பாண்டியன் படத்தின் சண்டை காட்சியில் டேபிள், சேர் உடையக் கூடாதுனு ரஜினி சொல்வாரே ! அது ஏன் தெரியுமா?
சென்னை: பாண்டியன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு ரெஸ்டாரென்ட்டில் ரவுடிகளிடம் டேபிள், சேர் உடையாமல் சண்டை செய்ய வேண்டும் என கூறியதன் சுவாரஸ்ய பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ஏவிஎம்- எஸ்.பி.முத்துராமன்- ரஜினி எப்போதும் ஒரு வெற்றிக் கூட்டணி. ஆனால் தொடர்ந்து ஏவிஎம்மின் ரஜினி படங்களை முத்துராமனே இயக்கி வருவது மாற வேண்டும், புதிய இயக்குனர் இயக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஏவிஎம் சரவணன் மட்டும் அது வெற்றிக் கூட்டணி தானே முத்துராமனே இயக்கட்டும் என சப்போர்டிவ்வாக இருந்தார். ராஜா சின்ன ரோஜா படம் வெற்றி பெற்றாலும் ஒரே மாதிரி மேக்கிங்காக ரசிகர்களுக்கு சலிப்பு தெரிய ஆரம்பித்தது.
இதனாலேயே அடுத்த ரஜினி - ஏவிஎம் படத்தை வெளி இயக்குனரிடம் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதை எப்படி ஆஸ்தான இயக்குனர் முத்துராமனிடம் சொல்வது என தடுமாறிய சரவணனுக்கு ரஜினியே உதவ வந்தார். முத்துராமனிடம் தானே சொல்வதாக ரஜினி சொன்ன போது சரவணன் வேறு ஒரு உபாயம் சொன்னார்.
"நீங்கள் முத்துராமன் யூனிட்டுக்கு உதவ ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக சொன்னீர்களே. அதை முதலில் எடுப்போம். பின் நீங்கள் வேறு இயக்குனரோடு நடித்தாலும் முத்துராமனுக்கு ஆறுதலாக இருக்கும்" என சரவணன் சொன்ன ஐடியா ரஜினிக்கும் ஓகே. முத்துராமனுக்கும் சந்தோஷம். ஆம். தன்னை வைத்து 26 படங்கள் இயக்கிய முத்துராமன் யூனிட்டார்களுக்கு உதவும் விதமாக ரஜினி நடித்துத் தருவதாக ராஜா சின்ன ரோஜா படத்தில் நடிக்கும் போது வாக்கு கொடுத்திருந்தார்.
ஆனால் விதி வேறு மாதிரி விளையாடும் என மூவருமே நினைக்கவில்லை. அப்படி முத்துராமன் யூனிட்டைச் சேர்ந்த பல வருடங்களாக பணிபுரிந்த 15 பேருக்கும் உதவ ரஜினியே சந்தோஷமாக நடித்துக் கொடுத்த படம் "பாண்டியன்". முத்துராமனின் தாயார் விசாலம் பெயரில் ரஜினியே கம்பெனி தொடங்கச் செய்து, ஏவிஎம் சரவணனே முழு தயாரிப்பு வேலைகளை கவனித்துக் கொண்டார்.
கதைக்கு கன்னட பிரபாகர் நடித்த 'பாம்பே தாதா' என்கிற படத்தின் கதையை வாங்கினர். அதில் ஹீரோவாக நடித்த பிரபாகர் தமிழில் வில்லனாக நடித்தார். 'நண்பன்' என பெயரிடப்பட்டுத் தொடங்கப்பட்ட படம் பின் 'பாண்டியன்' எனப் பெயர் மாறியது. அக்காவாக கன்னடத்தில் லக்ஷ்மி செய்த ரோலுக்கு அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியோடு மகளாக நடித்த ஜெயசுதா நடித்தார்.
