திரிஷ்யம், மஞ்சுமெல் பாய்ஸ்னு மலையாள படங்களை தமிழர்கள் பார்க்க! விதை யார் போட்டது தெரியுமா?
சென்னை: ஜோசப், திரிஷ்யம், மஞ்சுமெல் பாய்ஸ் உள்ளிட்ட மலையாள படங்களை தமிழர்கள் ஓடி போய் பார்ப்பதற்கு விதையை போட்டது யார் தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் சாய் வித் சித்ராவில் எஸ்.என்.ஸ்வாமி பேட்டி காண நேர்ந்தது. எஸ்.என்.ஸ்வாமி பள்ளிக் காலங்களில் 'இருபதாம் நூற்றாண்டு' டப்பிங் படக் காலத்திலிருந்து மனதில் பதிந்த பெயர். காரணம் தமிழில் 'சாமி' என்றே எழுதுவோம். எஸ்.என்.ஸ்வாமியின் இருபதாம் நூற்றாண்டு படத்தின் திரைக்கதையும், 'சிபிஐ டைரிக் குறிப்பு' திரைக்கதையும் ரொம்ப பாப்புலர்.

அதிலும் அந்த சி.பி.ஐ டைரிக்குறிப்பு திரைக்கதை பாடமாகவே வைக்கலாம். சிவராம் நாராயணன் ஸ்வாமி என்கிற எஸ்.என்.ஸ்வாமிக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருந்தனர். அப்படி பரதன் எடுத்த, பிரதாப்-ஜரீனா நடித்த 'சாமரம்' என்கிற படத்தில் ப்ரடக்ஷன் இன்சார்ஜாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
இப்படி சில படங்களில் பணிபுரிந்த போது தயாரிப்பாளர் சாஜனோடு நட்பு ஏற்பட தன் முதல் கதையை சாஜனிடம் சொல்கிறார் ஸ்வாமி. அப்படி 'சக்கரை உம்மா' என்கிற அப்படம் வெளியாகி வெற்றி பெறுகிறது. இது தான் தமிழில் சிவாஜி, ஷாலினி நடிக்க 'பந்தம்' என்கிற படமாக வந்தது. இப்படி ஸாஃப்ட் குடும்பக் கதைகள் எழுதிய ஸ்வாமி முதன் முதலில் எழுதிய ஆக்ஷன் கதை தான் 'இருபதாம் நூற்றாண்டு'.
கல்கத்தா ஸண்டே மேகஸீனில் வந்த மும்பை கள்ளக்கடத்தல் மன்னன் ஹாஜி மஸ்தானை நடிகர் திலீப் குமாரும்-சாய்ரா பானுவும் காலில் விழுந்து வணங்கும் போட்டோவை பார்த்த ஸ்வாமிக்கு உடனே கள்ளக்கடத்தல் கதைக்கான நாட் கிடைக்க பிறந்தது இருபதாம் நூற்றாண்டு. எமர்ஜென்சிக்குப் பிறகு இந்திய மக்களுக்கு ஹீரோவாக காட்டப்பட்ட கள்ளக்கடத்தல்காரர்கள் ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார், யூசுப் படேல் போன்றவர்கள். இந்தப் போக்கு கூடாது என நினைத்த ஸ்வாமி அதையே திரைக்கதையாக்கினார்.
மோகன்லாலுக்கான ஆக்ஷன் படமென்பதால் மோகன்லாலிடம் கதை சொன்ன ஸ்வாமி நாயகன் பெயர் "ஸாகர் Alias ஜாக்கி' எனச் சொல்ல மோகன்லாலோ அதை 'ஸாகர் ஏலியாஸ் ஜாக்கி' என ஒரே பெயராக மாற்றி விட்டார். படம் க்ளிக்காகி பெரிய வெற்றி பெற்றது. இருபதாம் நூற்றாண்டு தமிழ்நாட்டில் டப் செய்யப்பட்டு வசூலைக் குவித்தது.
அடுத்த வருடமே ஒரு போலீஸ் கதையெழுதினார் ஸ்வாமி.
இன்வெஸ்டிகேஷன் திரைக்கதையான அக்கதை மம்முட்டிக்கு சொல்லப்பட்டது. மம்முட்டிக்கோ அப்போது தான் 'ஆவநாழி' என்கிற படம் மெகா ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்தது. அடுத்தடுத்து போலீஸ் கதையா என நினைத்த மம்முட்டி அதை சிபிஐ ஆபிஸர் பாத்திரமாக மாற்றினார். மேலும் 'அலி இம்ரான்' என்கிற அப்பாத்திரத்தை 'சேதுராமய்யர்' ஆக்கியது மம்முட்டியே.
ஆவநாழி பட நாயகன் இன்ஸ்பெக்டர் பல்ராம் கோபக்கார போலீஸ். சிகரெட், தண்ணி, விபச்சாரி என எல்லாவற்றிலும் ஊறியவன். அதனால் அதற்கு நேரெதிராக கொண்டு வர நினைத்தார் மம்முட்டி. அது வரை நாட்டில் சிபிஐ பற்றி அவ்வளவாக தெரியாது. கேரளத்தில் போலக்குளம் என்கிற இடத்தில் ஒரு ஹோட்டல் ஊழியர் மாடியிலிருந்து விழுந்து இறந்து விடுகிறார். சாகும் போது 'என்னை கொன்று விட்டார்கள்' என சொல்லி இறக்க லோக்கல் போலீஸோ தற்கொலை என கேஸை முடிக்க உறவினர்கள் விடாது கோர்ட்டின் கதவுகளைத் தட்ட சிபிஐ உள்ளே வருகிறது.
சிபிஐ இறந்த ஹோட்டல் ஊழியரின் உடலைப் போன்றே டம்மியைச் செய்து 'தள்ளி விட்டால் எப்படி விழும்?', 'தானாக தற்கொலைக்கு முயன்றால் எப்படி உடல் விழும்?' எனப் பெரும் முயற்சிகள் செய்து கடைசியில் அந்த ஹோட்டலின் முதலாளிக்கு தண்டனை வாங்கித் தருகிறது. இந்த சம்பவங்களையும், இன்வெஸ்டிகேட் ஆபிஸர் ராதா வினோத் ராஜுவையும் வைத்து ஸ்வாமி எழுதிய ஸ்க்ரிப்ட் 'சிபிஜ டைரிக்குறிப்பு' கேரளம் முழுக்க பிய்ச்சு உதறியது.
நேரடியாக மலையாளத்தில் சென்னையில் ரிலீசாகி ஒரு வருடம் ஓடியது அப்படம். அடுத்து அதே சேதராமய்யரை வைத்து 'ஜாக்ரதா' என்கிற இரண்டாம் பாகம் வந்தது. நேரறியான் சிபிஐ, சேதுராமய்யர் சிபிஐ, சிபிஐ5 என ஐந்து பாகங்கள் வந்தது அப்படம். சிபிஐ டைரிக்குறிப்பு என்கிற இன்வெஸ்டிகேட் த்ரில்லர் திரைக்கதை வென்றதால் அதே மாதிரிப் படங்கள் அடையாளம், முகம், உத்தரம் என பல படங்கள் வந்தன.
ஸ்வாமியே ஆகஸ்ட் 1, அடையாளம், மூணாம்முற, ஒரு அபிபாஷகன்ட கேஸ்டயரி, தமிழில் மௌனம் சம்மதம் என எழுதி தள்ளினார். சிபிஐ பட நாயகன் அலி இம்ரானின் பெயரை மூணாம்முற நாயகன் மோகன்லாலுக்கு வைத்தார் ஸ்வாமி. இவரின் Godfather படத்திலிருந்து எடுத்த 'நாடுவாழிகள்' அருமையான கதை. மோகன்லால், மது நடிப்பில் அப்படம் அழகான திரைக்கதை. தந்தையின் சாவுக்கு லால் பழிவாங்கும் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் ஸ்வாமி எழுதியது அப்போது பேசப்பட்ட விஷயம்.
மம்முட்டி திருடன், முரளி போலீஸ் என்கிற டாம் அண்ட் ஜெர்ரி கதையான 'களிக்களம்' ஸ்வாமியின் அசத்தலான திரைக்கதை. முரளியிடம் சவால் விட்டு மம்முட்டி திருடிவிட்டு அவர் முன்பே செல்வதெல்லாம் அட்டகாசமான காட்சிகள். ஜோஷியின் 'துருவம்' படம் மம்முட்டி-ஜெயராம்-விக்ரம் நடிக்க செமயான கதை. 'நரசிம்ம நாயக்கர்' என தமிழில் வந்ததாக ஞாபகம்.
மலையாளப் படங்கள் என்றால் செக்ஸ் படங்கள் என்றிருந்த தமிழ்நாட்டில் என்.என்.ஸ்வாமியின் படங்கள் தான் மலையாளப் படங்களுக்கு தனி அந்தஸ்தை தந்தன. சிபிஐ டைரி வெற்றிக்குப்பின் மம்முட்டியின் அய்யர் தி கிரேட், 1921, ஆகஸ்ட் 1, துருவம், கௌரவர் போன்ற படங்களும், மோகன்லாலின் தௌத்யம், மூணாம்முற, சித்ரம், வந்தனம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா போன்ற படங்கள் வெளிவந்து தமிழ்நாட்டில் வசூலைக் குவித்து தமிழ் தயாரிப்பாளர்களை பொறாமைப்பட வைத்தன.
அதே ஸ்வாமி இப்போது தன் பெயரை இயக்குனராக்கி Secret என்கிற படத்தை தன் மகனை இயக்க வைத்து வெளிவர இருக்கிறது. தான் இப்போது தான் இயக்குனராக முதன் முதலாக இயக்குவதாகச் சொன்னாலும் இயக்கியது தன் மகன் என்பதையும் ஒப்புக்கொள்ள தவறவில்லை. ஸ்வாமி ஒரு விந்தை மனிதர். வெள்ளந்தி மனம்... இன்று மலையாளப்படம் என்றால் ஒரு தமிழன் ஓடிச்சென்று பார்க்க ஆர்வம் காட்டுகிறானென்றால் விதை...அவர் போட்டது.... அந்த ஸ்வாமி போட்டது... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications