கயல் சீரியல் நடிகை பிக்பாஸ் வீட்டுக்கு போறாராமே! அப்போ சீரியல்ல நடிக்க மாட்டாரா?
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கயல் சீரியல் நடிகை கலந்து கொள்கிறார் என தகவல்கள் வருகின்றன.
பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட நபர்களை ஒரே வீட்டில் தங்க வைத்து 106 நாட்கள் கழித்து அந்த வீட்டில் யார் கடைசி வரை தங்குகிறார்களோ அவர்கள்தான் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை கடந்துள்ளது. இந்த 6ஆவது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் விக்ரமன், அசீம் ஆகியோரிடையே டைட்டில் வின்னருக்கான போட்டியில் அசீம் வென்றார்.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார், இதற்காக அவருக்கு ரூ.100 கோடி ஊதியமாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சீசனுக்கான புரமோஷன் ஷூட் ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில் இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்று யூகங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோவை பெண் டிரைவர் ஷர்மிளா கலந்து கொள்கிறார் என்கிறார்கள். அது போல் ரேகா நாயர், பாவனா, மாகாபா ஆனந்த், குக் வித் கோமாளி சரண் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள் என கூறப்படுகிறது.
அது போல் தொகுப்பாளர் ஜாக்குலின் உள்ளிட்ட சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் தற்போது கயல் சீரியல் நடிகை ஒருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. கயல் சீரியிலில் டாக்டர் கவுதமுக்கு உதவி செய்து கயலை பழிவாங்கும் நர்ஸ் வனிதா தான் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்கிறார்கள்.
இவரது உண்மையான பெயர் அன்னபூரணி. இவர் மதுரையை சேர்ந்தவர். இதுவரை பாசமலர், சொந்தம்பந்தம், மோகினி, தேவதை, மரகத வீணை, வள்ளி, கல்யாண வீடு உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது கயல் சீரியலிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆர்யா அந்த படத்தில் நடத்திய டுடோரியலில் பாடம் எடுக்க பார்வையில்லாத டீச்சராக அன்னபூரணி நடித்திருந்தார்.












Click it and Unblock the Notifications