எஸ்.பி.முத்துராமனுக்காக குஷ்புவும் சம்பளத்தைக் குறைத்து நடித்துக் கொடுத்தார். வாணி விஸ்வநாத்தின் ரோலில் குஷ்பு நடித்தார். படத்தில் பாடல்களில் கார்த்திக் ராஜா இசையமைத்த "பாண்டியனின் ராஜ்ஜியத்தில்" பாடல் கேசட் வெளிவந்ததுமே ஹிட்டானது.
படத்தின் கதையில் முக்கிய அம்சம் குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் அதிகாரி பாண்டியன் குற்றவாளிகளோடு குற்றவாளியாக சேர்ந்து கண்டுபிடித்து கைது செய்வது. இந்தத் தீமை வைத்து பின்னாளில் எடுக்கப்பட்ட விஜய்யின் "போக்கிரி" அனைத்து மொழிகளிலும் பெரு வெற்றி பெற்றது.
சிறு பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டதால் படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் டேபிள், சேரை உடைக்காமல் சண்டை செய்ய வேண்டும் என ரஜினி அடியாட்களிடம் சொல்வது போல் எடுக்கப்பட்டது. டேபிள், சேர் உடையாத ரெஸ்ட்டாரண்ட் சண்டை.
பாண்டியன் கதை செறிவு குறைவாக இருந்ததால் படம் சுமார் வெற்றியே பெற்றது.
மேக்கிங்கில் செய்யப்பட்ட சமரசங்கள் காரணமாகக் கூட இருக்கலாம். மேலும் கூட வெளிவந்த தேவர் மகன், ராசுக்குட்டி, செந்தமிழ்பாட்டு, காவியத்தலைவன், திருமதி பழனிச்சாமி என கடும் போட்டிப் படங்களோடு பாண்டியன் மோத வேண்டிய கட்டாயம். அப்படியும் நூறு நாட்களை கஷ்டப்பட்டு தொட்டது. இருந்தாலும் பாண்டியன் ஒரு நல்ல விஷயத்துக்கான படம்.
பாண்டியன் படத்தில் கிடைத்த லாபத்தை 15 பங்கு போடப்பட்டு முத்துராமன் முதல் மேக்கப்மேன் முத்தப்பா வரை சரிசமமாக பிரித்து எடுத்துக் கொண்டனர். முத்துராமன் ரஜினிக்கு மனமார்ந்த நன்றியை செலுத்தினார். படம் ரிலீசாக பத்து நாட்கள் இருக்கும் போது விதி விளையாடியாது. எஸ்.பி.முத்துராமனின் மனைவி திடீரென இறந்துப்போனார்.
எல்லோருக்கும் அதிர்ச்சி. பட ரிலீசை தள்ளிப் போடலாம் என ரஜினி சொல்ல முத்துராமன் ஏற்கவில்லை. தான் தயாரித்த படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்தார் முத்துராமன்.
ஆனால் அதற்குப்பின் திரை உலகிலிருந்து விலகிவிட்டார். படம் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். பாண்டியனுக்குப் பிறகு அவர் 'தொட்டில் குழந்தை' என்கிற சமூகக் கருத்துப்படத்தை மட்டுமே இயக்கினார்.
ஓயாது பல வருடங்களாக உழைத்த முத்துராமன் பாண்டியன் ரிலீசுக்கு பிறகு மனைவியோடு வெளிநாடு சுற்றுலாவுக்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் விதி அவரை எல்லா விதத்திலும் ஒதுங்க வைத்து விட்டது. ஏவிஎம் விரும்பினாலும் முத்துராமன் இனி ரஜினியை இயக்கப் போவதில்லை. அப்படித்தான் ஏவிஎம்முக்குள் ஆர்.வி.உதயகுமார் நுழைந்தார். ரஜினியின் 'எஜமான்' பிறந்தது. எஸ்.பி.முத்துராமன் சாருக்கு ரஜினி ரசிகர்கள் என்றும் தங்கள் நன்றியை செலுத்துவார்கள்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications