லண்டனில் திவ்யா ஹேப்பி.. விரைவில் இணையும் விஜய் ஃபேமிலி! சங்கீதா விவகாரத்தில் ஜேசன் சஞ்சய் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சரான விஜய்யின் புகழுக்கு, இந்த விவாகரத்து வழக்கு ஒரு கெட்ட பெயராக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே சங்கீதா வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.. காவிரி நீர் பிரச்சனை போன்ற அரசியல் அழுத்தங்கள் மற்றும் குடும்பம் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் மீண்டும் பேசப்படுவதைத் தவிர்க்கவும், அதற்கு வலுவான ஒரு முற்றுப்புள்ளி வைக்கவுமே சங்கீதா இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார்" என்று மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன் கூறியிருக்கிறார்.

Media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் வெங்கடேசன், "ஜேசன் சஞ்சய் முன்னதாக அளித்த பேட்டியில், தங்களுக்கு பொறுப்பு அதிகம் என்று குறிப்பிட்டது அவருடைய தாய் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா ஆகியோரையும் உள்ளடக்கியதுதான். தாயின் சொல்லைத் தட்டாத பிள்ளைகளாக இருவரும் வளர்ந்துள்ளனர்.

Vijay Family

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, குடும்பத்தைக் கவனிக்காதவர் என்ற ரீதியில் முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களுக்கு சஞ்சயின் பேச்சும், இப்போது சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்ற முடிவும் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.

திவ்யா ஹேப்பி

சங்கீதா தற்போது லண்டனில் இருக்கிறார். அவர் விரைவில் சென்னை வர வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 25 அன்று விஜய் - சங்கீதா தம்பதியரின் 27-வது திருமண நாள் வரவுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் இணைந்து சுமுகமாக வாழ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. பெற்றோரின் இந்த முடிவால் அவர்களின் மகள் திவ்யா மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ஏஜிஎஸ் குடும்ப விழா ஒன்றில் விஜய்யும் திரிஷாவும் கலந்து கொண்டது மற்றும் பிறந்தநாளுக்குப் பழைய போட்டோக்களை ஷேர் செய்து, கேக் வெட்டியது போன்றவை தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கின. ஏஜிஎஸ் நிறுவனத்திற்குப் மிகப்பெரிய வெற்றிப் படமான பிகில் அமைந்ததால், அந்த விழாவுக்கு அழைக்கப்பட்ட 2 பேரும் நடிகர்களாகப் பங்கேற்றனர். எனவே அதை தவறான கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை.

விஜய் - சங்கீதா

சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட பிறந்தநாள் போட்டோ பழைய படம் மட்டுமே தவிர, அன்றைய நாளில் எடுக்கப்பட்டது அல்ல. அஜித் அவர்களின் தாயார் மறைவின் போது, துக்க நிகழ்வுகளுக்கு அழைப்பை எதிர்பார்க்காமல் செல்வதுதான் நட்பு மற்றும் மனிதநேயம்.. அதைத்தான் அவர்கள் இருவரும் செய்தனர்.

டிசம்பர் 2025ல் தாக்கல் செய்யப்பட்ட மனு பிப்ரவரியில் வெளியில் கசிந்தபோதிலும், சங்கீதாவோ அல்லது மகன் சஞ்சயோ எந்த மீடியாவுக்கும் பேட்டி அளித்து விஜய்க்கு எதிராகப் பேசவில்லை. சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தாலும், விஜய் தரப்பில் அதை எளிதாகக் கொடுத்துவிட்டுப் பிரிய விரும்பவில்லை. குடும்பத்தை பிரியக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருந்தார்.

சங்கீதாவுக்கு எதிரான கருத்துகள்

விஜய் ரசிகர்களின் பெயரில் இயங்கும் சில போலி சமூக வலைதளக் கணக்குகளே சங்கீதாவுக்கு எதிராகக் கொச்சையான கருத்துகளைப் பதிவிட்டன. விஜய் மீது அதிருப்தி கொண்ட ஒரு தரப்பினர் வேண்டுமென்றே சங்கீதாவுக்கு கோபத்தை மூட்டி, பிரச்சனையைப் பெரிதாக்க இப்படிச் செய்தனர்.

விஜய் தனி நபராகப் போராடி வெற்றி பெற்றிருந்தாலும், அவருக்கும் ஒரு குடும்ப நிம்மதி தேவை. விஜய்-சங்கீதா இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் மக்களின் விருப்பமாக உள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு குறுகிய காலத்தில் கட்சி ஆரம்பித்து முதலமைச்சரான விஜய்யின் புகழுக்கு, இந்த விவாகரத்து வழக்கு ஒரு கெட்ட பெயராக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே சங்கீதா வழக்கை வாபஸ் பெற்றார். காவிரி நீர் பிரச்சனை போன்ற அரசியல் அழுத்தங்கள் மற்றும் குடும்பம் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் மீண்டும் பேசப்படுவதைத் தவிர்க்கவும், அதற்கு வலுவான ஒரு முற்றுப்புள்ளி வைக்கவுமே சங்கீதா இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார்.

நீலாங்கரை இல்லம்

நீலாங்கரை இல்லத்தில் இவர்கள் இருவரும் குடும்பமாக மீண்டும் ஒன்றிணைந்து வாழக் கூடிய நல்ல செய்திகள் விரைவில் வரக்கூடும். ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா இருவருக்குமே திருமண வயது நெருங்கி வரும் சூழலில், பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் சிக்மா பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இவர்கள் குடும்பமாக இணைந்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+