ஒரே வீட்டில் 8 மனைவிகள்! மூலை முடுக்கெல்லாம் பேர குழந்தைகள்! குழம்பிய எம்.ஆர்.ராதா! நல்ல மனிதர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகவேள் எம்.ஆர்.ராதா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் 8 மனைவிகளுடன் குடும்பம் நடத்தியதாக அவரது பேரன் வாசு விக்ரம் தெரிவித்துள்ளார். மேலும் தனது சொத்துகளை 8 மனைவிகளுக்கும் சரிசமமாக எழுதி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகள்கள் ராதிகா, நிரோஷா, மகன்கள் எம்.ஆர்.ஆர். வாசு, ராதாரவி, ராஜு உள்ளிட்டோர் ஆவர். இவர்களில் ராஜுவை தவிர மற்றவர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். 10 வயது முதலே மேடை நாடகங்களில் எம்.ஆர்.ராதா நடித்துள்ளார்.

television mr radha

அந்த வகையில் ராதா 5000- க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளாராம். முதலில் சிறிய வேடங்களில் நடித்த அவர் ரத்தக் கண்ணீர் எனும் நாடகத்தில் முக்கிய வேடமேற்று நடித்தார். 1960 களில் அவருக்காகவே சிறப்பான ரோல்கள் எழுதப்படும்.

எம்ஜிஆர்- சிவாஜிக்கு வில்லன்

இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசனுக்கு வில்லனாகவே நடித்திருந்தார். அது போல் காமெடி ரோல்களிலும் நடித்திருந்தார். மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் பல ரோல்களில் நடித்திருந்தார்.

துப்பாக்கிச் சூடு

எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அவரது வயதை கருத்தில் கொண்டு அவருக்கு 4 ஆண்டுகள், 3 மாதங்கள் என சிறை தண்டனை குறைக்கப்பட்டது.

மஞ்சள் காமாலை

சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதா மஞ்சள் காமாலை வந்து அவருடைய திருச்சி வீட்டில் தனது 72ஆவது வயதில் காலமானார். இவருடைய இறுதி ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியது பெரிதும் பேசப்பட்டது.

3 மனைவி 12 குழந்தைகள்

இவருக்கு சரஸ்வதி, தனலட்சுமி, கீதா என 3 மனைவிகள் என்றும் 12 குழந்தைகள் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது தாத்தா குறித்து வாசுவின் மகன் வாசு விக்ரமிடம் கலாட்டா தமிழ் யூடியூப் சேனல் சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது.

தாத்தாவுக்கு பிடிக்கும்

அப்போது அவர் கூறுகையில், எனது தாத்தாவுக்கு, எனது தந்தையின் நடிப்பு பிடிக்கும். ஆனால் அவரை பாராட்டியதில்லை. தனது நாடகத்தின் மூலம் மட்டுமே அப்பாவை தாத்தா பாராட்டியுள்ளார். எனது பாட்டியைவிட எனது தாத்தாவைதான் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்.

தாத்தா இறந்ததும்

இதனால் தாத்தா இறந்ததும் அவரை வீட்டின் தோட்டத்திலேயே புதைத்தோம். தாத்தாவின் நினைவால் என் அப்பாவும் அங்கேயே ஒரு கட்டிலை போட்டு படுத்துக் கொண்டிருந்தார். தாத்தா செப்டம்பர் மாதம் இறந்தார். பின்னர் 2 மாதங்கள் தோட்டத்திலேயே படுத்திருந்த நிலையில் மழை வந்ததால் அவரை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்து வந்தனர்.

தேனாம்பேட்டை வீட்டில் 8 பேர்

எங்களது தேனாம்பேட்டை வீட்டில்தான் என் தாத்தா 8 மனைவிகளுடன் வாழ்ந்தார். ஆனால் எல்லா மனைவிகளுக்கும் தலா 100 பவுன் நகை, சரிசமமாக நிலம் என தாத்தா பிரித்து கொடுத்தார். என் தாத்தாவை நம்பி வந்தவர்கள் பெண்கள் கஷ்டப்பட்டதே இல்லை.

அடையாளம் தெரியாது

அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து வைத்தார். அது போல் பேரக் குழந்தைகளுடன் விளையாடுவார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்தால், எங்களை அவருக்கு இன்னார் மகன் என அடையாளம் தெரியாது. "டேய் நீ யாருடைய பையன் என கேட்பார். அப்பா பெயரையோ அம்மா பெயரையோ சொன்னதும் வாடா வாடா என கொஞ்சுவார். நிறைய பேரக் குழந்தைகள் இருந்ததால் அவருக்கு அடையாளம் தெரியாது. இவ்வாறு வாசு விக்ரம் தெரிவித்திருந்தார். அந்த காலத்தில் பலதார மணங்களுக்கு அனுமதி என்ற போதிலும் தான் திருமணம் செய்து கொண்ட பெண்கள், தனது காலத்திற்கு பிறகு குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படக் கூடாது என சரிசமமான சொத்தை பிரித்துக் கொடுத்தது எம்.ஆர்.ராதாவுக்கு பாராட்டுதலுக்குரியதாகும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+