சொகுசு காரை வாங்கிய CWC சுனிதா கோகாய்.. விலை என்ன தெரியுமா.. hybrid கார்களின் சிறப்புகள் என்ன?
சென்னை: குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா கோகாய் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார். அதன் விலை என்ன தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி,தற்போது 4ஆவது சீசன் நடந்து வருகிறது. இந்த ஷோவில் கோமாளியாக வருபவர் சுனிதா. இவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவர் ஒரு டான்ஸர். விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இவர் குக் விக் கோமாளியில் கலந்து கொண்டார். தமிழில் கொஞ்சம் கொஞ்சம் பேசத் தெரியும் சுனிதா அவ்வப்போது தமிழில் பாடல்களை தவறாக பாடினாலும் அவர் பாடும் விதம் நன்றாக இருக்கும். ஆனால் தமிழ் தெரியாத அவர் தமிழ் பாட்டை பாடுவதற்கே அவரை பாராட்டலாம். அண்மையில் கூட மாங்குயிலே பூங்குயிலே பாடலை பாடியிருந்தார்.

அது போல் காய்கறிகளின் பெயர்களையும் அவர் சொல்லும் விதம் அழகாக இருக்கும். அதைவைத்தே அவரை மற்ற கோமாளிகள் ஓட்டுவர். முதல் சீசனில் இருந்து குக் வித் கோமாளியில் பங்கேற்று வரும் சுனிதாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஒரு முறை ஷகிலாவுடன் கோமாளியாக சென்ற சுனிதா, அவர் ஏதோ திட்டிவிட்டார் என்ற காரணத்துக்காக அழுதார். பின்னர் அவரை சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து அவர் வெறிக் கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரை ஃபைனலிஸ்ட்டாக அனுப்பியுள்ளார். இம்மியூனிட்டி பேண்ட் வாங்கி கொடுத்துள்ளார், எலிமினேஷனில் இருந்து காப்பாற்றியுள்ளார். இவர் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் இவருடைய அஸ்ஸாம் ஹோம் டூரை காட்டினார். அவ்வப்போது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.
இவர் தற்போது விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த லக்சூரி ஹைபிரிட் சொகுசு காரின் விலை ரூ 60 லட்சம் ஆகும். காருடன் நிற்கும் வீடியோவை சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த கார்களில் எரிபொருளையும் நிரப்பி கொள்ளலாம், பேட்டரி மூலமும் இயக்கிக் கொள்ளலாம். முழுவதும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்களை விட இந்த வகை கார்களின் எரிபொருள் செலவு குறைவுதான். புகையை குறைக்கும். ஸ்மூத்தாக செல்ல உதவும். ஆனால் இந்த கார்களின் விலை மற்ற கார்களை விட அதிகம்தான். ஆனால் இதன் பராமரிப்பு செலவும் மிச்சம். வேண்டாம் என்றால் அந்த காரை விற்பனை செய்தால் அதிக விலைக்கே போகும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications