Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சௌகார் ஜானகி பொளேர்.. "அவரை" பற்றி படம் எடுத்தால் நாறிடும்! கோடம்பாக்கத்தை நிமிர வைத்த சவுகார் ஜானகி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நபர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறோம் என்ற பெயரில், மக்கள் மனிதல் அன்பும், மரியாதையும் நிறைந்த அபிப்பிராயத்தை கெடுத்துவிட வேண்டாம் என்று பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், வாழ்க்கை வரலாறுகளை படமாக எடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் வெளியாகவே தெரிவித்திருக்கிறார்.

சௌகார் என்ற படத்தில் நடித்ததால், சௌகார் ஜானகி என்றே பெயர் நிலைத்துவிட்டது. எந்த பேட்டிகள் என்றாலும், அதில், இளமை காலத்தில் தன்னுடைய குடும்ப வறுமையை மறக்காமல் நினைவுகூர்பவர் சௌகார் ஜானகி.

television sowcar janaki biopic movies

சிம்பிளிசிட்டி: தான் நடிக்கும் காலத்திலிருந்தே, தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுக்கு நிறைய விஷயங்களை விட்டுக்கொடுத்தவர். படங்களில் இவர் அணியும் சேலைகள் எல்லாமே பெரும்பாலும் இவருடையதுதானாம்... என்ன சீன் எடுக்கிறார்களோ, அதற்கேற்றால் வீட்டிலிருந்தே கையோடு கொண்டு வந்துவிடுவாராம்.

கம்பெனி கார்கள் எத்தனையோ இருந்தாலும், தன் சொந்த காரிலேயே ஷூட்டிங் வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். பெட்ரோலுக்கு பணம் தந்தாலும்கூட, அதை வாங்கி கொள்ள மாட்டாராம்.. சம்பள விஷயத்திலும் கறார்தன்மை கிடையாது.. பேசியபடி பணம் சற்று குறைவாக கொடுத்தாலும், நம்ம ஜெய்சங்கரை போல, அதனாலென்ன, அடுத்த படத்தில் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிடுவாராம்.. ஒரு படம் சரியாக ஓடாவிட்டால், அந்த நஷ்ட பாரத்தை நானும் கொஞ்சம் ஏத்துக்கறேன் என்று தானாகவே முன்வந்து சொல்வாராம்..

யூடியூப் சேனல்: சாதாரண விஷயங்களில்கூட, மூத்த கலைஞர்கள், அந்த காலத்தில் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே சிலிர்க்கிறது.. இப்போது ஒரு யூடியூப் சேனலுக்கு, பிரபல நடிகர் ஒய்.ஜி மகேந்திரன், சௌகார் ஜானகியை பேட்டி எடுத்திருக்கிறார்.

அதில், மிகச்சிறந்த துணிச்சல் வாய்ந்த பெண்ணான உங்களது வாழ்க்கையை, படமாக எடுத்தால், அதில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்று ஒய்.ஜி. கேள்வி எழுப்பினார். அதற்கு சௌகார் அளித்த பதில் இதுதான்:

ஜெயலலிதா: "ஜெயலலிதாவை எடுத்துக் கொண்டால், பரதநாட்டியம் அறிந்தவர்.. மிகசிறந்த நடிகை, அரசியலில் சாதித்தவர்.. தமிழகத்தில் அவர் செய்த சாதனைகள் ஏராளமாக இருக்கிறது.. இதுபோன்று ஒவ்வொருவரிமும் உள்ள செயல்பாடுகளை நினைத்து நாம் பெருமைபட வேண்டுமே தவிர, அவர்களது நெகட்டிவ் பக்கங்களை சினிமாவில் காட்டுவதை நான் அடியோடு வெறுக்கிறேன்.. வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதை எதிர்க்கிறேன்.

ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல், 1950-ல் தெலுங்கு ஷுட்டிங்கின்போது நான் மயங்கி கீழே விழுந்துட்டேன்.. ஒன்றரை வயசில் 2 குழந்தைகளை வீட்டில் விட்டுட்டு ஷூட்டிங் வந்தேன். பசி மயக்கத்தில் விழுந்துட்டேன். இதைப்பார்த்து பதறிப்போன ஜெமினி கணேசன், இந்தம்மாவுக்கு எவ்ளோ சம்பளம் பேசியிருக்கீங்க" என்று பட நிறுவனத்திடம் கேட்டார்.

மிகச்சிறந்த நடிகை: வறுமையால் நடிக்க வந்திருக்காங்க.. 7500 ரூபாய் தந்திருக்கோம் என்று சொல்லி உள்ளார். உடனே ஜெமினி, "இப்பவே மொத்த பணத்தையும் தந்துடுங்க.. நல்ல முகம், நல்ல நடிப்பு.. வருங்காலத்தில் மிகச்சிறந்த நடிகையாக வருவார்.. ஆனால், உடம்பை பார்த்துக்க சொல்லுங்க, ரொம்ப பலவீனமாக இருக்கார்" என்றாராம்..

இப்படி கஷ்டப்பட்டு நாங்க நடிக்க வந்தோமே தவிர, கிலுகிலுப்புக்கு ஒன்னுமில்லை.. நல்லதையே சொல்லியே படம் எடுத்தாலும்கூட, "கதை வுடறாங்க" என்று சொல்லிவிடறாங்க. காரணம், அப்போதுள்ள கலாச்சாரம் வேற, அதை இப்போதுள்ளவர்கள் எப்படி எடுத்துப்பார்களோ தெரியாது.

பொய் படம்: சாவித்திரி பற்றி "மகாநதி" என்று பொய்யா படத்தை எடுத்து வெச்சிருக்காங்க.. அந்த படத்தை என்னை பார்க்க சொன்னாங்க, நான் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.. அந்தம்மாவின் நெகட்டிவ் பக்கத்தை காட்டி, படம் எடுத்து, பணம் சம்பாதிக்கிறது அவசியமா?

ஜெமினியால்தான், அந்தம்மா கெட்டுப்போயிட்டதாக எடுத்து வெச்சிருக்காங்க.. அவருக்கு சில பலவீனங்கள் இருந்திருக்கலாம்.. யாருக்குதான் பலவீனம் இல்லை? அரசியல்வாதிகளை பற்றி வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் நாறிடும்.. அதனால் நடிகர்கள் செய்யும் நல்ல விஷயத்தையும், அவர்களது சாதனைகளையும் நினைத்து பாராட்ட வேண்டும்..

அதைவிட்டுட்டு, படமாக எடுத்து, அவர்களின் மீது மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் அபிப்பிராயம், அன்பை குலைத்துவிடக்கூடாது.. மகாநதி படம் எடுத்தவர் தவறாக எடுத்துள்ளார். தப்பு தப்பாக சாவித்திரி பற்றி சொல்லி வைத்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார் சௌகார் ஜானகி.

ஜெமினியால்தான், அந்தம்மா வாழ்க்கை கெட்டுப்போயிட்டதாக எடுத்து வெச்சிருக்காங்க.. ஜெமினிக்கு சில பலவீனங்கள் இருந்திருக்கலாம்.. யாருக்குதான் பலவீனம் இல்லை? அரசியல்வாதிகளை பற்றி வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் நாறிடும்.. அதனால் மனிதர்கள் செய்யும் நல்ல விஷயத்தை யும், சாதனைகளையும் நினைத்து பாராட்ட வேண்டும்.. அதைவிட்டுட்டு, படமாக எடுத்து, அவர்களின் மீது மக்களுக்கு இருக்கும் அபிப்பிராயம், அன்பை குலைத்துவிடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார் சௌகார் ஜானகி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+