இன்ஸ்டாகிராமில் டிஜே பிளாக் செய்த காரியம்..ஜோடியா அந்த போட்டோ..! கவனிச்சீங்களா? இது அது தானா..?
சென்னை: விஜய் டிவியில் பிரபலமான டிஜே பிளாக் உண்மையாகவே பூஜாவை காதலிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.
காரணம் டிஜே பிளாக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை மாற்றி வைத்திருக்கிறார்.
அதுவும் டி ஜே பிளாக் மற்றும் பூஜா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை தான் வைத்திருக்கிறார். தற்போது இதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

விஜய் டிவி நிகழ்ச்சியில் பலர் பிரபலமடைந்து இருக்கின்றனர். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு பிரபலமான டிஜே பிளாக் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து கலந்து கொண்டே இருக்கிறார். இவருடைய ஆரம்ப கால வாழ்க்கை ரொம்பவே சோகமாக இருந்தாலும் இப்போது விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலமாக இவர் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார்.
ஆரம்பத்தில் இருந்து சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் பூஜாவிற்கு ஸ்பெஷல் ஆக இவர் பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு பூஜாவையும் வேற லெவலில் பிரபலமாக்கி விட்டார் பூஜாவின் பாடல்கள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது என்றாலும் பூஜா மற்றும் டிஜே பிளாக் காதல் பாடல்கள் மற்றும் சென்டிமென்ட் வசனங்களும் ரசிகர்களை கவர்ந்திருந்தது.
இதனாலேயே இவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களும் மளமளவென ஏறிக் கொண்டிருக்கின்றனர். பூஜாவால் டிஜே பிளாக் பிரபலம் அடைந்தாரா? அல்லது டி ஜே ப்ளாக்கால் பூஜா பிரபலம் அடைந்தாரா? என்று தற்போது சமூக வலைதளத்தில் பெரும் கருத்து மோதல்களை ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இருவருடைய ரசிகர்களும் அதிகரித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் தற்போது விஜய் டிவியில் டிஜே பிளாக்குக்கு அவார்டும் கொடுத்திருக்கிறார்கள். பூஜா மற்றும் டிஜே பிளாக் இருவருக்கும் விஜய் டிவி அவார்ட் நிகழ்ச்சியில் தூள் மொமண்ட் என்ற ஒரு அவார்ட் கொடுத்திருக்கின்றனர். அதற்கு காரணம் பூஜாவிற்கு பாட்டு போட்டதற்காக டிஜே பிளாக்கை பூஜாவின் அம்மா திட்டி இருப்பார். இந்த பிரமோ யாரும் எதிர்பார்க்காத வகையில் வைரல் ஆகி பிரபலமானது.

இதன் காரணமாக தான் டிஜே பிளாக் மற்றும் பூஜா இருவருக்கும் அவார்ட் கொடுத்திருக்கின்றனர். இந்த புகைப்படத்தை டிஜே பிளாக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் டிபியாக வைத்திருக்கிறார். பூஜா தன்னுடைய புகைப்படத்தை மட்டுமே வைத்திருக்கும் நிலையில் டிஜே பிளாக் இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அப்போ இவர்கள் இருவருக்கும் காதல் தானா அதனால் தான் இவர் இப்படி வெளிப்படையாக காட்டுகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
என்னதான் நாங்கள் இருவரும் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக ஜாலியாக அப்படி நடந்து கொள்கிறோம். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று டிஜே பிளாக் மற்றும் பூஜா இருவரும் சொல்லிக் கொண்டிருந்தாலும் இவர்கள் இருவருடைய ஜோடி ரசிகர்களின் மத்தியில் அதிகமாக கவர்ந்து வருகிறது. தற்போது உண்மையில் காதல் தானா? அல்லது இது நட்பு தானா? என்று கேள்விகளும் இவர்கள் சொல்லும் பதிலுக்கு குறைந்தபாடு இல்லை.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications