100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம!
டெல்லி: டிஸ்னி கிட்ஸ் பேக் சேனலை உங்கள் வீட்டு குழந்தைகள் பார்க்கிறார்களா? இந்த விளம்பரத்தை பாருங்க.. நீங்களே அவர்களை பார்க்க வைப்பீர்கள்.
காட்சி இதுதான்... அம்மா சமையல் செய்துகிட்டே தனக்கு பிடித்த சீரியலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சின்ன பையன் டேபிளில் அமர்ந்து ஹோம் வொர்க் எழுதிக்கொண்டு இருக்கிறான். தியாவும் ஹோம்வொர்க் எழுதிக்கொண்டு இருக்கிறாள்

'தியா நேகாகிட்டே இருந்து உன் சயின்ஸ் புத்தகத்தை திருப்பி வாங்கிக்கிட்டியா" ன்னு அம்மா கேட்கறாங்க. ஊதா நிற ஸ்லீவ் லெஸ் கவுனில் இருக்கும் தியாவுக்கு அஞ்சு அல்லது 6 வயசுதாங்க இருக்கும். எழுதறதை நிறுத்திட்டு,
தலையை உயர்த்தி கண்ணை மேல் நோக்கிப் பார்த்து, 'அவ என்னை பத்தி என்னம்மா நினைச்சுகிட்டு இருக்கா? அவ என்னைத் தோக்கடிக்க பிளான் போடறாளா"ன்னு கீழே கண்களை திரும்பிப் பார்த்து உருட்டி, மிரட்டி கேட்கிறது.
அம்மா அதிர்ச்சியுடன் நம்ம என்ன கேட்டுட்டோம்னு புரியாமல் தியான்னு மெதுவா கூப்பிடறாங்க. ..
மீண்டும் அந்த குழந்தை சீரியலில் வரும் வில்லி போலவே, 'அம்மா..அவளுக்கு என்னை யாருன்னு தெரியாது. அவ என் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது" ன்னு மறுபடியும் குழந்தையின் ஆங்கார பேச்சைக் கேட்டு அம்மா அதிர்ந்து பார்க்கறாங்க..
தியா என்ன சொல்றேன்னு அம்மா அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கேட்க வர, அம்மாவை கையை உயர்த்தி போதும் என்பது போல சைகை காண்பித்து பாதியில் நிறுத்திவிட்டு, வேணாம் என்று தடுக்கிறாள்,கோப முகத்தோடு.
அந்த பொடிசு அத்துடன் விட்டதா? சின்ன ரெட்டை பின்னல் போட்ட தலையை ஆட்டி, 'பொறுத்திருந்து பாரும்மா,,,"ன்னு ஒரு டயலாக் விடுது. அந்த குட்டிப் பாப்பாவின் கண்ணைப் பார்த்தால் 100 ஜோதிகா, 200 கஜோல் தெரிகிறது.. அப்படி ஒரு க்யூட்டான பெர்பார்மென்ஸ்.
இப்போது பொதுவாக ஒரு குரல் பெற்றவர்களுக்கு என்று அந்த சேனலின் அட்வைர்டைசிங்கில் 'குழந்தைங்க பெரியவங்க பார்க்கற நிகழ்ச்சியை பார்த்து என்ன கத்துக்க போறாங்க? உங்க குழந்தைகளுக்காகவே டிஸ்னி கிட்ஸ் பேக்.டிஸ்னி தருகிறது. குழந்தைகளின் உலகைக் கொண்டாடும் என்றென்றும்" னு முடிச்சு இருக்காங்க.
பிறகு பார்த்தால் குழந்தைகளுடன் தாயும் சேர்ந்து டிஸ்னி கிட்ஸ் பேக் பார்த்து ரசித்து சிரித்து குதூகலிக்கிறார்கள்.உண்மையில் விளம்பரம் மட்டும் சூப்பர் இல்லைங்க, நிகழ்ச்சியும் சிரிக்க வச்சு மனதை லேசாக்குகிறதது. குழந்தைகள் உலகத்துக்கு நம்மையும் அழைத்துச் செல்கிறது!












Click it and Unblock the Notifications