இரண்டு எழுத்து நடிகை, அந்த நடிகரை மணமுடிக்க முயன்று? அதுக்குள்ளே 3 முறை மாடிக்கு வந்த ஹீரோ: பிரபலம்
சென்னை: 90 கால கட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ஹீரா ராஜகோபால். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார்.. தமிழில் இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி உள்ளிட்டவை ஹீராவின் ஹிட் படங்கள்.. கடைசியாக 1999ம் ஆண்டு சுயம்வரம் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு எந்த படங்களும் அவர் நடிக்கவில்லை. இதற்கு என்ன காரணம்?
cineulagam என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "ஹீராவின் அப்பா ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தவர்.. இதனால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் செல்ல வேண்டியிருந்தது. அந்தவகையில், சென்னையிலும் தங்கியிருந்தனர்.. சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லுரியில் சைக்காலஜி படித்து பட்டம் பெற்றார் ஹீரா.. பிறகு மாடலிங் செய்தார்.

அவரது நிறைய மாடலிங் விளம்பரத்தை பார்த்த சுபாஷ் கய் என்ற மிகப்பெரிய டைரக்டர், நடிக்க விருப்பமா என்று கேட்டுள்ளார். அதற்கு ஹீரா மறுத்துவிட்டார்.. இதற்கு பிறகுதான், டைரக்டர் கதிர், ஹீராவை சந்தித்து, இதயம் படத்தின் கதையை சொல்லி, நடிக்க சம்மதம் பெற்றுள்ளார்.. அந்த படம் சூப்பர் சூப்பர் ஹிட்டானது..
வரிசையாக குவிந்த படங்கள்
அதற்கு பிறகு ஏராளமான படங்கள் ஹீராவுக்கு குவிந்தன.. மொத்தம் 49 படங்கள் நடித்துள்ளார்.. இப்போது ஹீராவுக்கு 49 வயதாகிறது. இவருக்கு திருமணம் நடந்ததாக கிசுகிசுக்கள் வந்துபோனது. ஆனால், இப்போதுவரை சிங்கிளாகவே இருக்கிறார்.
சரத்குமாருடன் 4 படங்கள் அதாவது முன்னறிவிப்பு, நம்ம அண்ணாச்சி, தசரதன், நம்ம அண்ணாச்சி என்று படங்களில் நடித்தார்.. ஹீரா அனைவரிடமும், ஜாலியாக, ஜோவியலாக பேசக்கூடியவர்.. சரத்குமார் ஹீராவை விழுந்து விழுந்து காதலித்தார்.. ஒருமுறை, மாடி வீடு ஒன்றில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.. சரத்குமார், ஹீரா உள்ளிட்டோர் அதில், நடித்து கொண்டிருந்தனர்.
இன்னுமா பேட்டி முடியல
அப்போது ஹீராவை நான் பேட்டி எடுக்க சென்றேன். அந்த வீட்டு மாடியில் உட்கார்ந்து ஹீராவை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த பேட்டி எடுத்து முடிப்பதற்குள், "இன்னும் பேட்டி முடியலியா?" என்று கேட்டு 3 முறை மாடிக்கு வந்துவிட்டார் சரத்குமார்.. ஹீரோவை விட்டுவிட்டு, ஹீரோயினை மட்டும் பேட்டி எடுக்கிறார்களே? என்றுகூட அவர் நினைத்திருக்கலாம்.
இதற்கு பிறகு ஹீரா சில நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க துவங்கினார். அப்போது சரத்குமார் சில கண்டிஷன்களை ஹீராவுக்கு விதித்ததாகவும், இதை ஹீரா விரும்பவில்லை என்றும் செய்திகள் கசிந்தன.
அஜித் சூப்பராக இங்கிலீஷ் பேசுவார்
அந்த நேரத்தில்தான், அஜித்துடன், ஹீரா நட்பானார்.. அஜித் சூப்பராக ஆங்கிலம் பேசுவார். இத்தனைக்கும் அஜித் 10வதுதான் படித்துள்ளார். அதேபோல, ஹீராவும் ஆங்கிலம் பேசுவார். இருவருமே ஆங்கிலத்தில் நிறைய பேசி கொண்டேயிருப்பார்கள். ஒருகட்டத்தில் காதலிக்கவும் துவங்கினர். இது அப்போது பத்திரிகைகளில் பேசுபொருளானது.
திருமணம் செய்யலாம் என்றுகூட இருவரும் முடிவெடுத்தனர். ஆனால், அஜித் அப்போதுதான், சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்தார் என்பதால், அவரது பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்கவில்லை என தெரிகிறது.
காணாமல் போன ஹீரா
எனவே, இந்த விஷயத்தை, ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் கொண்டு சென்றனர். அதற்கு பிறகு, அந்த தயாரிப்பாளர் ஹீராவை அழைத்து, அஜித்திடமிருந்து ஒதுங்கி செல்லுமாறு காட்டமாக சொல்லியிருக்கிறார். இதை ஹீரா எதிர்பார்க்கவில்லை. காதல் தோல்வியின் வடு ஹீராவுக்கு நிறையவே இருந்தது. அதற்கு பிறகு அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
"நான் விரும்பிய பெண் என்னை விரும்பியதில்லை, என்னை விரும்பிய பெண், என்னை அடைந்ததில்லை" என்று கண்ணதாசன் சொல்வார்.. அதுபோல, சரத் விரும்பிய ஹீரா சரத்துக்கு கிடைக்கவில்லை. ஹீரா விரும்பிய அஜித், ஹீராவுக்கு கிடைக்கவில்லை" என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications