தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் சிறப்பு நிகழ்ச்சிகள்.. முழு விபரம் நோட் பண்ணிக்கோங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான், தமிழகத்தில் இந்த பங்க்ஷனுக்கு பல மாதங்களாக பலர் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல இந்த ஃபங்ஷனை கொண்டாடுவதற்காக வெளியூரில் இருக்கும் நபர்கள் எல்லாம் இன்று சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.

diwali zee tamil

குடும்பத்தோடும் நண்பர்களோடும் தீபாவளி புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடுவார்கள். அது போல புது படங்களை தவறாமல் தியேட்டருக்கு சென்று பார்ப்பவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் குடும்பத்தோடு சிலர் தியேட்டருக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டில் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பது வழக்கம்.

வீட்டில் இருக்கும் மக்களுக்கு ஏதுவாக டிவிகளிலும் போட்டி போட்டு பல புது புது நிகழ்ச்சிகளும், சிறப்பு பட்டிமன்றங்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உட்பட்ட சேனல்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது என்று பார்க்கலாம்.

ஜீ தமிழ்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி ஸ்பெஷல் ஆக காலை 8 மணிக்கு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா திரைப்படம் காலை ஒன்பது முப்பது மணிக்கு, 12:30 மணிக்கு சரிகமப செலிப்ரேஷன் நிகழ்ச்சியும், மதியம் மூன்று மணிக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படமும், மாலை 6:00 மணிக்கு அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த டிமான்டி காலனி 2, இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் சீரியல் 9:30 மணிக்கு சந்தியா ராகம் 10 மணிக்கு நினைத்தாலே இனிக்கும் சீரியல் ஆகியவை ஒளிபரப்பாக உள்ளன.

சன் டிவி: சன் டிவியில் தீபாவளி பண்டிகை அன்று காலை 6:00 மணிக்கு பெரும்போர் கண்டிகை முருகன் தரிசனம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக காலை 7 மணிக்கு புனிதா மெகா தொடர் பிரபலங்கள் பங்கேற்கும் எங்கள் வீட்டு தீபாவளி நிகழ்ச்சி வரவுள்ளது. அடுத்ததாக எட்டு மணி முதல் பிளடி பக்கர் பட குழு பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி, பிறகு 9 மணிக்கு தலை தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்கள் வைத்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

காலை 10 மணிக்கு பட்டிமன்றம் 11 மணிக்கு அஜித்தின் விசுவாசம் படமும், பிற்பகல் 2 மணிக்கு மெகா தொடர் நாயகிகள் பங்கேற்கும் பட்டாசு பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. பிறகு மதியம் மூன்று மணிக்கு விஜய் நடித்த தெறி திரைப்படம் மாலை 6:30 மணிக்கு தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் இரவு 10 மணிக்கு காமெடிக்கு நாங்க கெரண்டி என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளன.

விஜய் டிவி: தீபாவளியன்று விஜய் டிவியில் காலை 8 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக இருக்கிறது. அடுத்ததாக காலை 9:30 மணிக்கு சிவகார்த்திகேயன் பங்கேற்கும் அமரன் தீபாவளி என்கிற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக மதியம் 12:30 மணிக்கு அனுமன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

பின்னர் மதியம் 2:30 மணிக்கு விஜய் டிவி காமெடி நட்சத்திரங்கள் பங்கு பெறும் எங்க ஏரியா உள்ளே வராத நிகழ்ச்சியும் அடுத்ததாக மாலை 4 மணிக்கு தமிழோடு விளையாடு என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் மாலை ஐந்து முப்பது மணிக்கு விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படமும் இரவு பிக் பாஸ் தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+