தீபிகா கல்யாணத்தில் இதை கவனிச்சீங்களா? நயன்தாரா போலவே..?இந்த ஸ்பெஷல் பிளான் வேற
சென்னை: கனா காணும் காலங்கள் சீரியல் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து தங்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ஜோடி வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் திருமணத்தைப் போலவே இவர்களுடைய திருமணமும் செய்து இருக்கின்றனர்.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு வெகு விமர்சனமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது. அதேபோலவே சின்னத்திரையில் இப்போது கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர்கள் நடத்தி இருக்கிறார்கள். அது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகா என்னுடைய வாழ்க்கைக்கும் நடிகை நயன்தாராவின் வாழ்க்கைக்கும் அதிகமான ஒற்றுமை இருக்கிறது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். காரணம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் காதல் ஏற்பட்டது நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது தான் என்று ஏற்கனவே பலருக்கும் தெரியும்.
அந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த," கண்ணான கண்ணே கலங்காதடி" என்னும் பாடல் கூட நடிகை நயன்தாராவுக்காக தான் விக்னேஷ் சிவன் அந்தப் பாடலை உருவாக்கி இருந்தார் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதுபோல தீபிகாவும் தன்னுடைய வாழ்க்கையில் சோகமாக இருந்த நேரத்தில் திடீரென்று ராஜா வெற்றி பிரபு தன்னிடம் காதலை சொல்லும் போது அருகில் இருந்து இந்தப் பாடல் தான் தீபிகாவின் காதில் வேகமாக ஒலித்துக் கொண்டே இருந்ததாம்.
அது குறித்து கண் கலங்க சமீபத்தில் இன்டர்வியூவில் தீபிகா கூறியிருந்தார். அதுபோல நடிகை நயன்தாராவின் திருமணத்தை போன்று தன்னுடைய திருமணத்திலும் உடை விஷயத்தில் தனி கவனத்தை தீபிகா செலுத்தி இருக்கிறார். நடிகை நயன்தாரா தன்னுடைய திருமணத்தில் சிவப்பு வண்ணத்தில் புடவை அணிந்து இருந்த நிலையில் அதேபோலவே மஞ்சள் வண்ணத்தில் புடவை அணிந்த தீபிகா நயன்தாராவை போன்று பிளவுஸ் தைத்திருந்தார்.
நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த அணிகலன்கள் போலவே தீபிகாவும் தன்னுடைய திருமணத்தில் அணிந்திருந்தார். நயன்தாரா பச்சை வண்ண நிறத்தில் நகைகளை அணிந்திருந்த நிலையில், அதே பச்சை வண்ண நிற நகைகளை சின்ன சைஸில் தீபிகாவும் அணிந்திருந்தார். தற்போது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய திருமண வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா பகிர்ந்து இருக்கிறார்.

அதில் "நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா ஒட்ட வைக்க நான் இருக்கேன். கிட்ட வச்சு பார்த்துக்கவே உயிர்வாழ்றேன்டி" என்கிற வரிகளை கேப்ஷன் ஆக பகிர்ந்து இருக்கிறார்.மேலும் என் இருண்ட நேரங்களில் என் கண்ணீரை முடிவில்லா புன்னகையாக மாற்றியமைத்து , அவர் எனக்கு வழிகாட்டும் ஒளியாக இருந்தார். நாங்கள் திருமணத்தில் கணவன் மனைவியாக நிற்கிறோம். நான் என் வாக்குறுதியை என்றென்றும் காப்பாற்றுவேன் என்று எனக்கு தெரியும்.
பெஸ்ட் பிரண்ட்ஸ் முதல் திருமணத்தில் ஒன்றாக நிற்பது வரை வாழ்க்கையில் ஒரு நம்ப முடியாத முடிவை எடுத்துள்ளோம். மேலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றதால் வாழ்க்கையில் மிகப்பெரிய பரிசை வென்றிருக்கிறோம் என்றும் எங்களுக்கு தெரியும். எங்களுடைய திருமண வீடியோவை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று உணர்வு பூர்வமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications