படத்திற்குப் பிறகு கார்த்திக் நடிக்காத காரணமே இதுதான்.. விக்ரமன் உடைத்த ரகசியம்
சென்னை: இயக்குனர் விக்ரமன் ஒரு பேட்டியில் கார்த்திக் சிவாஜி கணேசன் உடன் "ராஜ மரியாதை" படத்திற்கு பிறகு அதிகமாக நடிக்காத காரணம் என்ன என்பது பற்றி பேசி இருக்கிறார். அதோடு தன்னுடைய உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தில் கார்த்திக் நடித்தது குறித்தும் விக்ரமன் பேசியிருக்கிறார்.
நடிகர் விக்ரமனின் திரைப்படமே குடும்பங்கள் ஒன்றாக பார்க்கும் திரைப்படமாக தான் இருக்கும். ஆரம்பத்தில் இவர் எடுத்த திரைப்படங்கள் இப்போது வரைக்கும் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது. விக்ரமன் இயக்கிய திரைப்படங்கள் அதிகமாகவே சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. இவருடைய திரைப்படத்தில் நடித்த நடிகர்களும் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விக்ரமன் தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் விக்ரமன் இயக்கிய உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற திரைப்படத்தில் கார்த்திக் நடித்தது பற்றி பேசி இருக்கிறார். அதில் விக்ரமன் பேசுகையில் கார்த்திக் இடம் நான் முதலில் கதையை சொன்ன போது அவர் என்னிடம் பாஸ் என்னால் காலையில் 7:00 மணிக்கு சூட்டிங் வர முடியாது.
என்னால் 11 மணிக்கு தான் சூட்டிங் வர முடியும் என்று சொல்லிவிட்டார். கார்த்திக் பற்றி பேசும்போது பலர் அவர் சூட்டிங் சரியாக வரமாட்டார் என்று சொல்வார்கள். ஆனால் அவர் என்னிடம் ஆரம்பத்திலேயே அவருடைய நிலைமையை சொல்லிவிட்டார். உடனே நான் சரி சார் அப்போ நான் உங்கள் வீட்டில் இருந்து ஒன்றரை மணி நேர டிராவலில் ஒரு வீடு பார்த்து இருக்கிறேன்.
அங்கு உங்களுக்கு 11 மணிக்கு வந்து விட முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டார். அப்போது தான் அவர் மேலும் ஒரு விஷயத்தை சொன்னார். என்னால் காலையில் சீக்கிரம் வர முடியாது அந்த ஒரு காரணத்திற்காகத்தான் நான் சிவாஜி சாருடன் அதிகமாக நடிக்க மாட்டேன். ராஜமரியாதை படத்திற்கு பிறகு அவருடைய படத்தில் நடிப்பதற்கே எனக்கு பயமாய் இருக்கிறது.
என்னால் காலையில் சரியாக அந்த நேரத்திற்கு போக முடியாது. ஆனால் இரவு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நான் ஷூட்டிங்கில் இருந்து விடுகிறேன் என்று சொல்லி இருந்தார். அதுபோல 11 மணிக்கு சூட்டிங் சரியாக வந்துவிடுவார். இரவு எத்தனை மணி வரைக்கும் என்றாலும் நடித்து முடித்துவிட்டு தான் போவார். கார்த்திக் வருவதற்கு முன்பு நான் மற்ற நடிகர்கள் வைத்து சூட்டிங் எடுத்து விடுவேன்.
அந்த திரைப்படத்தில் அஜித் சிறப்பு தோற்றத்தில் வருவதால் அவர் குறித்த காட்சிகள் தான் அதிகமாக காலையில் வைத்திருப்பேன் என்று உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பட அனுபவங்கள் குறித்து விக்ரமன் பேசி இருக்கிறார். இதுபோல இன்னொரு பேட்டியில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் ஜி எம் குமார் கார்த்திக் குறித்து பேசுகையில் பலர் கார்த்திக் பற்றி பல்வேறு விதமாக சொல்லுவார்கள்.
அவர் சூட்டிங் சரியாக வரமாட்டார் என்று... ஆனால் நான் உதவி இயக்குனராக இருந்த திரைப்படத்தில் கார்த்திக் கரெக்ட்டாக நாங்கள் சூட்டிங் ஸ்பாட்டிற்கு போவதற்கு முன்பே அங்கு வந்து விடுவார். நாங்கள் ஊட்டியில் சூட்டிங் வைத்திருந்தோம். அங்கு எங்களுக்கு முன்பே கார்த்திக் வந்து இருப்பார். அவர் குளிரெல்லாம் பார்க்காமல் அங்கு எங்களுக்காக காத்திருப்பார். அப்போ எனக்கு ஆச்சரியமாக இருக்கும். திரை துறையில் கார்த்திக் சரியாக சூட்டிங் வரவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று நானே நினைத்து இருக்கிறேன் என்று ஜிஎம் குமார் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications