1 மணி நேரத்திற்கு 8 லட்சம்.. அர்ணவ் லீலையை உடைத்த திவ்யா.. சீச்சீ இப்படியுமா பண்ணுவாங்க..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திவ்யா ஸ்ரீதர் பற்றி அவருடைய கணவர் அர்ணவ் வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட் ஆதாரத்திற்கு எதிராக திவ்யா புது ஆதாரம் வெளியிட்டு இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு அர்ணவ், திவ்யா சிங்கப்பூர் ரசிகர் ஒருவரோடு பேசிய ஸ்கிரீன் ஷாட் என்று ஒரு ஸ்கிரீன் ஷாட்டை மீடியா முன்பு காட்டி இருந்தார்.

அதில் உங்களை தனிமையில் சந்திப்பதற்கு எனக்கு ஒரு மணி நேரத்திற்கு 8 லட்சம் வேண்டும் என்று திவ்யா சொல்வது போல இருந்தது.

அது குறித்து திவ்யா இப்போது அது எடிட் செய்யப்பட்டது என்பதை ஆதாரத்தோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சமீபத்தில் சில மாதங்களாகவே இணையத்தை திறந்தாலே சின்னத்திரை தம்பதிகளில் குடும்ப பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு முன்பு திவ்யா ஸ்ரீதர் மற்றும் அவருடைய கணவர் அர்ணவ் குடும்பப் பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து அவர்களைப் போலவே சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் இருவருக்கும் இருக்கும் குடும்ப பிரச்சனைகளும் சமூக வலைதளத்தில் பூகம்பமாக வெடித்து கொண்டிருக்கிறது. ஒருவரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளையும் பல ஆதாரங்களையும் மீடியாக்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சில மாதங்களாக அமைதியாக இருந்த திவ்யாஸ்ரீதர் மற்றும் அர்ணவ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. அர்ணவ்வை பற்றி திவ்யா ஸ்ரீதர் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளையும், அர்ணவ்க்கு எதிரான பல ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து அர்ணவும் திவ்யா மட்டும் யோக்கியமா? அவரும் என்ன எல்லாம் பண்ணி இருக்காருன்னு தெரியுமா? என சில ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அவரும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திவ்யா ஸ்ரீதர் சிங்கப்பூரில் இருக்கும் ரசிகர் ஒருவருக்கு சாட் செய்த ஸ்கிரீன்ஷாட் என்று அர்ணவ் ஒரு ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு இருந்தார். அதில் திவ்யா போட்டோ வைத்து ஐடியில் இருந்து ரசிகர் என்று சொல்லப்பட்ட ஒரு ஐடிக்கு சாட்டிங் செய்யப்பட்டிருந்தது. அதில் நான் உங்களை ஒரு நாள் பார்க்க வேண்டும், அதற்கு ஒரு மணி நேரத்துக்கு நான் 4 லட்சம் தருகிறேன் என்று அந்த ரசிகர் ஐடியில் இருந்து திவ்யா ஐடிக்கு மெசேஜ் செய்யப்பட்டது போல இருந்தது.

அதற்கு திவ்யா ஸ்ரீதர் புகைப்படம் வைத்த ஐடியில் இருந்து 4 லட்சம் எனக்கு போதாது. ஒரு மணி நேரத்துக்கு 8 லட்சம் வேண்டும் என்று பேரம் பேசியது போன்று இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா ஸ்ரீதர் எடிட்டாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? நீங்க மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்த மாதிரி எடிட் பண்ணி வச்சிருக்கீங்க என்று சொல்வது போல அர்ணவை கலாய்த்து இருக்கிறார்.

Divya has released new evidence against Arnaav screenshot evidence

கூடவே அர்ணவ் தன்னைப் பற்றி வெளியிட்ட ஸ்கிரீன் ஷாட் பக்கத்திலே என்னாலும் உங்களைப் போல எடிட் செய்ய முடியும். ஆனால் நான் செய்ய மாட்டேன். ஆனால் நீங்கள் எடிட் செய்த பேஜூற்கும் என்னுடைய நிஜமான பேஜ்க்கும் உள்ள டிஃபரண்ட் பாருங்கள் என்று ஸ்கிரீன்ஷாட் வெளியிட்டு வைத்திருக்கிறார். கூடவே என்னுடைய நேம்க்கு கீழே இருக்கும் வார்த்தைகள் போல்டாக இருக்கும். ஆனால் நீங்கள் எடிட் செய்து வைத்திருப்பதில் டல்லாக இருக்கிறது. இதை கொஞ்சம் கவனிச்சு எடிட் செய்து இருக்கலாம் என்றும் கலாய்த்து இருக்கிறார்.

இந்த நிலையில் ரசிகர்கள் பலர் அது எப்படி திவ்யா ஸ்ரீதர் போன் அவர் கையில் இருக்கிறது. இருவரும் தனியாக இருக்கிறார். ஆனால் திவ்யா ஸ்ரீதர் போனில் இருந்து ஸ்கிரீன்ஷாட் அர்ணாவால் எப்படி எடுக்க முடியும்? இது நம்புவது போல இல்லையே என்றும் கூறி வருகிறார்கள். அதோடு திவ்யா வெளியிடும் ஆதாரங்கள் எல்லாம் எனக்கு பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பியது என்று கூறுகிறார். ஆனால் அர்ணவ் மட்டும் திவ்யா போனிலிருந்து எடுக்கப்பட்டது போன்ற ஒரு ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறார். இதில் எது உண்மை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+