இனி உதயசூரியனே போட்டியிடணும்.. SOFA துரோகிகள் அவங்க இடத்தை உணரட்டும்! திவ்யா சத்யராஜின் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் இடை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான வார்த்தை போரும் தொடங்கிவிடும். அதுவும் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக, திமுக, அதிமுக என முக்கியக் கட்சிகள் போட்டியிட்ட 2 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வெளியிட்டிருக்கும் பதிவு இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.

திவ்யா சத்யராஜ் பதிவு

"எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளிலும் இனி உதயசூரியனே போட்டியிட வேண்டும்" என்று தொடங்கியிருக்கும் அவர், திமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு, தங்களால்தான் திமுக வெற்றி பெற்றது என்று கூறிவந்த சோபா துரோகிகள் இனியாவது தங்களுடைய இடத்தை உணர வேண்டும் என்று விமர்சித்திருக்கிறார். இதோடு நிற்காமல், எங்கள் தலைவர் 5 நிமிடங்கள் பேசினாலே ஒரு லட்சம் வாக்குகள் விழும் என்று பெருமையாக பேசிய தவெக தரப்பையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், வெற்றி வித்தியாசம் பெரிய அளவில் இல்லை என்பதுதான் திவ்யா சத்யராஜின் விமர்சனத்துக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான விஷயம். "இனியாவது அவர்கள் வானத்திலிருந்து இறங்கி பூமிக்கு வருவார்கள் என நம்புவோம்" என்று பதிவிட்டிருக்கும் அவர், பதிவின் கடைசியில் "That was a good fight. திமுக மீண்டும் வெல்லும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Divya Sathyaraj dmk

திமுக வாங்கிய வாக்குகள்

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 66,841 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளைப் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 9,471. அதாவது தவெக வெற்றி பெற்றிருந்தாலும், திமுக வேட்பாளருக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

அதுபோல மதுராந்தகம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 70,916 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 50,774 வாக்குகளைப் பெற்றார். இங்கு வெற்றி வித்தியாசம் 19,421 வாக்குகள். அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் 45,338 வாக்குகளைப் பெற்றார்.

இந்த எண்ணிக்கைகளைப் பார்த்தால், இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் திமுகவுக்கும் குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக தாராபுரத்தில் வெற்றி வித்தியாசம் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டித்தான் திவ்யா சத்யராஜ் தவெக தரப்பின் தேர்தல் பேச்சுகளை விமர்சித்திருக்கிறார்.

தவெக - திமுக இடையே தொடரும் மோதல்

இந்த இடைத்தேர்தல் ஏன் இவ்வளவு கவனம் பெற்றது என்பதற்கும் பின்னணி இருக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால், ஆளுங்கட்சிக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இது பார்க்கப்பட்டது. மறுபக்கம, திமுகவும் தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ள தீவிரமாகப் பிரசாரம் செய்தது. அதிமுகவும் போட்டியில் இருந்தது. இதனால் இரு தொகுதிகளின் முடிவுகளும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

இந்த சூழலில் திவ்யா சத்யராஜ் தனது பதிவில் திமுகவுக்கு ஆதரவாகப் பேசியிருப்பதோடு, தவெக தரப்பின் பேச்சுகளையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, "5 நிமிடங்கள் பேசினாலே ஒரு லட்சம் வாக்குகள் விழும்" என்ற பேசியதையும் வீட்டை ஒதுங்க வைக்குதான் யாரு நினைவுபடுத்தி, உண்மையான தேர்தல் முடிவுகளை வைத்துப் பேச வேண்டும் என்பதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன; ஆனால் அதையொட்டிய அரசியல் விவாதம் இப்போதுதான் சூடுபிடிக்கிறது. தவெக வெற்றியைத் தனது தரப்பு சாதனையாகப் பார்க்கிறது திமுக ஆதரவாளர்கள் தங்கள் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளை கொண்டாடுகிறார்கள். அந்த விவாதத்தின் ஒரு பகுதியாகத்தான் திவ்யா சத்யராஜின் இந்த பதிவும் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+