Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தனுஷ்" திருமணத்தை விடுங்க! நெப்போலியன் திருமணத்தில் மணப்பெண் வைத்த பகீர் குற்றச்சாட்டு! சுவாரஸ்யம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியனின் மகன் தனுஷின் திருமண ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் நெப்போலியனுக்கு பெண் பார்க்க சென்ற போது நடந்த சுவாரஸ்ய தகவல்களை பிளாஷ்பேக்காக இப்போது பார்க்கலாம்.

நடிகர் நெப்போலியன் கிழக்கு சீமையிலே. சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பார். உயரமான நபர், சினிமாக்களில் கரடு முரடாக காட்சி தரும் ஹீரோவாக வலம் வந்தவர் நெப்போலியன். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

television nepolean entertainment


முற்றிலும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். அமைச்சர் கே.என். நேரு இவருக்கு மாமா முறையாகும். சிறு வயதிலேயே திமுகவின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட நெப்போலியன் திமுகவில் இணைந்தார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பெரம்பலூர் எம்பியாக நெப்போலியன் தேர்வானார். அப்போது மத்தியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.

இதையடுத்து இவர் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சராக பதவியேற்றார். இவர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக அறியப்படுகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரி திமுகவை விட்டு வெளியேற்றிய போது நெப்போலியனும் வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து அதே ஆண்டு பாஜக தலைவராக இருந்த அமித்ஷாவை நேரில் சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். ஜீவன் டெக்னாலஜீஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தனுஷ், குணால் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனுஷுக்கு 4 வயது இருக்கும் போது தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பாரம்பரிய முறைபடி நெல்லையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு நல்ல முன்னேற்றம் இருந்தது.

இந்த நிலையில்தான் நெல்லையில் தசை சிதைவு நோய்க்காக மருத்துவமனையை கட்டிய நெப்போலியன் அங்கு இலவசமாக வைத்தியம் பார்க்கும் வகையில் உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் மகன் தனுஷுக்காக அவர் அமெரிக்கா சென்றார். அவருக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வந்த நெப்போலியன், தற்போது தனது செல்ல மகனுக்கு திருமணம் செய்யவுள்ளார்.

இதற்காக நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. இதற்கு தனுஷால் விமானத்தில் வர முடியாது என்பதால் வீடியோ காலில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. இதற்காக நெப்போலியன் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நெப்போலியன் திருமணத்தின் போது நடந்த சுவாரஸ்ய விஷயங்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து நெப்போலியனே கடந்த 2022 ஆம் ஆண்டு பேட்டி அளித்திருந்தார். அவர் கூறுகையில் நான் சினிமாவில் ஓரளவுக்கு வளர்ந்ததும் எனக்கு பெண் பார்க்க தொடங்கினார். அப்போது என் மனைவி கல்லூரி படித்து கொண்டிருக்கும் போது அவரது ஜாதகத்தையும் என்னுடைய ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்தனர். 9 பொருத்தம் வந்தது.

பெண் பார்க்க நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது என் மனைவி யார் மாப்பிள்ளை என கேட்டார். அதற்கு என்னை காட்டிய உறவினர்கள், "இவர்தாம்மா! இவர் நடிகராக உள்ளார் , நெப்போலியன் இவரது பெயர்" என்றனர்.

உடனே எனது மனைவி , "இவரை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது இவர் எனக்கு வேண்டாம்" என்றார். எல்லோரும் "ஏன்" என கேட்டனர். அதற்கு என் மனைவி , இவர் எஜமான் படத்தில் வயிற்றில் உள்ள கருவையே கலைக்கும் அளவுக்கு கொடுமைக்காரர், இவருடன் எப்படி குடும்பம் நடத்துவது என கேட்டார். பின்னர் "அதெல்லாம் சினிமா, நிஜத்தில் நல்லவர், விசாரிக்காமல் பெண் கொடுப்பேனா" என எனது மாமனார், சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். இவ்வாறு நெப்போலியன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+